மலையக மக்கள் முன்னணி
மலையக மக்கள் முன்னணி (Up-Country People's Front) இலங்கையில் இயங்கிவரும் அரசியல் கட்சியும் தொழிற் சங்கமுமாகும். இது பொதுவாக இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்திவந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஏற்பட்ட தலைமைத்துவ சிக்கல் காரணமாக இ.தொ.கா.விலிருந்து விலகிய பெரியசாமி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்தார்.[1] இது வரையிலும் அவரே அதன் தலைவராகவும் காணப்படுகிறார். இக்கட்சி ஏனைய மலையகக் கட்சிகளை விட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலையையும் அதன் தலைமையுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணி Up-Country People's Front | |
---|---|
தலைவர் | வே. இராதாகிருஷ்ணன் |
பொதுச் செயலாளர் | அந்தனி லோரன்ஸ் |
நிறுவனர் | பெரியசாமி சந்திரசேகரன் |
தொடக்கம் | 1989 |
தலைமையகம் | அட்டன், இலங்கை |
இளைஞர் அமைப்பு | மலையக இணைஞர் முன்னணி |
தேசியக் கூட்டணி | தமிழ் முற்போக்கு கூட்டணி |
தேர்தல் சின்னம் | |
மண்வெட்டி | |
கட்சிக்கொடி | |
சிவப்பு, கருப்பு |
1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தையும் 2003 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 1 ஆசனத்தையும் தேசியபட்டியலில் 1 ஆசனத்தையும் வென்றது.
குறிப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.