ஜமால் அப்துல் நாசிர்

ஜமால் அப்துந் நாசிர் உசைன் (அரபு மொழி: جمال عبد الناصر حسين) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜமால் அப்துந் நாசிர் (Gamal Abdel Nasser, சனவரி 15, 1918 - செப்டெம்பர் 28, 1970)[1] எகிப்தின் இரண்டாவது சனாதிபதியாக இருந்தார். 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டில் இறக்கும்வரை அவர் இப்பதவியை வகித்தார். எகிப்து நாட்டுப் படையில் கேணல் தரத்தில் இருந்த அப்துந் நாசிர், பின்னர் நாட்டின் முதலாவது சனாதிபதியாக இருந்த முகம்மது நஜீப்புடன் இணைந்து, 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற எகிப்தியப் புரட்சிக்குத் தலைமை தாங்கினார். இப் புரட்சி மூலம் எகிப்து, சூடான் முடியாட்சி கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் எகிப்தில் நவீனமயமாக்கத்துக்கான பாதை திறந்துவிடப்பட்டது. குறுகிய காலமே நிலைத்திருந்த எகிப்து-சிரியா இணைப்பு உட்படப் பேரரேபியத் தேசியவாதம் பெருமளவு வளர்ச்சி பெற்றதுடன் எகிப்தில் சோசலிசச் சீர்திருத்தங்களும் இடம்பெற்றன.

ஜமால் அப்துந் நாசிர்
جمال عبد الناصر
2வது எகிப்திய ஜனாதிபதி
பதவியில்
23 சூன் 1956  28 செப்டம்பர் 1970
பிரதமர்
துணை குடியரசுத் தலைவர்
முன்னவர் முகமது நஜீப்
பின்வந்தவர் அன்வர் சதாத்
எகிப்திய பிரதம மந்திரி
பதவியில்
19 சூன் 1967  28 செப்டம்பர் 1970
குடியரசுத் தலைவர் அவரே
முன்னவர் முகமது செத்கீ சுலேமான்
பின்வந்தவர் மஹ்மூத் ஃபௌசி
பதவியில்
18 ஏப்ரல் 1954  29 செப்டம்பர் 1962
குடியரசுத் தலைவர் முகமது நஜீப்
தானேதான்
முன்னவர் முகமது நஜீப்
பின்வந்தவர் அலி சாப்ரி
பதவியில்
25 பிப்ரவரி 1954  8 மார்ச் 1954
குடியரசுத் தலைவர் முகமது நஜீப்
முன்னவர் முகமது நஜீப்
பின்வந்தவர் முகமது நஜீப்
எகிப்தியத் துணைப் பிரதமர்
பதவியில்
8 மார்ச் 1954  18 ஏப்ரல் 1954
பிரதமர் முகமது நஜீப்
முன்னவர் ஜமால் சலேம்
பின்வந்தவர் ஜமால் சலேம்
பதவியில்
18 சூன் 1953  25 பிப்ரவரி 1954
பிரதமர் முகமது நஜீப்
முன்னவர் சுலேமான் ஹஃபீசு
பின்வந்தவர் ஜமால் சலேம்
உள்துறை அமைச்சர்
பதவியில்
18 சூன் 1953  25 பிப்ரவரி 1954
பிரதமர் முகமது நஜீப்
முன்னவர் சுலேமான் ஹஃபீசு
பின்வந்தவர் சக்காரியா மொயித்தீன்
புரட்சி ஆணை மன்றத் அவை தலைவர்
பதவியில்
14 நவம்பர் 1954  23 சூன் 1956
முன்னவர் முகமது நஜீப்
பின்வந்தவர் பதவி அகற்றப்பட்டது
கூட்டுசேரா இயக்கத்தின் பொதுச் செயலாளர்
பதவியில்
5 அக்டோபர் 1964  8 செப்டம்பர் 1970
முன்னவர் ஜோசிப் புரோஸ் டீடோ
பின்வந்தவர் கென்னத் கவுண்டா
ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் அவைத்தலைவர்
பதவியில்
17 சூலை 1964  21 அக்டோபர் 1965
முன்னவர் முதலாம் ஹைலி செலாசி
பின்வந்தவர் குவாமே நிக்ரூமா
தனிநபர் தகவல்
பிறப்பு ஜமால் அப்துந் நாசிர் உஸேன்
சனவரி 15, 1918(1918-01-15)
அலெக்சாந்திரியா, எகிப்து
இறப்பு 28 செப்டம்பர் 1970(1970-09-28) (அகவை 52)
கெய்ரோ, ஐக்கிய அரபு குடியரசு
தேசியம் எகிப்தியர்
அரசியல் கட்சி அரபு சோசியலிச ஐக்கியம்
வாழ்க்கை துணைவர்(கள்) தகியா காசெம்
பிள்ளைகள் ஹோதா
மோனா
காலித்
அப்துல் ஹமீத்
அப்துல் ஹக்கீம்
தொழில் இராணுவ அதிகாரி
சமயம் சுன்னி இசுலாம்
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு எகிப்து
கிளை எகிப்திய இராணுவம்
பணி ஆண்டுகள் 1938–1952
தர வரிசை கர்னல்
சமர்கள்/போர்கள் 1948 அரபு - இசுரேல் போர்

நாசிர் தற்கால அராபிய வரலாற்றிலும், 20 ஆம் நூற்றாண்டில் அரசியலிலும் ஒரு முக்கியமான தலைவராகக் கருதப்பட்டார். இவரது தலைமையின் கீழ் எகிப்து சூயெசுக் கால்வாயை நாட்டுடைமை ஆக்கியதுடன், அரபு உலகிலும், ஆப்பிரிக்காவிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான பங்களிப்பையும் செய்தது. சூயெசு நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அரபு உலகம் முழுவதிலும் நாசிர் ஒரு வீரராகக் கருதப்பட்டார். அனைத்துலக அணிசேரா இயக்கத்தைத் தொடங்குவதில் நாசிரின் பங்கு முக்கியமானது. நாசிர், அவரது தேசியவாதக் கொள்கைக்காகவும், நாசிரியம் என அழைக்கப்பட்ட இவரது வகைப் பேரரேபியவாதத்துக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர். இவரது இக்கொள்கைக்கு 1950 களிலும், 1960 களிலும், அரபு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது. இசுரேலுடனான ஆறு நாள் போரில் அரேபியப் படைகள் தோல்வியடைந்தது, அரபுலகின் தலைவர் என்ற இவரது நிலைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.[2]

மேற்கோள்கள்

  1. Vatikiotis, Panayiotis J. (1978). Nasser and His Generation. London: Croom Helm. பக். 23–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85664-433-7.
  2. Rasler, Karen; Thompson, William R.; Ganguly, Sumit (2013). How Rivalries End. Philadelphia: University of Pennsylvania Press. பக். 38–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-4498-4.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.