சாகித்திய அகாதமி விருது
சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
சாகித்திய அகாதமி விருது | ||
![]() | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | இலக்கியம் (தனிநபர்) | |
நிறுவியது | 1954 | |
முதலில் வழங்கப்பட்டது | 1955 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2017 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 58 | |
வழங்கப்பட்டது | சாகித்திய அகாதமி, இந்திய அரசு | |
விவரம் | இந்தியாவின் இலக்கிய விருது | |
முதல் வெற்றியாளர்(கள்) | ரா. பி. சேதுப்பிள்ளை | |
கடைசி வெற்றியாளர்(கள்) | எஸ்.ராமகிருஷ்ணன் |
சாகித்ய அகாதமி
சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.
இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது சாகித்ய அகாதமி.
சாகித்திய அகாதமி உறுப்பினராக இருந்தோர்
சாகித்ய அகாதமி கழகத்தில் அனைத்து மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. தமிழுக்கான இடத்தில் உறுப்பினராக இருந்தோர்:
- நெ. து. சுந்தரவடிவேலு
- தி.மு.கவின் நாவலர் நெடுஞ்செழியன் (அப்போதைய சென்னை மாநிலக் கல்வி அமைச்சர்) [1]
...
பரிசுத் தொகை
சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40, 000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில் ரூபாய் 50, 000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.
விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் முறை
இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றி தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.
முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தேர்வுக்கு செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.[2] தமிழ் மொழியில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாக ஜெயமோகன் கருதுகிறார்[3]
சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள்
மேற்கோள்கள்
- நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 662
- சாகித்திய அகாதமி விருது தேர்ந்தெடுக்கும் முறை அலுவல்முறை இணையதளத்திலிருந்து
- 2009 ஆண்டு விருது குறித்த செயமோகன் பதிவு