இலங்கையில் தேர்தல்கள்

இலங்கையில் தேர்தல்கள் பல கட்டங்களில் நடத்தப்படுகின்றன. அரசுத்தலைவர் (சனாதிபதி) தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன. இவற்றைவிட மாகாண சபை, மாவட்ட சபை, மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான் தேர்தல்களும் நடைபெறுகின்றன.

This article is part of a series on the
politics and government of
இலங்கை

அரசுத்தலைவர் தேர்தல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை அரசுத்தலைவர் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.


8 சனவரி 2015 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்[1]
வேட்பாளர்கட்சிவாக்குகள்%
 மைத்திரிபால சிறிசேனபுதிய சனநாயக முன்னணி6,217,16251.28%
 மகிந்த ராசபக்சஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி5,768,09047.58%
ஆராச்சிகே இரத்நாயக்கா சிறிசேனதேசப்பற்றுள்ள தேசிய முன்னணி18,1740.15%
நாமல் அஜித் ராஜபக்சநமது தேசிய முன்னணி15,7260.13%
இப்ராகிம் மிஃப்லார்ஐக்கிய அமைதி முன்னணி14,3790.12%
ருவான்திலக்க பேதுருஐக்கிய இலங்கை மக்களின் கட்சி12,4360.10%
 ஐத்துருசு எம். இலியாசுசுயேட்சை10,6180.09%
துமிந்த நகமுவமுன்னிலை சோசலிசக் கட்சி9,9410.08%
 சிறிதுங்க ஜெயசூரியாஐக்கிய சோசலிசக் கட்சி8,8400.07%
சரத் மனமேந்திராபுதிய சிங்கள மரபு6,8750.06%
 பானி விஜயசிறிவர்தனசோசலிச சமத்துவக் கட்சி4,2770.04%
 அனுருத்த பொல்கம்பொலசுயேட்சை4,2600.04%
 சுந்தரம் மகேந்திரன்நவ சமசமாஜக் கட்சி4,0470.03%
முத்து பண்டார தெமினிமுல்லஅனைவரும் குடிகள், அனைவரும் அரசர்கள் அமைப்பு3,8460.03%
பத்தரமுல்லே சீலாரத்தனஜன செத்த பெரமுன3,7500.03%
பிரசன்னா பிர்யங்காராசனநாயக தேசிய இயக்கம்2,7930.02%
ஜெயந்தா குலதுங்கஐக்கிய இலங்கை பாரிய பேரவை2,0610.02%
விமால் கீகனகேஇலங்கை தேசிய முன்னனி1,8260.02%
செல்லுபடியான வாக்குகள்12,123,452100.00%
நிராகரிக்கப்பட்டவை140,925
மொத்த வாக்குகள்12,264,377
பதிவு செய்த வாக்காளர்கள்15,044,490
வாக்களிப்பு வீதம்81.52%

நாடாளுமன்றத் தேர்தல்

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் 196 உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மிகுதி 29 உறுப்பினர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஒன்று பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சி ஒன்று தேசிய ரீதியில் மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சி செயலாலரினால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் 29 பேர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் தொகுப்பு
கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
மாவட்டம்தேசியமொத்தம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 4,846,38860.33%12717 144
ஐக்கிய தேசிய முன்னணி3 2,357,05729.34%51960
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு4 233,1902.90%13114
ஜனநாயகத் தேசியக் கூட்டணி 441,2515.49%527
சுயேட்சைப் பட்டியல்கள் 38,9470.48%000
மலையக மக்கள் முன்னணி2 24,6700.31%000
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 20,2840.25%000
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர பக்சய 12,1700.15%000
தமிழ்ர் ஐக்கிய விடுதலை முன்னணி 9,2230.11%000
தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி5 7,5440.09%000
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 6,0360.08%000
சிறீ லங்கா தேசிய முன்னணி 5,3130.07%000
ஏனையோர் 31,6440.39%000
செல்லுபடியானவை 8,033,717100.00%19629225
நிராகரிக்கப்பட்டவை 596,972
மொத்தமாக வாக்களித்தோர் 8,630,689
பதிவுசெய்த வாக்காளர்கள் 14,088,500
Turnout 61.26%
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்
1. ஈபிடிபி கட்சி வன்னியில் தனித்தும், ஏனைய மாவட்டங்களில் ஐமவிகூ உடன் இணைந்தும் போட்டியிட்டது.
2. மமமு பதுளை, நுவரெலியா ஆகியவற்றில் தனித்தும், ஏனையவற்றில் ஐமவிகூ இல் இணைந்தும் போட்டியிட்டது.
3. ஐதேமு ஐதேகயின் பெயரிலும் அதன் சின்னத்திலும் போட்டியிட்டது.
4. டிஎன்ஏ இதக இன் பெயரிலும் சின்னத்திலும் போட்டியிட்டது.
5. ததேமமு (TNPF) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயரில் யாழ், திருகோணமலை மாவட்டங்களில் மட்டும் போட்டியிட்டது.

கடந்தகாலத் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்

வெளி இணைப்புகள்

  1. "Presidential Election – 2015, All Island Final Result". slelections.gov.lk. இலங்கை தேர்தல் திணைக்களம் (9 சனவரி 2015). பார்த்த நாள் 9 சனவரி 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.