ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.[1]. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது.

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு
உறுப்பு நாடுகள் பச்சையில் உள்ளன
உறுப்பு நாடுகள் பச்சையில் உள்ளன
தலைமையகம்சிங்கப்பூர்
Type பொருளாதார மன்றம்
உறுப்பு நாடுகள்
Leaders
   APEC Host Economy 2014 சீனா
   Executive Director Dr. Alan Bollard
உருவாக்கம் 1989
Website
www.apec.org
2005 ஏபெக் உச்சி மாநாடு, புசான், தென் கொரியா
2006 ஏபெக் உச்சி மாநாடு, ஹனோய், வியட்நாம்
2007 ஏபெக் உச்சி மாநாடு, சிட்னி, ஆஸ்திரேலியா

ஏபெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சீன தாய்பெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சீன தாய்பெய் அமைச்சர் மட்டத்தில் இம்மாநாட்டில் பங்கு பற்றுகிறது. உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு இடம்பெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும். 2007ம் ஆண்டிற்கான ஏபெக் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் செப்டம்பர் 2-9 இல் நடைபெற்றது.

வரலாறு

ஜனவரி 1989 இல் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த பொப் ஹோக் பசிபிக் நாடுகளின் கூடிய பொருளாதாரக் கூட்டுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் நவம்பரில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் காரெத் எவான்ஸ் தலைமையில் 12 நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெற்றது.

முதலாவது உச்சி மாநாடு 1993 இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலைமையில் வாஷிங்டனில் உள்ள பிளேக் தீவில் இடம்பெற்றது. ஏபெக் தலைமையகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது.

அங்கத்துவ நாடுகள்

தற்போது மொத்தம் 21 நாடுகள் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

நாடு சேர்ந்த ஆண்டு
 ஆத்திரேலியா 1989
 புரூணை 1989
 கனடா 1989
 இந்தோனேசியா 1989
 சப்பான் 1989
 மலேசியா 1989
 பிலிப்பீன்சு 1989
 நியூசிலாந்து 1989
 சிங்கப்பூர் 1989
 தென் கொரியா 1989
 தாய்லாந்து 1989
 ஐக்கிய அமெரிக்கா 1989
 சீனக் குடியரசு[2] 1991
 ஆங்காங்[3] 1991
 சீனா 1991
 மெக்சிக்கோ 1993
 பப்புவா நியூ கினி 1993
 சிலி 1994
 பெரு 1998
 உருசியா 1998
 வியட்நாம் 1998

 இந்தியா இக்கூட்டமைப்பில் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனவாயினும், 2010 இற்குப் பின்னரேயே இக்கோரிக்கை பரிசீலனைக்கெடுக்கப்படும்.[4][5][6][7]

அதனை விட, மொங்கோலியா, லாவோஸ், கொலம்பியா[8],  எக்குவடோர்[9] போன்றவையும் விண்ணப்பித்துள்ளன.

சந்திப்பு இடம்பெற்ற இடங்கள்

வருடம்#திகதிகள்நாடுநகரம்இணையத்தளம்
19891stநவம்பர் 6–7 ஆஸ்திரேலியாகான்பரா
19902ndஜூலை 29–31 சிங்கப்பூர்சிங்கப்பூர்
19913rdநவம்பர் 12–14 தென்கொரியாSeoul
19924thசெப்டெம்பர் 10–11 தாய்லாந்துBangkok
19935thநவம்பர் 19–20 ஐக்கிய அமெரிக்காSeattle
19946thநவம்பர் 15 இந்தோனேசியாBogor
19957thநவம்பர் 19 ஜப்பான்ஒசாகா
19968thநவம்பர் 25 பிலிப்பீன்சுManila and Subic
19979thநவம்பர் 24–25 கனடாவான்கூவர்
199810thநவம்பர் 17–18 மலேசியாKuala Lumpur
199911thசெப்டெம்பர் 12–13 நியூசிலாந்துAuckland
200012thநவம்பர் 15–16 புருணைBandar Seri Begawan
200113thஅக்டோபர் 20–21 சீனாசங்காய்
200214thஅக்டோபர் 26–27 மெக்சிக்கோLos Cabos
200315thஅக்டோபர் 20–21 தாய்லாந்துBangkok
200416thநவம்பர் 20–21 சிலிசாந்தியாகோ
200517thநவம்பர் 18–19 தென்கொரியாBusan
200618thநவம்பர் 18–19 வியட்நாம்ஹனோய்
200719thசெப்டெம்பர் 8–9 ஆஸ்திரேலியாசிட்னி
200820thநவம்பர் 22–23 பெருLima
200921stநவம்பர் 14–15 சிங்கப்பூர்சிங்கப்பூர்
201022ndநவம்பர் 13–14 ஜப்பான்Yokohama
201123rdநவம்பர் 12–13 ஐக்கிய அமெரிக்காHonolulu
201224thசெப்டெம்பர் 9–10 ரஷ்யாVladivostok
201325thஅக்டோபர் 5–7 இந்தோனேசியாபாலி
201426thநவம்பர் 2014 சீனாபீஜிங்
201527thநவம்பர் 2015 பிலிப்பீன்சுDavao City
201628thநவம்பர் 2016 பெருLima
201729th2017 வியட்நாம்ஹனோய்

மேற்கோள்கள்

  1. (உலக வங்கி)
  2. சீனக் குடியரசு (ROC) தனது பெயரை இக்கூட்டமைப்பில் "சீனக் குடியரசு" என்றோ அல்லது "தாய்வான்" என்றோ அழைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. பதிலாக "சீன தாய்பெய்" என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் அரசுத் தலைவர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை, அமைச்சர்கள் மட்டத்திலேயே தனது தூதுக் குழுவை அனுப்புகிறது.
  3. ஹாங்காங் பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்தபோது 1991இல் ஏபெக்கில் இணைந்தது. 1997 இல் சீன மக்கள் குடியரசுடன் இணைக்கப்பட்டதில் இருந்து இது "ஹாங்காங், சீனா" என்று வழங்கப்பட்டு வருகிறது.
  4. APEC 'too busy' for free trade deal, says Canberra
  5. இந்திய அங்கத்துவம் பற்றிய பிரச்சினை
  6. Extend a hand to an absent friend

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.