இலங்கை மாகாண சபைத் தேர்தல், 2004

2004 இலங்கை மாகாணசபைத் தேர்தல் 2004 ஏப்ரல் 24, 2004 சூலை 10 ஆகிய நாட்களில் இலங்கையின் ஏழு மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்தெடுப்பதற்காக நடைபெற்றது. எட்டாவது மாகாணமான வடக்கு கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல்கள் இடம்பெறவில்லை. இம்மாகாணசபை 1990 மார்ச்சு முதல் தேசிய நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஏழு மாகாணசபைகளையும் கைப்பற்றியது.

இலங்கை மாகாணசபைகளுக்கான 4வது தேர்தல்

24 ஏப்ரல் 2004 & 10 சூலை 2004

7 மாகாண சபைகளுக்கு 380 இடங்கள்
வாக்களித்தோர்55.86%
  First party Second party
 
தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்க
கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி
மொத்த வாக்குகள் 3,364,239 2,197,892
விழுக்காடு 57.68% 37.68%
உறுப்பினர்கள் 227 140
சபைகள் 7 0

தேர்தல் மாவட்டங்கள் வாரியாக வெற்றியாளர்கள். ஐமசுகூ நீலம், ஐதேக பச்சை.

பின்னணி

ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.[1] இதன் படி 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[2][3] 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன[4]. மாகாணசபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28 ஆம் நாள் வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றன.[5] 1988 சூன் 2 இல் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஏழு மாகாணசபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.[1] 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.[4] இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.

1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு அமைதிப் படையினருடன் சேர்ந்து இந்தியா சென்றார்.[6] இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.

1993 ஆம் ஆண்டில் வட-கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் இடம்பெற்றன. ஆறு மாகாணங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு மாகாணசபையை முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான மக்கள் கூட்டணி கைப்பற்றியது. தெற்கு மாகாணத்தில் ஐதேகவின் சில உறுப்பினர்கள் கட்சி மாறியதை அடுத்து அங்கு 1994 ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது.

3வது மாகாணசபைத் தேர்தல்கள் 1999 இல் வடகிழக்குத் தவிர்ந்த 7 மாகாணங்களுக்கு நடத்தப்பட்டன. ஆளும் மக்கள் கூட்டணி வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஏனைய மாகாணங்களில் சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைத்தது. 2002 ஆம் ஆண்டில் மத்திய மாகாண சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்கள் கூட்டணிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து ஐதேக அங்கு ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.[7].

தேர்தல் முடிவுகள்

மேலோட்டமான முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஏழு மாகாணசபைகளையும் கைப்பற்றியது.

கட்சி / கூட்டணிவாக்குகள்%இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி3,364,23957.68%227
ஐக்கிய தேசியக் கட்சி1 22,197,89237.68%140
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு1119,7962.05%7
மலையக மக்கள் முன்னணி52,6390.90%3
ஐக்கிய சோசலிசக் கட்சி21,3720.37%0
ஜனநாயக மக்கள் முன்னணி15,8710.27%1
சுயேட்சைகள்11,9760.21%0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்210,7200.18%1
தேசிய அபிவிருத்தி முன்னணி10,4930.18%0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி6,9810.12%0
சனநாயக ஒற்றுமைக் கூட்டணி6,2190.11%1
ஐக்கிய லலித் முன்னணி3,7650.06%0
புதிய இடது முன்னணி3,5890.06%0
இலங்கை லிபரல் கட்சி1,4500.02%0
ஐக்கிய சிங்கள பாரிய பேரவை1,3040.02%0
ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டணி1,1390.02%0
இலங்கை முஸ்லிம் கட்சி7520.01%0
இலங்கை முன்னேற்ற முன்னணி7300.01%0
மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி6170.01%0
ருகுண மக்கள் கட்சி3110.01%0
தேசிய சனநாயகக் கட்சி2870.00%0
இலங்கை தேசிய முன்னணி2240.00%0
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி2180.00%0
தேசிய மக்கள் கட்சி1240.00%0
செல்லுபடியான வாக்குகள்5,832,708100.00%380
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்380,055
மொத்த வாக்குகள்6,212,763
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்11,121,889
வாக்குவீதம்55.86%
1. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மற்றும் மேற்கு மாகாணங்களில் தனித்தும், மத்திய, ஊவா மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிட்டது.
2. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சபரகமுவா மாகாணத்தில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேகவுடன் இணைந்தும் போட்டியிட்டது.

