இலட்சத்தீவுகள்

லட்சத்தீவுகள் (Lakshadweep) இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது.

இலட்சத்தீவுகள்
ലക്ഷദ്വീപ്

Lakshadweep
ஒன்றியப் பகுதி
ஆள்கூறுகள்: 10.6°N 72.6°E / 10.6; 72.6
நாடு இந்தியா
நிறுவப்பட்டது1 நவம்பர் 1956
நலைநகர்கவரத்தி
அரசு
  நிருவாகிபாரூக் கான்
  நா.உமுகம்மது பைசல் (தேசியவாத காங்கிரசு கட்சி)
பரப்பளவு
  மொத்தம்32
பரப்பளவு தரவரிசை36வது
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)
  மொத்தம்65,473
  அடர்த்தி2
மொழிகள்[1]
  உரிமைப்படிமலையாளம் ,ஆங்கிலம்
  நடப்பின்படிதிவெயி மொழி
  மேலதிகமான மொழிஇந்தி
இனம்
  இனக்குழுக்கள்≈84.33% மலையாளிகள்
≈15.67% மாகிகள்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-LD
வாகனப் பதிவுLD
மொத்த மாவட்டங்கள்1
பெரிய நகரம்ஆந்தரோத்
HDI
0.796
HDI Year2005
HDI Categoryhigh
இணையதளம்www.lakshadweep.gov.in
இலட்சத்தீவின் வரைபடம்

முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும்.

வரலாறு

இலட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது. மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. கேரளத்தின் கடைசி சேர மன்னரான சேரமான் பெருமாள் காலத்தில் இந்த தீவுகளில் முதல் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாகப் புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன.[2] தீவுக் கூட்டத்தில் குடியேற்றங்கள் நிகழ்ந்த பழமையான குடியேற்றங்கள் அமைந்த தீவுகள் அமீனி, கால்பினி ஆண்ட்ரோட், கவரத்தி மற்றும் அகட்டி போன்றவை ஆகும். கி.பி. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் புத்தமதம் இந்த பிராந்தியத்தில் நிலவியதாக தொல்பொருள் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.[3] இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது. பிரபலமான நம்பிக்கையின்படி, கி.பி. 661 இல் உப்பிதாலா என்ற அரேபியரால் இஸ்லாம் இலட்சத்தீவுக்கு கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது. அவரது கல்லறை ஆண்ட்ரோட் தீவில் அமைந்துள்ளது.[4] 11 ஆம் நூற்றாண்டின் போது, தீவுகள் சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்தன அதன் பின்னர் கேனானோர் இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதியாக ஆனது.[5]

1787 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானின் ஆட்சியின் கீழ் அமினிதிவி தீவுகள் (ஆண்ட்ரோத், அமிணி, கத்மத், கில்தான், சேத்லாத் மற்றும் பிட்ரா) வந்தன. மூன்றாம் ஆங்கில-மைசூர் போருக்குப் பின்னர் அவை பிரித்தானியக் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அவை தென் கான்ரா நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டன. இந்த தீவுகள் பின்னர் பிரித்தானிய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்துணன் இணைக்கப்பட்டன.[6]

விடுதலைக்குப் பின்பு

1956 நவம்பர் 1 அன்று, இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, லட்சத்தீவுகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனியான யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. 1973 நவம்பர் 1 அன்று, லட்சத்தீவுகள், மினிகோய் மற்றும் அமிண்டிவி தீவுகள் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது.[7]

மத்திய கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு வரும் முக்கிய கப்பல் பாதைகளைப் பாதுகாக்க, ஒரு இந்திய கடற்படை தளமான, ஐஎன்எஸ் டிவீரகாஷாக், கவரட்டி தீவில் அமைக்கப்பட்டது.[8]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இலட்சத்தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 21.93% மக்களும், நகரப்புறங்களில் 78.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.30% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 33,123 ஆண்களும் மற்றும் 31,350 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 946 வீதம் உள்ளனர். 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இலட்சத்தீவுகளில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,149 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 91.85 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 95.56 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 87.95 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,255 ஆக உள்ளது. [9]

சமயம்

இலட்சத் தீவுகளில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,788 (2.77 %) ஆகவும் இசுலாமிய மலையாளிகள் மக்கள் தொகை 62,268 (96.58 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 317 (0.49 %) ஆகவும், பிற சமயத்தினர் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளனர்.

மொழிகள்

இலட்சத் தீவின் ஆட்சி மொழியான மலையாள மொழியுடன், ஆங்கிலம் மற்றும் திவேகி, ஜெசெரி ஆகிய வட்டார மொழிகள் பேசப்படுகின்றன.

பொருளாதரம்

மீன் பிடித்தல், மீன் பதப்படுத்தம் தொழில்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல், இத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டுகிறது.

போக்குவரத்து மற்றும் சுற்றுலா

அகத்தி வானூர்தித் தளம் கொச்சி மற்றும் பெங்களூரு நகரங்களை வான் வழியாக இணைக்கிறது.[10] மேலும் ஆறு பயணி கப்பல்கள் கொச்சி துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது.[11]

இந்தியச் சுற்றுலா பயணிகளும் இலட்சத் தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலட்சத்தீவின் சில பகுதிகளுக்கு சுற்றுலா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.[12] பங்கராம் தீவு தவிர மற்ற பகுதிகளில் மதுபானம் அருந்த தடை செய்யப்பட்டுள்ளது.[13]

மேற்கோள்கள்

  1. "50th Report of the Commissioner for Linguistic Minorities in India" (16 July 2014). மூல முகவரியிலிருந்து 8 July 2016 அன்று பரணிடப்பட்டது.
  2. “Lakshadweep & It's People 1992-1993” Planning Department, Govt. Secretariat, Lakshadweep Administration, Kavaratti. Page: 12.
  3. "Marine investigations in the Lakshadweep Islands, India.". thefreelibrary.com. பார்த்த நாள் 1 August 2012.
  4. "History". lakshadweep.nic.in. பார்த்த நாள் 1 August 2012.
  5. "Lakshadweep". Encyclopædia Britannica, Inc.. பார்த்த நாள் 2 August 2012.
  6. Logan, William (1887). Malabar Manual. New Delhi: Asian Education Services. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0446-6. https://books.google.com/books?id=9mR2QXrVEJIC&lpg=PP1&pg=PA2#v=onepage&q=Palghat&f=false.
  7. "Lakshadweep" (English). World Statesmen. பார்த்த நாள் 8 October 2016.
  8. "Navy commissions full-scale station in Lakshadweep". The Hindu. 1 May 2012. http://www.thehindu.com/news/states/kerala/article3370886.ece. பார்த்த நாள்: 9 May 2012.
  9. Lakshadweep Population Census data 2011
  10. "Kochi to Agatti Flights and their Schedule". Mapsofindia.com (2014-09-08). பார்த்த நாள் 2015-02-25.
  11. "Means of Transport". Union Territory of Lakshadweep. பார்த்த நாள் 1 August 2012.
  12. "Entry Permits". Union Territory of Lakshadweep. பார்த்த நாள் 25 February 2015.
  13. "Introduction to Lakshadweep Islands". The New York Times. பார்த்த நாள் 1 August 2012.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.