இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்

இது இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்களின் முழு பட்டியல் ஆகும். பெருங்கோவில் அல்லது பேராலயம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் ஆலயங்கள் சிலவற்றிற்கு அளிக்கப்படும் பட்டமாகும். திருச்சபைச் சட்டப்படி திருப்பீடத்தாலோ அல்லது மிகவும் பழைய மரபின் அடிப்படையிலோ மட்டுமே இப்பட்டம் வழங்கப்பட இயலும்.[1] இப்பட்டமானது குறிக்கத்தக்க திருப்பயணியரின் வருகையைக்கொண்டுள்ள மிகவும் பெரிய ஆலயங்களோ அல்லது புனிதர்களோடு தனிப்பட்ட தொடர்புடைய ஆலயங்களுக்கோ மட்டுமே வழங்கப்படும். இவ்வகை ஆலயங்கள் இருவகைப்படும். இளம் பெருங்கோவில்கள் (minor basilica) மற்றும் உயர் பெருங்கோவில்கள் (major basilica). உலகில் நான்கு உயர் பெருங்கோவில்கள் மட்டுமே உள்ளன. அவையனைத்தும் உரோமையில் உள்ளன என்பதும் குறிக்கத்தக்கது. அவை இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம், புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம் மற்றும் புனித மரியா பேராலயம். இவை தவிர இந்தியா உட்பட உலகின் பிற பெருங்கோவில்கள் அனைத்தும் இளம் பெருங்கோவில்களாம்.

இந்தியாவில் மொத்தம் 21 பெருங்கோவில்கள் உள்ளன. அவற்றும் 17 இலத்தீன் வழிபாட்டு முறையினையும், 3 சீரோ-மலபார் வழிபாட்டு முறையினையும் மற்றும் 1 சீரோ-மலங்கரா வழிபாட்டு முறையினையும் சேர்ந்தது. இந்தியாவில் அதிக பெருங்கோவில்களைக்கொண்ட மாநிலம் கேரளம். 8 பெருங்கோவில்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்து தமிழ்நாட்டில் 5 பெருங்கோவில்கள் உள்ளன. ஆசியா கண்டத்திலேயே அதிக கத்தோலிக்க பெருங்கோவில்களைக்கொண்ட நாடு இந்தியாவாகும்.[2]

பெருங்கோவில்களின் பட்டியல்

வ. எண்நகரம்மாநிலம்பெயர்பட்டமளிக்கப்பட்ட நாள்வழிபாட்டு முறைபடம்
1கோவா வெல்காகோவாகுழந்தை இயேசு பெருங்கோவில்1946-01-11இலத்தீன்
2மும்பைமகாராட்டிரம்மலை மாதா பெருங்கோவில்1954-10-04இலத்தீன்
3சென்னைதமிழ்நாடுசென்னை சாந்தோம் தேவாலயம்1956-03-16இலத்தீன்
4சர்தானாஉத்தரப் பிரதேசம்அருள் வழங்கும் அன்னை மரியா பெருங்கோவில்1961-12-13இலத்தீன்
5வேளாங்கண்ணிதமிழ்நாடுதூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி1962-11-03இலத்தீன்
6பெங்களூருகருநாடகம்புனித அன்னை மரியா பெருங்கோவில்1973-09-02இலத்தீன்
7கொச்சிகேரளம்புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில்1974-03-20சீரோ-மலபார்
8தூத்துக்குடிதமிழ்நாடுபனிமய மாதா பேராலயம்1982-07-30இலத்தீன்
9கொச்சிகேரளம்திருச்சிலுவை பெருங்கோவில்1984-08-23இலத்தீன்
10பாண்டெல்மேற்கு வங்காளம்செபமாலை அன்னை பெருங்கோவில்1988-11-25இலத்தீன்
11திருச்சூர்கேரளம்வியாகுல அன்னை பெருங்கோவில்1992-04-25சீரோ-மலபார்
12திருவையாறுதமிழ்நாடுபூண்டி மாதா பேராலயம்1999-08-03இலத்தீன்
13ராஞ்சிசார்க்கண்ட்இறை அன்னை மரியா பெருங்கோவில்2004-11-30இலத்தீன்
14கொச்சிகேரளம்அன்னை மரியா பெருங்கோவில்2004-12-01இலத்தீன்
15திருச்சிராப்பள்ளிதமிழ்நாடுஉலக இரட்சகர் பெருங்கோவில்2006-10-12இலத்தீன்
16திருவனந்தபுரம்கேரளம்அமைதியின் அரசி அன்னை மரியா மறைமாவட்டப் பெருங்கோவில்[3]2008-10-13சீரோ-மலங்கரா
17சிக்கந்தராபாத்ஆந்திரப் பிரதேசம்விண்ணேற்பு அன்னை பெருங்கோவில்2008-11-07இலத்தீன்
18அங்கமாலிகேரளம்புனித ஜோர்ஜியார் பெருங்கோவில்2009-06-24சீரோ-மலபார்
19ஆலப்புழாகேரளம்புனித அந்திரேயா பெருங்கோவில்[4]2010-07-09இலத்தீன்
20புதுச்சேரிபுதுச்சேரிதூய இருதய ஆண்டவர் பெருங்கோவில்2011-06-24இலத்தீன்
21பள்ளிப்புறம், எற்ணாகுளம்கேரளம்பனிமய மாதா பெருங்கோவில்[5]2012-08-27இலத்தீன்

மேற்கோள்கள்

  1. Robert F. McNamara, Minor Basilicas in the United States
  2. List of Indian basilicas from GCatholic.org
  3. "Pro-cathedral gets basilica status", The Hindu, 11 November 2008
  4. Staff Reporter "Arthunkal church declared basilica", The Hindu, October 12, 2010, accessed December 27, 2010.
  5. Staff Reporter "Basilica status for Pallippuram church", The Hindu, August 28, 2012, accessed August 29, 2012
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.