பாக்கித்தான் பொருளாதாரம்
பாக்கித்தானின் பொருளாதாரம் (economy of Pakistan) உலகில் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படி 26ஆவது பெரிய பொருளாதாரமாகும்; இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்திப்படி 38வது பெரிய பொருளாதாரமாகவும் விளங்குகின்றது. 200 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் 6வது-பெரிய மக்கள்தொகை உடைய நாடு ஆகும். இதன் ஆள்வீத மொ.தே.உ $4,993 ஆகவுள்ளது; இதனடிப்படையில் உலகில் 133வதாகவும் விளங்குகின்றது. பாக்கித்தானின் முறைசாரா பொருளாதாரம் மொத்தப் பொருளாதாரத்தில் 36%ஆக உருப்பதாக மதிப்பிடப்படுகின்றது;இது ஆள்வீத வருமானத்தில் கண்ணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.[21] வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக பாக்கித்தான் உள்ளது.[22][23][24] 21ஆவது நூற்றாண்டில் உலகின் பெரிய பொருளாதாரங்களாக வளரக்கூடியதாக பிரிக் நாடுகள் உடன் அடையாளப்படுத்தப்படும் அடுத்த பதினொன்று நாடுகளில் ஒன்றாக உள்ளது.[25] இருப்பினும் பல்லாண்டுகளாக போரிலும் சமூக நிலையற்றத்தன்மையாலும் 2013ஆம் ஆண்டு நிலவரப்படி தொடருந்துப் போக்குவரத்து, மின்னனாக்கம் போன்ற அடிப்படைச் சேவைகளில் மிகுந்த குறைபாடுகள் உள்ளன.[26] பகுதியாக தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரம் சிந்து ஆற்றை ஒட்டி வளர்ந்துள்ளது.[27][28][29] முதன்மை ஏற்றுமதிப் பொருட்களாக துணிகள், தோற் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், வேதிப்பொருட்கள் மற்றும் தரைவிரிப்புக்கள்/கம்பளங்கள் உள்ளன.[30]
பாக்கித்தான் பொருளாதாரம் | |
---|---|
![]() | |
நாணயம் | பாக்கித்தானிய ரூபாய் (PKR)Rs.1 = 100 பைசாக்கள் |
நிதி ஆண்டு | 1 சூலை – 30 சூன் |
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | பொருளியல் கூட்டுறவு அமைப்பு, தெற்காசிய கட்டற்ற வணிகப் பகுதி (SAFTA), தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, உலக அறிவுசார் சொத்து நிறுவனம், உலக வணிக அமைப்பு |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | $288 பில்லியன் (பெயரளவு, 2015)[1] [2]$928 பில்லியன் (PPP, 2014)[3] |
மொ.உ.உ வளர்ச்சி | ![]() |
நபர்வரி மொ.உ.உ | $1,513 (nominal)[5]$4,993 (PPP; 133வது; 2015)[3] |
துறைவாரியாக மொ.உ.உ | வேளாண்மை: 25.1%, தொழில்: 21.3%, சேவைகள்: 53.6% (2014 மதிப்பீடு.) |
பணவீக்கம் (நு.வி.கு) | 1.8% (சூலை 2015)[6] |
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | வேளாண்மை: 43%, கட்டுமானம்: 15.2%, உற்பத்தி: 13.3%, மொத்தம் மற்றும் சில்லறை வணிகம்: 9.2%, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்: 7.3% (2012–13)[7] |
வேலையின்மை | 6.6% (2013 மதிப்பீடு.)[8] |
முக்கிய தொழில்துறை | துணி & உடை, உணவு பதப்படுத்துதல், மருந்து, கட்டுமானப் பொருட்கள், வேதிப்பொருள், சீமைக்காரை, சுரங்கத் தொழில், எந்திரத் தொகுதி, எஃகு, பொறியியல், மென்பொருள் மற்றும் வன்பொருள், தானுந்து, விசையுந்து மற்றும் தானிப் பாகங்கள், மின்னணுவியல், தாள் பொருட்கள், உரம், இறால், பாதுகாப்பு சாதனங்கள், கப்பல் கட்டுதல் |
தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 104வது (2015)[9] |
வெளிக்கூறுகள் | |
ஏற்றுமதி | மொத்தம் $30.414 பில்லியன் (2013-14 மதிப்பீடு.), சரக்குகள் $25.157 பில்லியன், சேவைகள் $5.256 பில்லியன்[10] |
ஏற்றுமதிப் பொருட்கள் | லினன்கள் (10%) பருத்தியும் நூலிழையும் (9.2%) நெல் (7.9%) தைக்கப்படா ஆடவர் உடைகள் (4.3%) சுத்திகரிக்கப்பட்ட பெட்றோலியம் (3.2%) சிமென்ட் (2.3%)[11] |
