ஏகன் (திரைப்படம்)

ஏகன் ராஜூ சுந்தரத்தின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை ஜங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்தது. அஜித் குமார், நயன்தாரா, நவ்தீப், பியா, நாசர், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.

ஏகன்
இயக்கம்ராஜூ சுந்தரம்
கதைசரண்
யூகி சேது
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புஅஜித் குமார்
நயன்தாரா
ஜெயராம்
சுமன்
நவ்தீப்
பியா
நாசர்
ஒளிப்பதிவுஅர்ஜுன் ஜனா
படத்தொகுப்புஅந்தோனி
விநியோகம்ஜங்கரன் இண்டர்நேஷனல்
வெளியீடுஅக்டோபர் 25, 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

அஜீத் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரி. ஒன்மேன் ஆர்மி என்று தந்தை நாசரே வர்ணிக்கும் அளவுக்கு தனியாளாக அடித்துத் துவம்சம் செய்யும் போலீஸ் இவர். வில்லன் சுமனுடைய பழைய கூட்டாளி தேவன் போலீஸ் அப்ரூவராக மாறிவிட, அவரைக் கொன்று விடத் துடிக்கிறார் சுமன். இதனால் மறைந்து வாழ்கிறார் தேவன். அவருக்கு ஒரே ஒரு மகள் (பியா). ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கிறார்.

பியாவின் உயிருக்கு சுமனால் ஆபத்து வரும் எனக் கருதும் போலீஸ், அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை அஜீத்திடம் விடுகிறது. போலீஸ் என்று தெரியாமல் ஒரு மாணவரைப் போல மாறுவேடத்தில் போய் இதைச் செய்ய வேண்டும், அதே நேரம் பியாவின் தந்தை தேவனணையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த பணியில் அஜீத் எப்படி தன் திறமையைக் காட்டி ஏகனாக உலா வருகிறார் என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

நடிகர்கள்பாத்திரம்
அஜித் குமார்சிவா
நயன்தாராமல்லிகா
சுமன்ஜோன் சின்னப்பா
நவ்தீப்நரேன்
பியாபூஜா
நாசர்கார்த்திகேயன்

பாடல்

இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

பாடல்பாடியவர்கள்:
ஹேய் சாலாப்லேஸ், நரேஸ் ஐயர், அஸ்லம்
ஹேய் பேபிசங்கர் மகாதேவன்
யாகு யாகுசுவி, ஊஜேனி, சத்யன், ரன்ஜித், நவீன்
கிச்சு கிச்சுவசுந்திரா தாஸ், யுவன் ஷங்கர் ராஜா
ஓடும் வரையில்கே கே, சென்தி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.