இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994

இலங்கையின் 10வது நாடாளுமன்றத் தேர்தல் 1994 ஆகத்து 16 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்திற்காக 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் 1989-இல் நடத்தப்பட்டது.

இலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல், 1994

16 ஆகத்து 1994

இலங்கை நாடாளுமன்றத்திற்கு 225 இடங்கள்
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை.
வாக்களித்தோர்76.24%
  First party Second party
 
தலைவர் சந்திரிகா குமாரதுங்க டி. பி. விஜயதுங்க
கட்சி மக்கள் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி
தலைவரின் தொகுதி கம்பகா மாவட்டம் n/a
வென்ற தொகுதிகள் 105 94
மொத்த வாக்குகள் 3,887,823 3,498,370
விழுக்காடு 48.94% 44.04%

தேர்தல் மாவட்ட வாரியாக வெற்றியாளர்கள். மமு நீலம், ஐதேக பச்சை.

முந்தைய பிரதமர்

ரணில் விக்கிரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சி

பிரதமர்-தெரிவு

சந்திரிக்கா குமாரதுங்க
மக்கள் கூட்டணி

பின்னணி

முன்னைய ஆட்சியாளர்களான ஜே. ஆர். ஜெயவர்தனா, ஆர். பிரேமதாசா ஆகியோரின் ஆட்சியில் இலங்கையின் மக்களாட்சி பெரிதும் வீழ்ச்சியைக் கண்டது. எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. விடுதலைப் புலிகள், மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றிற்கு எதிரான போர்களில் ஊடகங்களுக்கு தணிக்கை, படுகொலைகள், சித்திரவதை போன்றவை பெருமளவு இடம்பெற்றன. 1983 இல் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல்களை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவில்லை.

உள்நாட்டுப் போரினாலும், அடக்குமுறையினாலும் மக்கள் களைப்படைந்திருந்தனர். அமைதி, விடுதலை, மக்களாட்சியை மக்கள் விரும்பினர். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவி சந்திரிக்கா குமாரதுங்க சில இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து மக்கள் கூட்டணியை அமைத்தார். இலங்கைத் தமிழருடன் இணக்கப்பாட்டுக்கு வர அக்கட்சி தீர்மானித்து தேர்தலில் போட்டியிட்டது.

முடிவுகள்

மக்கள் கூட்டணி அரசு அமைக்கத் தேவையான 113 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை, ஆனாலும் சில சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது.

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
மாவட்டம்தேசியப் பட்டியல்மொத்தம்
 மக்கள் கூட்டணி 3,887,82348.949114105
 ஐக்கிய தேசியக் கட்சி 3,498,37044.04811394
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி1 10,7440.14909
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 143,3071.80617
 தமிழர் விடுதலைக் கூட்டணி 132,4611.67415
 ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் /
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் /
தமிழீழ விடுதலை இயக்கம்2
38,0280.48303
 இலங்கை முற்போக்கு முன்னணி 90,0781.13101
 மலையக மக்கள் முன்னணி3 27,3740.34101
 மகாஜன எக்சத் பெரமுன 68,5380.86000
சுயேட்சை 33,8090.43000
 ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 9,4110.12000
 நவ சமசமாஜக் கட்சி 2,0940.03000
மக்கள் சுதந்திர முன்னணி 8130.01000
 ஜனநாயக மக்கள் முன்னணி 5890.01000
 சிங்கள மகாசம்மத பூமிபுத்திர பக்சய 2670.00000
செல்லுபடியான வாக்குகள் 7,943,706100.0019629225
நிராகரிக்கப்பட்டவை 400,389
மொத்த வாக்குகள் 8,344,095
பதிவான மொத்த வாக்காளர்கள் 10,945,065
Turnout 76.24%
மூலம்: Department of Elections, Sri Lanka
1. ஈபிடிபி யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டது.
2.ஈரோசு / புளொட் / டெலோ கூட்டணி டெலோ கட்சிச் சின்னத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, கொழும்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும், சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சின்னத்தில் வன்னி மாவட்டத்திலும், சுயேட்சைக் குழுவாக யாழ்ப்பாணத்திலும் போட்டியிட்டது.
3. மலையக மக்கள் முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.