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | ![]() ![]() ![]() ![]() ![]() |
இறக்குமதி | $41.668 பில்லியன் (2013-14 மதிப்பீடு.) [13] |
இறக்குமதிப் பொருட்கள் | உணவு $4.15 பில்லியன் எந்திரத் தொகுதி $5.05 பில்லியன் போக்குவரத்து வண்டிகள் $1.66 பில்லியன் துணி $2.29 பில்லியன் உரங்களும் வேதிப்பொருட்களும் $6.86 பில்லியன் கச்சா உலோகம் $2.7 பில்லியன் சுத்திகரிக்கப்பட்ட பெட்றோலியம் $9.02 பில்லியன் கச்சா பெட்றோலியம்=$5.75 பில்லியன் |
முக்கிய இறக்குமதி உறவுகள் | ![]() ![]() ![]() ![]() ![]() |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | 61.8% of GDP (2014-15)[15] |
வருவாய் | ![]() |
செலவினங்கள் | ![]() |
கடன் மதிப்பீடு | இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு:[17] B- (உள்நாட்டு) B- (வெளிநாட்டு) B- (T&C Assessment) எதிர்காலம்: நேர்மறை[18] மூடி: B3[19] எதிர்காலம்: நிலைத்த |
அந்நியச் செலாவணி கையிருப்பு | $19 பில்லியன் (சூலை 2015)[20] |
Main data source: CIA World Fact Book ' |
பாக்கித்தானின் பொருளியல் வளர்ச்சி சிந்து ஆற்றை ஒட்டியே உள்ளது;[28][31] கராச்சியும் பஞ்சாபின் முக்கிய நகரங்களும் பொருளாதாரத்தின் அச்சுக்களாக உள்ளன. [28] உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், வளரும் மக்கள்தொகை, நிலையற்ற வெளிநாட்டு மூலதனம் போன்றவற்றால் கடந்த காலங்களில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.[26] வெளிநாடுகளில் வேலை செய்யும் பாக்கித்தானிய பணியாட்கள் அனுப்பும் தொகைகளால் அந்நியச் செலாவணிக் கையிருப்பு நன்றாக இருப்பினும் வளர்ந்துவரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது; இது உடனடியான எதிர்காலத்தில் மொ.தே.உற்பத்தியை பாதிக்கலாம்.[32] பாக்கித்தான் தற்போது பொருளாதார தாராயமயமாக்கலையும் அனைத்து அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கலையும் முன்னெடுத்து வருகின்றது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமாளிக்க அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் முயன்று வருகின்றது.[33] 2014இல், அந்நியச் செலாவணி சேமிப்பு $18.4 பில்லியனைக் கடந்தது.[34] இதனால் இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு தொலைநோக்கு மதிப்பீடு நிலையானது என அறிவித்துள்ளது.[35][36]
மேற்சான்றுகள்
- "Pakistan Economy, IMF". பார்த்த நாள் 2015-04-15.
- http://databank.worldbank.org/data/download/GDP.pdf
- "Report for Selected Countries and Subjects". imf.org.
- The Express Tribune
- "Per capita income: A Pakistani now makes $1,513 a year". பார்த்த நாள் 2015-05-20.
- "Inflation dips to 12-year low at 1.8% in July". The Express Tribune. Aug 4, 2015. http://tribune.com.pk/story/931731/price-index-inflation-dips-to-12-year-low-at-1-8-in-july/. பார்த்த நாள்: Aug 4, 2015.
- "The World Factbook". cia.gov.
- "Doing Business in Pakistan 2012". உலக வங்கி. பார்த்த நாள் 2011-11-21.
- "OEC: Pakistan (PAK) Profile of Exports, Imports and Trade Partners". mit.edu.
- "Export Partners of Pakistan". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2012). பார்த்த நாள் 2013-07-23.
- "Import Partners of Pakistan". The Observatory of Economic Complexity (2014). பார்த்த நாள் 2013-07-23.
- Zaman, Qamar (2013-06-12). "Sinking in: Pakistan to be in Rs14t debt quagmire by end of fiscal 2013 – The Express Tribune". Tribune.com.pk. பார்த்த நாள் 2014-01-11.