மத்திய மாகாணம்

2004 சூலை 10 இல் நடைபெற்ற மத்திய மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணிகண்டிமாத்தளைநுவரெலியாகூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி244,59554.17%1692,51056.12%689,19232.75%62426,29747.97%30
ஐக்கிய தேசியக் கட்சி202,26444.80%1469,30942.04%4138,57250.88%8410,14546.15%26
மலையக மக்கள் முன்னணி1,1350.69%036,93913.56%238,0744.28%2
ஐக்கிய சோசலிசக் கட்சி1,0880.24%01,1520.70%03,8961.43%06,1360.69%0
சுயேட்சைகள்3900.09%01200.07%02,1310.78%02,6410.30%0
தேசிய அபிவிருத்தி முன்னணி1,3600.30%03990.24%05210.19%02,2800.26%0
ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டணி9870.22%09870.11%0
இலங்கை லிபரல் கட்சி8600.32%08600.10%0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி4190.09%01170.07%0760.03%06120.07%0
தேசிய சனநாயகக் கட்சி1780.04%01090.04%02870.03%0
ருகுண மக்கள் கட்சி1610.04%0310.01%01920.02%0
இலங்கை முன்னேற்ற முன்னணி760.02%0760.01%0
தேசிய மக்கள் கட்சி620.04%0620.01%0
இலங்கை முஸ்லிம் கட்சி530.03%0530.01%0
செல்லுபடியான வாக்குகள்451,518100.00%30164,857100.00%10272,327100.00%162888,702100.00%58
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்31,50212,46923,37567,346
மொத்த வாக்குகள்483,020177,326295,702956,048
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்880,635312,556436,2481,629,439
வாக்குவீதம்54.85%56.73%67.78%58.67%

வடமத்திய மாகாணம்

2004 சூலை 10 இல் நடைபெற்ற வடமத்திய மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணிஅனுராதபுரம்பொலன்னறுவைகூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி187,97763.92%1491,06762.19%62279,04463.34%22
ஐக்கிய தேசியக் கட்சி89,16630.32%654,53437.24%4143,70032.62%10
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு14,3914.89%114,3913.27%1
ஐக்கிய சோசலிசக் கட்சி1,2170.41%06200.42%01,8370.42%0
தேசிய அபிவிருத்தி முன்னணி8450.29%08450.19%0
சுயேட்சைகள்2220.08%01300.09%03520.08%0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி740.03%0540.04%01280.03%0
இலங்கை முன்னேற்ற முன்னணி1260.04%01260.03%0
ஐக்கிய சிங்களப் பேரவை730.02%0280.02%01010.02%0
செல்லுபடியான வாக்குகள்294,091100.00%21146,433100.00%102440,524100.00%33
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்21,6009,83131,431
மொத்த வாக்குகள்315,691156,264471,955
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்514,149254,061768,210
வாக்குவீதம்61.40%61.51%61.44%

வடமேல் மாகாணம்

2004 சூலை 10 இல் நடைபெற்ற வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணிகுருநாகல்புத்தளம்கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி362,08459.85%20128,91657.10%92491,00059.10%31
ஐக்கிய தேசியக் கட்சி215,90535.69%1295,86842.46%7311,77337.53%19
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு24,1734.00%224,1732.91%2
தேசிய அபிவிருத்தி முன்னணி6230.10%04500.20%01,0730.13%0
ஐக்கிய லலித் முன்னணி8830.15%08830.11%0
புதிய இடது முன்னணி4760.08%0890.04%05650.07%0
சுயேட்சைகள்1780.03%01950.09%03730.04%0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி2950.05%0480.02%03430.04%0
இலங்கை முன்னேற்ற முன்னணி1450.02%0150.01%01600.02%0
ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டணி1520.07%01520.02%0
இலங்கை முஸ்லிம் கட்சி830.01%0150.01%0980.01%0
ஐக்கிய சிங்களப் பேரவை910.02%0910.01%0
இலங்கை தேசிய முன்னணி430.01%0430.01%0
ருகுண மக்கள் கட்சி170.01%0170.00%0
செல்லுபடியான வாக்குகள்604,979100.00%34225,765100.00%162830,744100.00%52
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்28,0199,60037,619
மொத்த வாக்குகள்632,998235,365868,363
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்1,089,482450,0571,539,539
வாக்குவீதம்58.10%52.30%56.40%

