வங்காளதேச பொருளாதாரம்
வங்காளதேசம் அடுத்த பதினொரு வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள வளரும் நாடு ஆகும். அண்மைக்கால கருத்துக்கணிப்பில் வளர்ந்து வரும் நாடுகளிலேயே முதலாளித்துவ கருத்துக்களுக்கு ஆதரவான மக்கள்தொகை உள்ள இரண்டாவது நாடாக கண்டறியப்பட்டுள்ளது.[11]
வங்காளதேசப் பொருளாதாரம் | |
---|---|
![]() | |
நாணயம் | வங்காளதேச இட்டாக்கா (৳) (BDT) |
நிதி ஆண்டு | 1 சூலை - 30 சூன் |
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | தெற்காசிய கட்டற்ற வணிகப் பகுதி (SAFTA), (BIMSTEC) |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | $572 பில்லியன் (கொ.ஆ.ச) 33வது; (2015 மதிப்.)[1] $209 பில்லியன் (பெயரளவில்) 44வது; (2015 மதிப்.)[2] |
மொ.உ.உ வளர்ச்சி | 7.20% (2015-16 மதிப்.) [3] |
நபர்வரி மொ.உ.உ | $3,019 (கொ.ஆ.ச); (2014 மதிப்.)[4]$1,314 (பெநரளவில்; 2015)[4] |
துறைவாரியாக மொ.உ.உ | வேளாண்மை: 19%; தொழில்: 30%; சேவைகள்: 51% (2013 மதிப்.) |
பணவீக்கம் (நு.வி.கு) | 6.2% (2012)[5] |
கினி குறியீடு | 32.1 (2007) |
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | வேளாண்மை: 40%, தொழில்: 30%, சேவைகள்: 30% (2013) |
வேலையின்மை | 4.5%[6] (2013 மதிப்.) |
முக்கிய தொழில்துறை | துணி, உணவு பதன்படுத்துதல், எஃகு, மரக்கூழும் தாளும், சணல், கப்பல் கட்டுதல், மருந்துகள், மின்னணுவியல், தானுந்து பாகங்கள், களிமண் பொருட்கள், உரம், கட்டுமானப் பொருட்கள், தோல், இயற்கை வாயு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் |
தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 117வது[7] |
வெளிக்கூறுகள் | |
ஏற்றுமதி | $30.77 பில்லியன் (FY2014-15)[8] |
ஏற்றுமதிப் பொருட்கள் | துணி, தோல்சரக்கு நுட்பியல் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட, உறைந்த உணவுப் பொருட்கள், பீங்கான், போன் சைனா, பெருங்கடல்-செல்லும் கப்பல்கள், மருந்துகள், மென்பொருள், நுகர்வு சாதனங்கள், சணல், சணல் பொருட்கள், தேநீர் |
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
இறக்குமதி | $40.69 பில்லியன் (FY2014-15)[8] |
இறக்குமதிப் பொருட்கள் | பாறை எண்ணெய், எந்திரத் தொகுதியும் கருவிகளும், உணவுப்பொருட்கள், இரும்பும் எஃகும், தானுந்துகள், பருத்தி, பாம் எண்ணெய் |
முக்கிய இறக்குமதி உறவுகள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
மொத்த வெளிக்கடன் | $36.21 பில்லயன் (31 திசம்பர் 2012 மதிப்.) |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | மொ.உ.உயில் 22.8% (2013 மதிப்.) |
வருவாய் | $14.67 பில்லியன் (2013.) |
செலவினங்கள் | $22.15 பில்லியன் (2013.) |
கடன் மதிப்பீடு | BB- (domestic) BB- (foreign) BB- (T&C assessment) Outlook: Stable (இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு)[9] |
அந்நியச் செலாவணி கையிருப்பு | $26 பில்லியன் (சூலை 2015)[10] |
Main data source: CIA World Fact Book ' |
2004க்கும் 2014க்கும் இடையே வங்காள தேசத்தின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 6% ஆக இருந்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த தொழில்மயத்தால் பொருளாதாரம் வளர்ந்து வந்துள்ளது. துணித்தொழிலில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக வங்காளதேசம் உள்ளது. மருந்துகள், கப்பல் கட்டுதல், மட்கலப் பொருட்கள், தோல்சரக்கு நுட்பியல் பொருட்கள், மின்னணுவியற் பொருட்கள் மற்ற முதன்மையான தொழில்துறைகளாக உள்ளன. உலகின் மிகவும் செழிப்பான பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ளதால் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. நெல், சணல், தேநீர், கோதுமை, பருத்தி, கரும்பு முதன்மை வேளாண் பொருட்களாக உள்ளன. உலகளவில் மீன், கடல் உணவு உற்பத்தியில் வங்காளதேசம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வெளிநாட்டிலுள்ள வங்காளதேசத்தவர்களால் அனுப்பப்படும் பணம் முக்கிய வெளிச்செலாவணி சேமிப்பாக உள்ளது.
மேற்சான்றுகள்
- "Gross domestic product based on purchasing-power-parity (PPP) valuation of country GDP".
- "Bangladesh GDP and Economic Data". www.gfmag.com. July 5, 2015. https://www.gfmag.com/global-data/country-data/bangladesh-gdp-country-report.
- "Bangladesh brightens South Asia's growth forecast for 2015". Dhaka Tribune. http://www.dhakatribune.com/economy/2015/jul/17/bangladesh-brightens-south-asias-growth-forecast-2015.
- "Report for Selected Countries and Subjects (PPP valuation of country GDP)" (October 2014).
- "Bangladesh".
- "Employment Generation in Bangladesh". Daily Sun (Dhaka). October 22, 2012. http://www.daily-sun.com/details_yes_22-10-2012_Employment-generation-in-Bangladesh_299_5_39_1_27.html.
- "Bangladesh".
- "Bangladesh fiscal trade deficit balloons". Business Standard. IANS (New Delhi). August 12, 2015. http://www.business-standard.com/article/news-ians/bangladesh-fiscal-trade-deficit-balloons-115081200901_1.html.
- "Sovereigns rating list".
- "Forex reserves hit new record of $25bn mark". Dhaka Tribune. June 26, 2015. http://www.dhakatribune.com/business/2015/jun/26/forex-reserves-hit-new-record-25bn-mark.
- "Bangladesh world’s 2nd most pro-free market country". Dhaka Tribune. November 1, 2014. http://www.dhakatribune.com/bangladesh/2014/nov/01/bangladesh-world’s-2nd-most-pro-free-market-country.
வெளி இணைப்புகள்
- Bangladesh Economic Development திறந்த ஆவணத் திட்டத்தில்
- Bangladesh Economic News
- Bangladesh Budget 2007 - 2008
- World Bank Summary Trade Statistics Bangladesh, 2007
- Khulna Ship Yard