அஜிதநாதர்
அஜிதநாதர் (Ajitnatha), சமண சமயத்தின் இரண்டாவது தீர்த்தங்கரர் எனக் கருதப்படுபவர்.[1] சமண சமய சாத்திரங்களின்படி கர்மத்தளையிலிருந்து விடுபட்ட சித்த புருஷர் ஆவார். இச்வாகு குல அயோத்தி மன்னர் ஜிதசத்ருவுக்கும் அரசி விஜயாவுக்கும் பிறந்தவர்.[1]
அஜிதநாதர் | |
---|---|
சமண சமய இரண்டாம் தீர்த்தங்கரர் | |
![]() அஜிதநாதர், 12ஆம் நூற்றாண்டு பளிங்கு சிற்பம், தெற்கு இராஜஸ்தான் | |
விவரம் | |
வாழ்ந்த காலம் | 5 x 10^223 ஆண்டுகளுக்கு முன் |
குடும்பம் | |
தந்தை | ஜிதாசத்ரு |
தாய் | விஜயாதேவி |
அரச குலம் | இச்வாகு |
இடங்கள் | |
பிறப்பு | அயோத்தி |
வீடுபேறு | சம்மெட் சிகார் |
பண்புகள் | |
நிறம் | பொன்னிறம் |
வாகனம் | யானை |
உயரம் | 1,350 மீட்டர் |
இறக்கும் போது வயது | 7,200,000 |
உதவியாள தேவதைகள் | |
யட்சன் | மகாயட்சன் |
யட்சினி | அஜிதா |
வேத காலத்தில் அஜிதநாதர்
யசூர் வேதத்தில் அஜிதநாதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பொருள் தெளிவின்றி காணப்படுகிறது. சமண மரபின்படி, அஜிதநாதரின் இளைய சகோதரன் சகரன் (பகீரதனின் தந்தை) என்பவன் அயோத்தியை ஆண்டான் என்பதை, இந்து சமய புராண, இதிகாசங்களிலும் காணப்படுகிறது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka. p.31
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.