சபரகமுவா மாகாணம்

2004 சூலை 10 இல் நடைபெற்ற சபரகமுவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணிகேகாலைஇரத்தினபுரிகூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி185,11258.90%11213,61961.07%152398,73160.04%28
ஐக்கிய தேசியக் கட்சி115,55136.77%7119,68134.22%8235,23235.42%15
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்4,2951.37%06,4251.84%110,7201.61%1
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு6,7702.15%03,7311.07%010,5011.58%0
ஐக்கிய சோசலிசக் கட்சி7980.25%01,2610.36%02,0590.31%0
மலையக மக்கள் முன்னணி1,8060.52%01,8060.27%0
ஐக்கிய லலித் முன்னணி5840.19%07070.20%01,2910.19%0
தேசிய அபிவிருத்தி முன்னணி4230.13%05120.15%09350.14%0
ஜனநாயக மக்கள் முன்னணி8540.24%08540.13%0
சுயேட்சைகள்3390.11%05000.14%08390.13%0
இலங்கை லிபரல் கட்சி2620.07%02620.04%0
ஐக்கிய சிங்களப் பேரவை840.03%0960.03%01800.03%0
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி800.03%0830.02%01630.02%0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி1580.05%01580.02%0
இலங்கை முஸ்லிம் கட்சி1330.04%01330.02%0
இலங்கை முன்னேற்ற முன்னணி630.02%0520.01%01150.02%0
தேசிய மக்கள் கட்சி620.02%0620.01%0
ருகுண மக்கள் கட்சி390.01%0390.01%0
செல்லுபடியான வாக்குகள்314,296100.00%18349,784100.00%242664,080100.00%44
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்19,77922,65242,431
மொத்த வாக்குகள்334,075372,436706,511
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்570,299647,0351,217,334
வாக்குவீதம்58.58%57.56%58.04%

தெற்கு மாகாணம்

2004 சூலை 10 இல் நடைபெற்ற தெற்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணிகாலிஅம்பாந்தோட்டைமாத்தறைகூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி238,28562.50%14141,28370.12%8182,07664.30%122561,64464.86%36
ஐக்கிய தேசியக் கட்சி139,16836.51%958,32728.95%494,44833.35%6291,94333.72%19
சுயேட்சைகள்3610.09%04090.20%04,6151.63%05,3850.62%0
ஐக்கிய சோசலிசக் கட்சி2,2780.60%01,0040.50%05340.19%03,8160.44%0
ஐக்கிய லலித் முன்னணி4720.12%03480.12%08200.09%0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி4110.11%0780.04%01820.06%06710.08%0
மக்கள் விடுதலை ஒருமைப்பாட்டு முன்னணி6170.22%06170.07%0
ஐக்கிய சிங்களப் பேரவை1590.04%0560.03%01720.06%03870.04%0
தேசிய அபிவிருத்தி முன்னணி2670.13%02670.03%0
இலங்கை லிபரல் கட்சி1860.07%01860.02%0
ருகுண மக்கள் கட்சி940.02%0940.01%0
இலங்கை முன்னேற்ற முன்னணி430.02%0430.00%0
இலங்கை தேசிய முன்னணி290.01%0290.00%0
செல்லுபடியான வாக்குகள்381,228100.00%23201,496100.00%12283,178100.00%182865,902100.00%55
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்23,63313,72516,99254,350
மொத்த வாக்குகள்404,861215,221300,170920,252
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்716,609384,361551,5061,652,476
வாக்குவீதம்56.50%55.99%54.43%55.69%

