குந்துநாதர்
குந்துநாதர் (Kunthunath) சமண சமயத்தின் 17வது தீர்த்தங்கரர் ஆவார்.[1] [2][3] கருமத் தளைகளிலிருந்து விடுபட்ட குந்துநாதர் சித்த புருசராக விளங்கியவர்.
குந்துநாதர் | |
---|---|
![]() 15ம் நூற்றாண்டின் குந்துநாதரின் சிற்பம், தேசிய அருங்காட்சியகம், புது டில்லி | |
அதிபதி | 17வது தீர்த்தங்கரர் |
குந்துநாதர், இச்வாகு குல மன்னர் சூரியதேவருக்கும் - இராணி ஸ்ரீதேவிக்கும், அஸ்தினாபுரத்தில் பிறந்தவர். [2] [4][3]
குந்து என்பதற்கு வட மொழியில் நவரத்தினங்களின் குவியல் எனப் பொருளாகும். [4] 100,000 ஆண்டுகள் வாழ்ந்த குந்துநாதர் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[4]
தங்க நிறம் கொண்ட குந்துநாதரின் வாகனம் ஆடு ஆகும்.[5]
குந்துநாதரின் கோயில்கள்
- திகம்பரர் சமணக் கோயில், அஸ்தினாபுரம், உத்தரப் பிரதேசம்
- கனிஜிட்டி சமணக் கோயில், ஹம்பி
- ஜெய்சல்மேர் கோட்டையில் உள்ள சமணக் கோயில்கள்
- சமணக் கோயில் அஸ்தினாபுரம்
- குந்துநாதர் கோயில், மதுபன், ஜோர்ஹத், அசாம்
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
- Kunthunath
- Forlong 1897, பக். 14.
- Tukol 1980, பக். 31.
- von Glasenapp 1999, பக். 308.
- Brief details of Tirthankaras
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.