திருவாழி-திருநகரி கோயில்கள்

திருவாழி-திருநகரி கோயில்கள் (Thiruvali - Thirunagari Temples) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்ட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள் ஆகும். இவ்விரட்டைக் கோயில்கள் 108 திவ்ய தேசங்களில் 34வது இடத்தில் உள்ளது.[1] இக்கோயில்கள் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.

திருவாழி-திருநகரி கோயில்கள்
திருவாழி-திருநகரி கோயில்கள்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினப்பட்டினம் மாவட்டத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°13′32″N 79°47′58″E
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவு:திருவாழி மற்றும் திருநகரி
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:2

இரட்டைத் தலங்கள்

திருவாழி - திருநகரி இரட்டைத் தலங்களில், திருவாழியில் அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

திருவாழி

திருவாழி தலத்தில் மேற்கு நோக்கி திருவாழி அழகியசிங்கர் கோயில் அமைந்துள்ளது. தாயார் பெயர் பூர்ணவல்லி நாச்சியார்.

திருநகரி

திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊரான திருநகரியில் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் பெயர் வேதராஜன்; தாயார் பெயர் அமிர்தவள்ளி நாச்சியார். இக்கோயில் விமானம் 7 நிலைகளைக் கொண்டது.

விழாக்கள்

இத்தலத்தில் ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா நடைபெறுகிறது. தை மாதத்தில் திருநாங்கூர் 11 திருப்பதிகளிலிருந்து உற்சவர்கள் கருடவாகனத்தில் இக்கோயிலுக்கு எழுந்தருளி கருட சேவை நடைபெறும்[2] அவ்வமயம் திருமங்கை ஆழ்வாரையும், அவரது நாச்சியாரான குமுதவள்ளியையும் பல்லக்கில் அமரவைத்து, திருவாழி – திருநகரி அருகில் உள்ள திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுக்குச் எழுந்தருளச் செய்து, திருமங்கை ஆழ்வார் அருளிய நாலாயிர திவ்வியப் பிரபந்த பாசுரங்களைப் பாடுவர்.

மேற்கோள்கள்

  1. 34. திருவாலி – திருநகரி
  2. "Garuda Sevai'". . http://www.ibiblio.org/sripedia/ramanuja/archives/feb08/pdfUQOxvBFB4v.pdf. பார்த்த நாள்: 2011-08-19.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.