அடுத்த பதினொன்று
அடுத்த பதினொன்று (சுருக்கமாக N-11) 21ஆவது நூற்றாண்டில் பிரிக் நாடுகளுடன் உலகின் பெரிய பொருளாதாரங்களுடன் இணையக்கூடிய மிக உயர்ந்த வாய்ப்புள்ள நாடுகளாக கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியியல் மற்றும் பொருளியலாளர் ஜிம் ஓநீல் அடையாளம் கண்ட பதினொரு நாடுகளாகும். இவையாவன: வங்காளதேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈரான், மெக்சிக்கோ, நைஜீரியா, பாக்கித்தான், பிலிப்பீன்சு, துருக்கி, தென் கொரியா மற்றும் வியட்நாம்.[1] திசம்பர் 12, 2005 அன்று முதலீடு வாய்ப்பு மற்றும் வருங்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த நாடுகளை, வங்கி அடையாளம் கண்டது. 2011க்குப் பின்னர் இந்தப் பதினொரு நாடுகளில் மிகவும் முதன்மையான நாடுகளான மெக்சிக்கோ, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் துருக்கியின் உற்பத்தி அடுத்தப் பதினொன்றின் மொத்த தேசிய உற்பத்தியில் 73 விழுக்காடாக இருந்தது.[2]
அடுத்த பதினொன்று |
||
---|---|---|
![]() N-11 countries in Magenta N-11 countries in Magenta
|
||
Type | உயர்ந்த வாய்ப்புள்ள பொருளாதாரங்கள் | |
உறுப்பினர்கள் | 11 நாடுகள்
|
பருப்பொருளியல் நிலைத்தன்மை, அரசியல் முதிர்ச்சி, முதலீடு, வணிகக் கொள்கைகளில் பொருளியல் திறந்த தன்மை, கல்வியின் தரம் ஆகிய அளவைகளைக் கொண்டு கோல்ட்மேன் சாக்ஸ் இந்த நாடுகளை அடையாளம் கண்டது. 2003இல் இதே வங்கி பிரேசில், உருசியா, இந்தியா, மற்றும் சீனாவை வளர்ந்து வரும் நான்கு "பிரிக்" நாடுகளாக வெளியிட்டது; இதன் தொடர்ச்சியாகவே N-11 ஆய்வுத்தாளை வெளியிட்டது.[3]
மேற்சான்றுகள்
- Goldman Sachs’s MIST Topping BRICs as Smaller Markets Outperform - Bloomberg
- "Indonesia negara jagoan masa depan". பார்த்த நாள் August 9, 2012.
- Global Economics Paper 134 and Jim O'Neill, BRIMCs
மேலும் அறிய
- "The N-11: More Than an Acronym" – Goldman Sachs study of N-11 nations, Global Economics Paper No: 153, March 28, 2007.