எகிப்தின் பொருளாதாரம்
எகிப்தின் பொருளாதாரம் தென் ஆபிரிக்கா, நைஜீரியா நாடுகளை அடுத்து ஆபிரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும். வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இது ஜமால் அப்துல் நாசிர் ஆட்சிக் காலத்தில் மிகவும் மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாரமாக விளங்கியது. இறக்குமதியைக் குறைப்பதை தனது குவியமாகக் கொண்டியங்கியது. 1990களில் அனைத்துலக நாணய நிதியத்தின் உதவியுடனும் பெரும் வெளிநாட்டு கடன்களாலும் இதன் பொருளாதார வளர்ச்சி அமைந்திருந்தது. 2000 முதல் நிதி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன; பணக்கொள்கைகள், வரிவிதிப்பு,தனியார் மயமாக்கல்,புதிய தொழில் தொடங்குதல் ஆகியவற்றை கைக்கொண்டு சந்தைப் பொருளாதாரத்தை தழுவியது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது. இச்செய்கைகளால் பொருளாதாரமும் ஆண்டு வளர்ச்சி வீதமும் வலிவடைந்தன; 2004க்கும் 2009க்கும் இடையே சராசரியாக ஆண்டுக்கு 8% வளர்ச்சி கண்டது. ஆனால் இந்த வளர்ச்சியை அரசு சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடையுமாறும் பரந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்தவில்லை. வேலையின்மையும் பொருத்தமற்ற வேலையும் கூடின. திசம்பர் 2010இல் $36 பில்லியனாக இருந்த எகிப்தின் வெளிச்செலாவணி சேமிப்பு 2011 புரட்சிக்குப் பின்னர் சனவரி 2012இல் $16.3 பில்லியனாகக் குறைந்தது. தவிரவும் பெப்ரவரி 2012இல் இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு எகிப்தின் கடன் நம்பகத்தன்மையை B+ இலிருந்து B ஆகக் குறைத்தது.[13] 40% மக்கள்தொகை வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதால் அரசியல் நிலையற்றத்தன்மை நிலவுகின்றது; இது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக விளங்குகின்றது.
எகிப்து[1] பொருளாதாரம் | |
---|---|
![]() | |
நாணயம் | எகிப்திய பவுண்டு (EGP) |
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | உலக வணிக அமைப்பு |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | $369.267 பில்லியன் (2015 மதிப்.)[2] |
மொ.உ.உ வளர்ச்சி | 3% (2015 மதிப்.) |
நபர்வரி மொ.உ.உ | $11,073 (கொ.ஆ.ச) (2014 மதிப்.)[3] |
துறைவாரியாக மொ.உ.உ | வேளாண்மை: 14.5%; தொழில்: 37.5%; சேவைகள்: 48% (2013 மதிப்.) |
பணவீக்கம் (நு.வி.கு) | 9% (2013 மதிப்.) |
கினி குறியீடு | 30.8 (2008) |
தொழிலாளர் எண்ணிக்கை | 27.8 மில்லியன் (ஆகத்து 2015)[4] |
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | வேளாண்மை (29%), தொழில் (24%), சேவைகள் (47%) (2011 மதிப்.) |
முக்கிய தொழில்துறை | துணி, உணவு பதப்படுத்துதல், சுற்றுலா, வேதிப்பொருள், மருந்து, நீரகக்கரிமம், கட்டுமானம், சீமைக்காரை, உலோகங்கள், இலகு தயாரிப்பாளர்கள் |
தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 110th[5] |
வெளிக்கூறுகள் | |
ஏற்றுமதி | $27.15 பில்லியன் (71வது; 2014 மதிப்.)[6] |
ஏற்றுமதிப் பொருட்கள் | பாறை எண்ணெய்யும் பாறை எண்ணெய் பொருட்களும், பருத்தி, துணி, உலோகப் பொருட்கள், வேதிப்பொருள், வேளாண்மை பொருட்கள் |
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
இறக்குமதி | $55.26 பில்லியன் (50வது; 2014 மதிப்.)[8] |
இறக்குமதிப் பொருட்கள் | எந்திரத் தொகுதியும் கருவிகளும், உணவுகள், வேதிப்பொருள், மரப்பொருட்கள், எரிமங்கள் |
முக்கிய இறக்குமதி உறவுகள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
வெளிநாட்டு நேரடி முதலீடு | $73.8 பில்லியன் (31 திசம்பர் 2012 மதிப்.) |
மொத்த வெளிக்கடன் | $39.9 பில்லியன் (6 சூலை 2015)[10] |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | மொ.உ.உவில் 93.8% (2014 மதிப்.) |
வருவாய் | $65.48 பில்லியன் (2014 மதிப்.) |
செலவினங்கள் | $99.14 பில்லியன் (2014 மதிப்.) |
கடன் மதிப்பீடு | B- (Domestic) B- (Foreign) B- (T&C Assessment) (இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு)[11] |
அந்நியச் செலாவணி கையிருப்பு | US$20.08 billion (30 June 2015)[12] |
Main data source: CIA World Fact Book ' |
எகிப்தின் பொருளாதாரம் நைல் ஆற்றை ஒட்டியே அமைந்துள்ளது. எகிப்தின் முக்கியத் துறைகளாக எண்ணெய், இயற்கை எரிவளி, உலோகங்கள், சுற்றுலா, வேளாண்மை உள்ளன.
மேற்சான்றுகள்
- "The World Factbook". பார்த்த நாள் 4 March 2015.
- "Report for Selected Countries and Subjects". பார்த்த நாள் 4 March 2015.
- "Egypt". International Monetary Fund. பார்த்த நாள் 11 January 2015.
- "Egyptian unemployment eases to 12.7 pct in Q2" (in Eng). 18 August 2015. http://english.ahram.org.eg/NewsContent/3/12/138121/Business/Economy/Egyptian-unemployment-eases-to--pct-in-Q.aspx.
- "Doing Business in Egypt 2012". உலக வங்கி. பார்த்த நாள் 21 November 2011.
- "2012 Exports figures of Egypt". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2012 est). பார்த்த நாள் 2013-06-14.
- "Export Partners of Egypt". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2013). பார்த்த நாள் 2015-04-14.
- "2012 Imports figures of Egypt". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2012 est). பார்த்த நாள் 2013-06-14.
- "Import Partners of Egypt". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2013). பார்த்த நாள் 2015-04-14.
- "Egypt's domestic debt surpasses two trillion pounds -c. bank" (in Eng). 6 July 2015. http://www.reuters.com/article/2015/07/06/egypt-debt-idUSL8N0ZM2QD20150706.
- "Sovereigns rating list". Standard & Poor's. பார்த்த நாள் 18 June 2013.
- "$520m increase in Egypt’s foreign exchange reserves in June" (in Eng). 7 July 2015. http://www.dailynewsegypt.com/2015/07/07/520m-increase-in-egypts-foreign-exchange-reserves-in-june-cbe/.
- S&P Downgrades Egypt's Credit Rating - http://english.nuqudy.com/General_Overview/North_Africa/SP_Downgrades_Egypt-883