குறுவை (நெல் பருவம்)

இலையுதிர் காலமான குறுவைப் பருவம் (Kuruvai Season) வேளாண் வழக்கு குறுவைப் பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். சூன் - சூலை (தமிழ்: ஆனி - ஆடி) மாதங்களில் துவங்கும் இப்பருவம், செப்டம்பர் - அக்டோபர் (தமிழ்: புரட்டாசி - ஐப்பசி) மாதங்களில் முடிவடைகிறது.[1]

120 நாட்களைக் கொண்ட இந்த குறுவைப் பருவம், குறுகியகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.

பருவ அட்டவணை

விதைக்கும் மாதம்கால அளவு (நாட்கள்)தகுந்த இரகங்கள்பயிரிடும் இடங்கள்
மே - சூன்120 நாட்கள்குறுகிய கால இரகங்கள்திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்கள்.[2]
  • குறுவை எனும் இந்த பருவத்தில், தமிழகத்தின் மாவட்ட வாரியாக பயிரிடப்படும் நெல் இரகங்கள்.[3]
மாவட்டங்கள்விதைப்பு மாதம்இரகங்கள்
தஞ்சை, நாகை, திருவாரூர்சூன் - சூலை எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, ஏ டி டீ - 48, ஐ ஆர் - 50, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.
திருச்சிராப்பள்ளிசூன் - சூலை எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.
பெரம்பலூர், கரூர், அரியலூர்சூன் - சூலை எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஐ ஆர் - 50, கோ - 47, (கரூர் தவிர) ஏ டி டீ (ஆர்) - 47, மற்றும் கோ ஆர் எச் - 3.
புதுக்கோட்டைசூன் - சூலை எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, கோ - 47 மற்றும் கோ ஆர் எச் - 3.

இவற்றையும் காண்க

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.