ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க, United National Party, சிங்களம்: එක්සත් ජාතික පක්ෂය) இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி. எஸ். சேனாநாயக்க ஆவார்.

ஐக்கிய தேசியக் கட்சி
United National Party
சிங்களம் nameඑක්සත් ජාතික පක්ෂය
எக்சத் ஜாதிக பக்சய
தலைவர்ரணில் விக்கிரமசிங்க
நிறுவனர்டொன் ஸ்டீபன் சேனாநாயக்க
செயலாளர்திஸ்ஸ அத்தநாயக்க
தொடக்கம்செப்டம்பர் 6, 1946 (1946-09-06)
இணைந்தவைஇலங்கை தேசிய காங்கிரஸ், சிங்கள மகா சபை, முஸ்லிம் லீக்
தலைமையகம்"சிறீகொத்தா இல்லம்" , 400 கோட்டே வீதி, பிட்டகோட்டே, கோட்டே
கொள்கைலிபரல் பழைமைவாதம்
அரசியல் நிலைப்பாடுமைய-வலம்
தேசியக் கூட்டணிஐக்கிய தேசிய முன்னணி
பன்னாட்டு சார்புபன்னாட்டு சனநாயக ஒன்றியம்
இலங்கை நாடாளுமன்றம்
106 / 225
தேர்தல் சின்னம்
யானை
இணையதளம்
www.unp.lk

கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இவரின் தலைமையின் கீழேயே கட்சி 2002 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.