சுஹாசினி
சுஹாசினி (பிறப்பு: ஆகத்து 15, 1961) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளும் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி ஆகிய திரைப்படங்கள் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திரா திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் 1988-ல் இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார்.
சுஹாசினி மணிரத்னம் | |
---|---|
![]() | |
பிறப்பு | 15 ஆகத்து 1961 பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், எழுதாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1980–தற்போது வரை |
பெற்றோர் | சாருஹாசன் |
வாழ்க்கைத் துணை | மணிரத்னம் (1988–தற்போது வரை) |
பிள்ளைகள் | நந்தன் |
வசனகர்த்தா
இயக்குநர் மணிரத்தினத்தின் ராவணன் படத்தில் வசனம் எழுதினார்.
நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்
- நெஞ்சத்தை கிள்ளாதே
- பாலைவனச்சோலை
- ஆகாய கங்கை
- உருவங்கள் மாறலாம்
- தாய் வீடு
- சிந்து பைரவி
- சிராவண் சந்தியா
- மனதில் உறுதி வேண்டும்
- தர்மத்தின் தலைவன்
- என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
- என் புருஷன் எனக்கு மட்டுந்தான்
- வசீகரா
- ஷாக்
- சத்தம் போடாதே
- ஏகன்
- பலம்
- ராக்கி
- அசல்
- ராவணா
- சீடன்
- தில்லாலங்கடி
- ஸ்ரவந்தி
இயக்கியுள்ள படம்
தேசிய விருது
சிந்து பைரவி திரைப்படத்தில் நடித்தமைக்கு 1986ல் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.