ஊவா மாகாணம்

2004 சூலை 10 இல் நடைபெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணிபதுளைமொனராகலைகூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி169,19755.48%1297,87866.24%72267,07558.99%21
ஐக்கிய தேசியக் கட்சி119,17139.08%848,93033.12%4168,10137.13%12
மலையக மக்கள் முன்னணி12,7594.18%112,7592.82%1
ஐக்கிய சோசலிசக் கட்சி2,3640.78%06160.42%02,9800.66%0
தேசிய அபிவிருத்தி முன்னணி5230.17%05230.12%0
இலங்கை முஸ்லிம் கட்சி4680.15%04680.10%0
சுயேட்சைகள்2310.08%01170.08%03480.08%0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி2460.08%0650.04%03110.07%0
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி550.04%0550.01%0
இலங்கை தேசிய முன்னணி390.03%0390.01%0
ஐக்கிய சிங்களப் பேரவை330.02%0330.01%0
இலங்கை முன்னேற்ற முன்னணி200.01%0200.00%0
செல்லுபடியான வாக்குகள்304,959100.00%21147,753100.00%112452,712100.00%34
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்25,62810,83136,459
மொத்த வாக்குகள்330,587158,584489,171
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்511,115262,742773,857
வாக்குவீதம்64.68%60.36%63.21%

மேற்கு மாகாணம்

2004 சூலை 10 இல் நடைபெற்ற மேற்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணிகொழும்புகம்பகாகளுத்துறைகூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி322,65349.11%21392,88161.35%24224,91457.27%122940,44855.65%59
ஐக்கிய தேசியக் கட்சி276,75942.12%18218,90334.19%14141,33635.99%7636,99837.69%39
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு31,1844.75%216,6212.60%122,9265.84%170,7314.19%4
ஜனநாயக மக்கள் முன்னணி12,2191.86%12,7980.44%015,0170.89%1
சனநாயக ஐக்கிய கூட்டமைப்பு6,2190.95%16,2190.37%1
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி2,1940.33%02,5640.40%04,7580.28%0
தேசிய அபிவிருத்தி முன்னணி1,3370.20%02,3610.37%08720.22%04,5700.27%0
ஐக்கிய சோசலிசக் கட்சி2,4190.38%02,1250.54%04,5440.27%0
புதிய இடது முன்னணி3,0240.46%03,0240.18%0
சுயேட்சைகள்2510.04%01,2620.20%05250.13%02,0380.12%0
ஐக்கிய லலித் முன்னணி7710.12%000.00%07710.05%0
ஐக்கிய சிங்களப் பேரவை2760.04%02360.04%05120.03%0
இலங்கை முன்னேற்ற முன்னணி1590.02%01590.01%0
இலங்கை லிபரல் கட்சி1420.02%01420.01%0
இலங்கை தேசிய முன்னணி1130.02%01130.01%0
செல்லுபடியான வாக்குகள்657,000100.00%43640,346100.00%39392,698100.00%2021,690,044100.00%104
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்45,00438,79026,625110,419
மொத்த வாக்குகள்702,004679,136419,3231,800,463
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்1,467,7511,327,145746,1383,541,034
வாக்குவீதம்47.83%51.17%56.20%50.85%

மேற்கோள்கள்

  1. "Indo Sri Lanka Agreement, 1987". TamilNation.
  2. "Introduction". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு.
  3. "Amendments to the 1978 Constitution". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு.
  4. "North-East merger illegal: SC". LankaNewspapers.com. 17 October 2006. http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html.
  5. "database/ethnic conflict/time line.shtml Ethnic Conflict of Sri Lanka: Time Line - From Independence to 1999". International Centre for Ethnic Studies9.
  6. Ferdinando, Shamindra (10 செப்டம்பர் 2000). "I'm no traitor, says Perumal". ஐலண்டு. http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm.
  7. Sri Nissanka, Jayantha (30 ஏப்ரல் 2002). "Central Provincial Council : UNF takes over". டெய்லி நியூஸ். http://www.dailynews.lk/2002/04/30/new06.html.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.