ஈஷா தியோல்

ஈஷா தியோல் (Esha Deol) (பிறப்பு: நவம்பர் 2, 1981) இந்தியத் திரைப்படநடிகை ஆவார். இவர் பெரும்பானமையாக இந்தி மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார். இவர் தர்மேந்திரா மற்றும் ஹேம மாலினி தம்பதியின் மகள் ஆவார். இவரின் முதல் திரைப்படம் 2002 ஆம் ஆண்டில் வெளியான கொய் மேரே தில் சே பூச்சே ஆகும். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்கும் பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன. குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.[1]

2003 ஆம் அண்டில் வெளிவந்த லாக் கார்கில் திரைப்படம் , 2004 இல் யுவா மற்றும் தூம் மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இன்சான், கால், மெயின் ஐசா ஹி ஹூன், தஸ், நோ என்ட்ரி, ஷாதி நம்பர் 1,மற்றும் கேஷ் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியில் வெற்றி பெற்றது. மேலும் இந்தத் திரைப்படங்களில் இவரின் நடிப்பிற்குப் பாராட்டுகளும் கிடைத்தது.

அஜய் தேவ்கான், அக்‌ஷய் குமார், சல்மான் கான்,மற்றும் சூர்யா (நடிகர்) போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

ஈஷா தியோல் நவம்பர் 2, 1981 இல் மும்பை, மகாராட்டிரத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் தர்மேந்திரா - ஹேம மாலினி ஆகிய இருவரும் புகழ்பெற்ற நடிகர்கள் ஆவர். இவரின் தந்தை பஞ்சாபையும் , தாய் தமிழ்நாட்டையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவருக்கு அஹானா தியோல் எனும் இளைய சகோதரி உள்ளார். மேலும் பாபி தியோல், சன்னி தியோல், விஜய்தா, மற்றும் அஜீதா ஆகிய சகோதர, சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இவரின் தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள். இவர் மும்பையிலுள்ள மிதிபாய் கல்லூரியில் பயின்றார். அங்குதான் ஆடைகலன் வடிவமைப்பாளராக ஆக வேண்டுமென விரும்பினார். மும்பையிலுள்ள ரபிந்திரா அதிபுத்தி எனும் நடனகுருவிடம் ஒடிசி நடனம் பயின்றார். இவரின் தாய் ஹேமமாலினியிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார்.

தொழில் வாழ்க்கை

ஈஷா தியோலும் தனது பெற்றோர்களைப் போலவே நடிகர் ஆக வேண்டும் எனத் தீர்மானித்து இரண்டாம் தலைமுறை நடிகையாக ஆனார். இவரது திரைப்பயணம், வினய் சுக்லாவின் கொய் மேரே தில் சே பூச்சே எனும் பாலிவுட் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் அஃப்தாப் சிவதானியுடன் இணைந்து நடித்ததன் மூலம் துவங்கியது. இதில் சஞ்சய் கபூர், செய பாதுரி பச்சன், அனுபம் கெர் ஆகியோர் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் தோல்விப் படமாக அமைந்தது. தியோலின் நடிப்பிற்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் பல விருதுகளும் கிடைத்தன. குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான 48 வது பிலிம்பேர் விருது கிடைத்தது. [2][3]

தமிழ்த் திரைப்ப்டம்

இவரின் முதல் தமிழ்த் திரைப்படம் மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து (திரைப்படம்) ஆகும். இதில் சூர்யா (நடிகர்), மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், திரிசா, மற்றும் ஈஷா தியோல் ஆகியோர் நடித்தனர். மேலும் பாரதிராஜா முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். இந்தத் திரைப்படத்தில் பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியராக நடித்தார். இதன் இந்திப் பதிப்பான யுவாவிலும் இதே கதாப்பத்திரத்தில் அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்திருப்பார்.[4] இதில் இவரின் நடிப்பு புதுமையானதாகவும் , சிறப்பானதாக இருந்ததாகவும் ரெடிஃப் வலைத்தளம் பாராட்டு தெரிவித்தது. [5]

சான்றுகள்

  1. "Filmfare Awards: Winners of 2002". India Times. http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms. பார்த்த நாள்: 2012-11-06.
  2. "Filmfare Awards: Winners of 2002". India Times. http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms. பார்த்த நாள்: 2012-11-06.
  3. "2003 Filmfare Awards". Internet Movie Database (21 February 2003). பார்த்த நாள் 2012-11-06.
  4. "'I am today's woman -- very independent, very bindaas'". ரெடிஃப் (19 May 2004). பார்த்த நாள் 2012-12-17.
  5. "Movie Review: Aayitha Ezhuthu". Moviebuzz. Sify.com. பார்த்த நாள் 2012-12-17.

வெளியிணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஈஷா தியோல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.