சாகித்திய அகாதமி

சாகித்திய அகாதமி (Sahitya Akademi) (साहित्य अकादमी), இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கான அமைப்பாகும்.[1]இந்நிறுவனம் இந்திய மொழிகளின் இலக்கியமும், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசின் ஆதரவுடன், தன்னாட்சி அமைப்பாக 12 மார்ச் 1954 அன்று, இரவீந்திர பவன், தில்லியில் துவக்கப்பட்டது. வெளிநாட்டு மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த இலக்கியப் படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, இந்திய மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு ஆண்டு தோறும் ரொக்கப் பரிசுடன் கூடிய விருது அளித்து ஊக்கப்படுத்துவது, சிறுவர் இலக்கியங்களையும், சிறுபான்மையினர் பேசும் மொழிகளை ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்து வருகிறது சாகித்ய அகாதமி நிறுவனம். சாகித்திய அகாதமியின் மண்டல அலுவலகங்கள், பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் அகர்தலாவில் அமைந்துள்ளன.

சாகித்திய அகாதமி
சுருக்கம்SA
உருவாக்கம்மார்ச்சு 12, 1954 (1954-03-12)
தலைமையகம்இரவீரந்திர பவன், தில்லி
அமைவிடம்
சேவைப் பகுதிஇந்தியா
தலைவர்
டாக்டர். விஸ்வநாத் பிரசாத் திவாரி
வெளியீடுஇந்திய இலக்கிய இதழ் (மாதமிரு முறை)
தாய் அமைப்புஇந்தியக் கலாச்சார அமைச்சகம், இந்திய அரசு
வலைத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
சாகித்திய அகாதமி, லலித் கலா அகாதமி மற்றும் சங்கீத நாடக அகாதமி அமைப்புகள் அமைந்த இரவீந்திர பவன் வளாகம், தில்லி

வழங்கும் விருதுகள்

சாகித்திய அகாதமி விருது

இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்கு தற்போது சாகித்திய அகாதமி விருதுடன் ரூபாய் ஒரு இலட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. [2]

பாஷா சம்மான் விருது

இந்தியாவில் அருகி வரும் சிறுபான்மையினர் பேசும் மொழிகளை அழிவின் விளிம்பிலிருந்து காக்க, 1996ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையின மக்கள் பேசும் மொழிகளில் படைக்கப்படும் நூல்களுக்கும், மொழி மற்றும் இலக்கியப் பணிகளுக்கும் ஆண்டு தோறும் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுடன் கூடிய பாஷா சம்மான் விருது வழங்கப்படுகிறது.[3]

தமிழ்நாட்டில் வாழும் சௌராட்டிரர் இன மக்கள் பேசும் சௌராஷ்டிர மொழி மற்றும் இலக்கிய பணியை பாராட்டி, எழுத்தாளர்களான கே. ஆர். சேதுராமன் மற்றும் தாடா. சுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் கூட்டாக பாஷா சம்மான் விருது 2006ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. [4] [5]

மொழி பெயர்ப்பு நூலுக்கான விருது

1989ஆம் ஆண்டு முதல் அங்கீகரிகரிப்பட்ட 24 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு முதல் ரொக்கப்பரிசு ரூபாய் 50, 000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. [6] [7] 2014 ஆண்டு முடிய 25 தமிழக எழுத்தாளர்கள், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளனர்.

சிறுவர் இலக்கிய விருது (BAL SAHITYA PURASKAR)

சிறுவர்களுக்கான சிறுகதைகள், கதைகள், புதினங்கள் மற்றும் கவிதைகளுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது 2010ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. [8] இந்திய மொழிகளில் வெளி்யாகும் சிறந்த சிறுவர் நூல்களுக்கு 2010ஆண்டு முதல் 2015முடிய, சிறுவர் இலக்கியத்திற்கான விருதினனை இது வரை ஆறு எழுத்தாளர்கள் வென்றுள்ளனர். [9]

இளைஞர் (இலக்கிய) விருது (YUVA PURASKAR)

சனவரி மாதம் முதல் நாளன்று 35 வயதும் அதற்குட்பட்ட இளைஞர்களின் சிறந்த மொழி பெயர்ப்பு நூல்கள், கதைகள், புதினங்கள் மற்றும் கவிதைகள் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு 2011ஆம் ஆண்டு முதல் யுவ புரஸ்கார் விருது ரொக்கத்துடன் வழங்கப்படுகிறது. [10] தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டு முடிய ஐந்து இளைஞர்கள் யுவ புரஸ்கார் விருதை வென்றுள்ளனர். [11]

நூலகம்

இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில் உள்ள இலக்கியம் மற்றும் இலக்கியம் சார்ந்த நூல்களுடன் மிகப் பெரிய நூலகம் கொண்டுள்ளது. மேலும் பன்னாட்டு இலக்கிய நூல்களையும் கொண்டுள்ளது. [12]

வெளியீடுகள்

மிகச் சிறந்த இலக்கியம், புதினங்கள், கவிதை நூல்களை அனைத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.