சீதளநாதர்

சீதளநாதர் (Shitalanatha), சமண சமயத்தின் 10வது தீர்த்தங்கரர் ஆவார்.[1] சமண சமய சாத்திரங்களின் படி, இச்வாகு குல மன்னர் திருதராதருக்கும் - இராணி சுனந்தாவிற்கு அயோத்தியில் பிறந்த சீதளநாதர், கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த சீலராக விளங்கியவர். சீதளநாதர் 100,000 பருவங்கள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.

சீதளநாதர்
சீதளநாதரின் சிலை, பக்பிரா, புருலியா மாவட்டம்
அதிபதி10வது தீர்த்தங்கரர்

தங்க நிற மேனியுடைய சீதளநாதரின் சின்னம் கற்பக மரம் ஆகும்.

கோயில்கள்

மேற்கு வங்காள மாநிலத்தின் புருலியா மாவட்டத்தில் பக்பீரா (PAKBIRRA) எனுமிடத்தில் பண்டைய மூன்று சமணக் கோயில்களில், சீதளநாதர், ரிசபநாதர், சம்பவநாதர், பத்மபிரபா, சந்திரபிரபா, சாந்திநாதர், பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் போன்ற எட்டு தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகள் உள்ளது. மேலும் தீர்த்தங்கரர்களின் அருகில் அவரவர் வாகனங்கள், காவல் தேவதைகளான அம்பிகை, பத்மாவதி, குபேரன் போன்ற யட்சர்கள், யட்சினிகளின் சிற்பங்களும் உள்ளது.[2]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Tukol 1980, பக். 31.
  2. PAKBIRRA

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.