- http://www.imf.org/external/pubs/ft/weo/2015/01/weodata/weorept.aspx?sy=2013&ey=2020&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&pr1.x=93&pr1.y=10&c=564&s=NGDP_R%2CNGDP_RPCH%2CNGDP%2CNGDPD%2CNGDP_D%2CNGDPRPC%2CNGDPPC%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CPPPSH%2CPPPEX%2CNID_NGDP%2CNGSD_NGDP%2CPCPI%2CPCPIPCH%2CPCPIE%2CPCPIEPCH%2CTM_RPCH%2CTMG_RPCH%2CTX_RPCH%2CTXG_RPCH%2CLUR%2CLP%2CGGR%2CGGR_NGDP%2CGGX%2CGGX_NGDP%2CGGXCNL%2CGGXCNL_NGDP%2CGGXONLB%2CGGXONLB_NGDP%2CGGXWDN%2CGGXWDN_NGDP%2CGGXWDG%2CGGXWDG_NGDP%2CNGDP_FY%2CBCA%2CBCA_NGDPD&grp=0&a=
- "Sovereigns rating list". Standard & Poor's. பார்த்த நாள் 26 May 2011.
- Mangi, Faseeh (5 May 2015). "S&P Follows Moody’s to Raise Pakistan Outlook as Growth Quickens". bloomberg.com. http://www.bloomberg.com/news/articles/2015-05-05/pakistan-outlook-upgraded-at-s-p-as-oil-imf-loan-boost-economy.
- https://www.moodys.com/research/Moodys-upgrades-Pakistans-bond-ratings-to-B3-with-a-stable--PR_325728
- http://tribune.com.pk/story/841063/foreign-currency-reserves-increase-7-4-week-on-week/
- "The Secret Strength of Pakistan's Economy". Bloomberg. http://www.bloomberg.com/bw/articles/2012-04-05/the-secret-strength-of-pakistans-economy.
- Faryal Leghari (3 January 2007). "GCC investments in Pakistan and future trends". Gulf Research Center. பார்த்த நாள் 12 February 2008.
- "Quid Pro Quo 45 – Tales of Success" (PDF). Muslim Commercial Bank of Pakistan (2007). மூல முகவரியிலிருந்து 16 February 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 February 2008.
- Malcolm Borthwick (1 June 2006). "Pakistan steels itself for sell-offs". BBC News. http://news.bbc.co.uk/2/hi/business/5007680.stm. பார்த்த நாள்: 12 February 2008.
- Tavia Grant (8 December 2011). "On 10th birthday, BRICs poised for more growth". The Globe and Mail (Toronto). http://www.theglobeandmail.com/report-on-business/economy/economy-lab/daily-mix/on-10th-birthday-brics-poised-for-more-growth/article2264208/. பார்த்த நாள்: 4 January 2012.
- Declan Walsh (18 May 2013). "Pakistan, Rusting in Its Tracks". The New York Times. http://www.nytimes.com/2013/05/19/world/asia/pakistans-railroads-sum-up-nations-woes.html. பார்த்த நாள்: 19 May 2013. "natural disasters and entrenched insurgencies, abject poverty and feudal kleptocrats, and an economy near meltdown"
- Henneberry, S. (2000). "An analysis of industrial–agricultural interactions: A case study in Pakistan". Agricultural Economics 22: 17–27. doi:10.1016/S0169-5150(99)00041-9.
- "World Bank Document" (PDF) (2008). பார்த்த நாள் 2 January 2010.
- "Pakistan Country Report" (PDF). RAD-AID 3, 7 (2010). பார்த்த நாள் 26 December 2011.
- Pakistan Economy
- Archived சூலை 20, 2009 at the Wayback Machine.
- உலக வங்கி Country Classification Groups, (July 2006 data)
- "Privatisation process: Govt to sell assets in sole offering". The Express Tribune.
- "Foreign Currency Reserve".
- "Foreign currency reserves cross $10b mark". The Express Tribune.
- "Outlook stable: S&P affirms Pakistan’s ratings at ‘B-/B’". The Express Tribune.
வெளி இணைப்புகள்
- Statistics Division, Government of Pakistan
- Ministry of Finance, Government of Pakistan
- Ministry of Commerce, Government of Pakistan
- World Bank Summary Trade Statistics Pakistan
- Pakistan உலகத் தரவுநூலில் இருந்து
- Tariffs applied by Pakistan as provided by ITC's Market Access Map, an online database of customs tariffs and market requirements.