யுவா

யுவா (இந்தி: युवा) திரைப்படம் தமிழில் வெளி வந்த ஆயுத எழுத்து திரைப்படத்தின் நேரடி இந்திப் பதிப்பாக 2004 ஆம் ஆண்டு வெளி வந்தது. அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், விவேக் ஓபராய், கரீனா கபூர், ராணி முகர்ஜி, ஈஷா தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரே நிகழ்வை மூன்று கதாபாத்திரங்களின் மூலம் மாற்றி மாற்றிச் சொல்லும் உத்தியை இதில் மணி ரத்தினம் கையாண்டிருந்தார்.

யுவா
Yuva
युवा
இயக்கம்மணி ரத்னம்
தயாரிப்புமணி ரத்னம்
ஜி. ஸ்ரீநிவாசன்
கதைமணி ரத்னம்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅஜய் தேவ்கன்
அபிஷேக் பச்சன்
விவேக் ஒபராய்
ராணி முகர்ஜி
கரீனா கபூர்
ஈஷா தியோல்
ஓம் பூரி
ஒளிப்பதிவுரவி கே. சந்திரன்
விநியோகம்மதராஸ் டாக்கீஸ்
வெளியீடுமே 14, 2004
ஓட்டம்160 நிமி
மொழிஇந்தி

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஒரு சாதாரண மாணவன், நாட்டுக்காக சக மாணவர்களைகளையும், நாட்டு மக்களையும் ஒருங்கிணைத்து, நாட்டை ஆட்சி செய்யும் வன்முறை அரசியலுக்கு எதிராக தேர்தலில் நின்று எப்படி சாதிக்கிறான் என்பதை மிகவும் இயல்பான அதே சமயம் சினிமாவுக்கு உரித்தான பாணியில் இயக்குனர் மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.

ஒரு சாலையில் ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒருவன் கல்கத்தாவின் சாலையில் தன் பைக்கை ஒட்டிக்கொண்டு வருகிறான். அதே நேரம் அவன் பின்னால் சற்று தள்ளி ஒரு காரில் இரண்டு பேர் தன் மனைவியிடம் சண்டையிட்டதைப் பற்றி பேசிக் கொண்டு வருகிறார்கள். அதே சாலையின் மறு புறம் ஒருவன், ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். திடீரென்று காரில் வந்த இருவரில் ஒருவன் துப்பாக்கியால் பைக் ஒட்டிக்கொண்டிருதவனை சுடுகிறான். குண்டடி பட்டவுடன் பைக் ஓட்டிக் கொண்டிருந்தவன் சாலையோரத்தில் பெண்ணிடம் காதலைச் சொல்லிக்கொண்டிருந்தவனைத் தாண்டிப் போய் விழுகிறான். இந்த இடத்திலிருந்து கதை சுட்டவனிடம் திரும்புகிறது. எதற்காக அவன் சுடுகிறான் என்பது திருப்புக் காட்சியாக விரிகிறது.

பிறகு கதை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் இடம் வரை வந்து மீண்டும் சுடப்பட்டவனிடமிருந்து, அவன் எதற்காக சுடப்பட்டான் என்கிற காட்சிகள் திருப்புக் காட்சியாக விரிகிறது.

அதே போல் கதை மீண்டும் சம்பவம் நிகழும் இடம் வரை திரும்பி, சாலையோரத்தில் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவன் இந்தக் கதையில் இதற்கு முன் எப்படி இருந்தான், சம்பவத்துக்குப் பிறகு என்னவாகிறான்? அவன் காதலை அவன் தோழி ஏற்றுக்கொண்டாளா? சுட்டவனும், சுடப்பட்டவனும் என்னவாகிறார்கள்? இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை மீதிக் கதை விளக்குகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.