புஷ்பதந்தர்

சமண சமயத்தின் 9வது தீர்த்தங்கரான புஷ்பதந்தர் (Puṣpadanta), சுவிதிநாதர் [1] என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். சமண சமயச் சாத்திரங்களின் படி, புஷ்பதந்தர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராகி அருகதர் நிலைக்கு உயர்ந்தவர்.

புஷ்பதந்தர்
சிகார்ஜியில் உள்ள புஷ்பதந்தரின் சிற்பம்
அதிபதி9வது தீர்த்தங்கரர்
வேறு பெயர்கள்சுவிதிநாதர்

புஷ்பதந்தர், சுக்ரீவன் - சுப்பிரியா இணையருக்கு, தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோரியாவில் உள்ள குக்குந்தூ எனுமிடத்தில் பிறந்தவர்.

புஷ்பதந்தர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தவர்.[2]

வெண்நிறம் கொண்ட புஷ்பதந்தரின் வாகனம் முதலை ஆகும். பூ பவழமல்லி, காவல் தேவதைகள் அஜிதன் எனும் யட்சனும்; மகாகாளி எனும் யட்சினி ஆவார்கள்.[3]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Tukol 1980, பக். 31.
  2. Puṣpadanta or Suvidhi
  3. Tandon 2002, பக். 44.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.