இந்தோனேசியப் பொருளாதாரம்

இந்தோனேசியா தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும். உலகின் வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. ஜி-20 நாடுகளில் ஒன்றாகவும் புதியதாக தொழில்மயமான நாடுகளில் ஒன்றாகவும் இந்தோனேசியா விளங்குகின்றது.[12] இந்தோனேசியா உள்ளூர் சந்தையையும் அரசு செலவு செய்வதையும் அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்களையும் சார்ந்துள்ளது. 141 நிறுவனங்கள் நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. எரிமம், நெல், மின்சாரம் போன்ற அடிப்படை பொருட்களின் விலையை அரசு நிர்ணயிப்பதால் இவை நாட்டின் சந்தைப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் 1990களிலிருந்து 80 விழுக்காடு பொருளாதாரத்தை உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன.[13] 1997இல் ஏற்பட்ட நிதிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அரசு கணிசமான தனியார் நிறுவனங்களின் சொத்துக்களை கைப்பற்றி உள்ளது; வாராக் கடன்களை ஏற்றுக்கொண்டும் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கியும் இவ்வாறு கையகப்படுத்தி உள்ளது. 1999க்குப் பிறகு பொருளாதாரம் மீண்டுள்ளது; அண்மைய ஆண்டுகளில் வளர்ச்சி வீதம் 4–6% ஆக உள்ளது.[14]

இந்தோனேசியப் பொருளாதாரம்
நாணயம்ரூபியா (IDR)
நிதி ஆண்டு1,சனவரி முதல் 31,திசம்பர் வரை
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்ஏபெக், உலக வணிக அமைப்பு, ஜி-20, ஐஓஆர்-ஏஆர்சி, ஆர்செப், பிற
புள்ளி விவரம்
மொ.உ.உ$870 பில்லியன் (2014 மதிப்.) பெயரளவில்
$2.554 டிரில்லியன் (2014) கொ.ஆ.ச
மொ.உ.உ வளர்ச்சி 6.46% (கொ.ஆ.ச)(2014)[1]
நபர்வரி மொ.உ.உ$11,135 (கொ.ஆ.ச, 2015 மதிப்.)
துறைவாரியாக மொ.உ.உவேளாண்மை: 14.4%, தொழில்: 47%, சேவைகள்: 38.6% (2012 மதிப்.)
பணவீக்கம் (நு.வி.கு)4.61% (அக்டோபர் 2012)
கினி குறியீடு38.1 (2011)[2]
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைவேளாண்மை: 38.9%, தொழிற்துறை: 22.2%, சேவைகள்: 47.9% (2012 மதிப்.)
வேலையின்மை6.6% (2012)[3]
முக்கிய தொழில்துறைபாறை எண்ணெய்யும் இயற்கை எரிவளியும், துணி, உடை, காலணி, சுரங்கத் தொழில், சீமைக்காரை, உரம், எந்திரத் தொகுதி, மின்னணுவியல், வன்பொருள், மென்பொருள், தொலைத்தொடர்பு, ஒட்டுப்பலகை, இயற்கை மீள்மம், உணவு, சுற்றுலா
தொழில் செய்யும் வசதிக் குறியீடு120வது[4]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$199.1 பில்லியன் (2012 மதிப்.)[5]
ஏற்றுமதிப் பொருட்கள்எண்ணெய்யும் வளிமமும், சீமைக்காரை, உணவு, மின் கருவிகள், கட்டுமானம், ஒட்டுப்பலகை, துணி, இயற்கை மீள்மம்
முக்கிய ஏற்றுமதி உறவுகள் சப்பான் 14.8%
 சீனா 12.4%
 சிங்கப்பூர் 9.1%
 ஐக்கிய அமெரிக்கா 8.6%
 இந்தியா 7.1%
 தென் கொரியா 6.3%
 மலேசியா 5.8% (2013 மதிப்.)[6]
இறக்குமதி$185 பில்லியன் (2012 மதிப்.)
இறக்குமதிப் பொருட்கள்எந்திரத் தொகுதியும் சாதனங்களும், வேதிப்பொருள், எரிமம், உணவுகள்
முக்கிய இறக்குமதி உறவுகள் சீனா 16%
 சிங்கப்பூர் 13.7%
 சப்பான் 10.3%
 மலேசியா 7.1%
 தென் கொரியா 6.2%
 தாய்லாந்து 5.7%
 ஐக்கிய அமெரிக்கா 4.9% (2013 est.)[7]
மொத்த வெளிக்கடன்$187.1 பில்லியன் (31 திசம்பர் 2012 மதிப்.)
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்மொ.உ.உவில் 23.9% (2012 மதிப்.)[8]
வருவாய்$140.8 பில்லியன் (2012 மதிப்.)
செலவினங்கள்$160.6 பில்லியன் (2012 மதிப்.)
கடன் மதிப்பீடுஇசுடாண்டர்ட் அண்ட் புவர்சு:[9]
BB+ (Domestic)
BB+ (Foreign)
BBB- (T&C Assessment)
Outlook: Stable
மூடியின்:[10]
Baa3
Outlook: Stable
Fitch:[10]
BBB-
Outlook: Positive
அந்நியச் செலாவணி கையிருப்பு$110.30 பில்லியன் (அக்டோபர் 2012)[11]
Main data source: CIA World Fact Book
'

2012இல் இந்தோனேசியா ஜ-20 குழுமத்தில் விரைந்து வளரும் நாடுகளில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி சீனாவிற்கு அடுத்த இரண்டாம் நிலையை எட்டியது. இருப்பினும் 2014இல் இந்தியா மீண்டும் இந்நிலையை கைப்பற்றியது.

மேற்சான்றுகள்

  1. "Indonesian economy grows 5.78 pct in 2013, slowest in 4 years". Reuters. பார்த்த நாள் 3 March 2015.
  2. "Global Gini Index". World Bank. பார்த்த நாள் 8 February 2013.
  3. "Doing Business in Indonesia 2012". உலக வங்கி. பார்த்த நாள் 4 April 2013.
  4. "Federation of International Trade Associations : Indonesia profile". Fita.org. பார்த்த நாள் 29 August 2011.
  5. "Export Partners of Indonesia". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2012). பார்த்த நாள் 23 July 2013.
  6. "Import Partners of Indonesia". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2012). பார்த்த நாள் 23 July 2013.
  7. "Report for Selected Countries and Subjects". பார்த்த நாள் 3 March 2015.
  8. "Sovereigns rating list". Standard & Poor's. பார்த்த நாள் 26 May 2011.
  9. Rogers, Simon; Sedghi, Ami (15 April 2011). "How Fitch, Moody's and S&P rate each country's credit rating". The Guardian. http://www.guardian.co.uk/news/datablog/2010/apr/30/credit-ratings-country-fitch-moodys-standard. பார்த்த நாள்: 31 May 2011.
  10. "RI`s forex reserves up $0.13 bln in October". பார்த்த நாள் 3 March 2015.
  11. What is the G-20, g20.org. Retrieved 6 October 2009.
  12. "80 Persen Industri Indonesia Disebut Dikuasai Swasta" (3 March 2015).
  13. "Acicis – Dspp". Acicis.murdoch.edu.au. பார்த்த நாள் 29 August 2011.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.