யூ.எசு. ஓப்பன்

அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகள் அல்லது யூ. எசு. ஓப்பன் (யூ. எஸ். ஓப்பன், US Open), ஆண்டுதோறும் நடைபெறுகின்ற, "கிராண்ட் சிலாம்" (Grand Slam) என்றழைக்கப்பட்ட, பெருவெற்றித் தொடர் டென்னிசு போட்டிகளில் ஒன்றாகும். 1881ஆம் ஆண்டு, முதலில் ஆண்கள் ஒற்றையர் போட்டியுடன் துவங்கிய, யூ.எசு.தேசிய சாதனையாளர் போட்டியின் தற்கால வடிவமே, இப்போட்டியாகையால் உலகின் மிகப் பழமையான டென்னிசுப் போட்டியாகக் கருதப்படுகிறது. 1987ஆம் ஆண்டிலிருந்து, பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்போட்டி, ஆண்டில் கடைசியிலும் நான்காவதாகவும் நடைபெறும் சாதனைப்போட்டியாக விளங்குகிறது. நியூயார்க் நகரில் குயீன்சு பகுதியில் அமைந்த பில்லி சீன் கிங் (Billie Jean King) தேசிய டென்னிசு மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிற இப் பந்தய விளையாட்டில் குறைந்தது 600 ஆண்களும் பெண்களும் போட்டியிடுகின்றனர். ஆகத்து இறுதியிலும் செப்டம்பர் துவக்கத்திலும் இரண்டு வாரங்களில் நடைபெறும் இப்போட்டிகள் ஒற்றையர் (ஆண்), இரட்டையர் (ஆண்கள்), ஒற்றையர் (பெண்), இரட்டையர் (பெண்) , மற்றும் இருபாலர் இரட்டையர் பிரிவுகளில் நடைபெறுகின்றன. தொழில்நெறியர்களும் (professional), தனியார்வநெறியர்களும் (அமெச்சூர்களும்) கலந்துகொள்ள முடியுமாதலால் இது "திறந்த போட்டிகள்" என வழங்கப்படுகிறது.

அமெரிக்கத் டென்னிசு திறந்த போட்டிகள்
யூ. எசு. ஓப்பன்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்)
இடம்குயீன்சு, நியூயார்க் நகரம்
 ஐக்கிய அமெரிக்கா
கூடும் இடம்பில்லி சீன் கிங் தேசிய டென்னிசு மையம்
தரைபுல்தரை - வெளிப்புறம்
(18811974)
களிமண் தரை - வெளிப்புறம்
(19751977)
செயற்கைத்தரை - வெளிப்புறம்
(1978நடப்பு)
ஆண்கள் தேர்வு128S / 128Q / 64D
பெண்கள் தேர்வு128S / 96Q / 64D
பரிசுப் பணம்$34,252,000 (2013)
அதிகாரபூர்வ இணையத்தளம்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்

நான்கு பெருவெற்றித் தொடர் டென்னிசு போட்டிகளில், இங்கு மட்டுமே கடைசி ஆட்டத்தொகுப்பில் சமநிலைமுறிவுத் தீர்வு (final-set tiebreaks) கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

நியூபோர்ட் கேசினோ டென்னிஸ் மைதானம்

இப்போட்டி தொடக்கக் காலத்தில், குமுகத்தில் (சமூகத்தில்) உயர் மட்டத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தது. இப்போட்டி 1881 ம் ஆண்டு றோட் தீவிலுள்ள (Rhode Island) நியூப்போர்ட் நகரின் நியூப்போர்ட் காசினோவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கு ஆண்கள் ஒற்றையர் போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. முதல் ஆண்டு மட்டுமே அமெரிக்க டென்னிசுச் சங்கத்தின் உறுப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். 1884 முதல் 1911 வரை அறைகூவல் முறையை (challenge system) கடைபிடித்தது, அதன்படி நடப்பு வெற்றியாளர் அடுத்த ஆண்டு இறுதி போட்டிக்கு எப்போட்டியிலும் விளையாடாமலேயே தானாக தகுதி பெற்றவர் ஆகிடுவார். 1915ல் நியூயார்க்கின் பாரஃசுட்டு ஃகில் (Forrest Hill) பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிசு சங்கத்துக்கு இப்போட்டி நடக்குமிடம் நகர்த்தப்பட்டது. 1921 முதல் 1923 வரை இப்போட்டி பிலடெல்பியா நகரிலுள்ள செருமன்டவுன் கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றாது. பின் மீண்டும் 1924ம் ஆண்டு பாரஃசுட்டு ஃகில் பகுதிக்கு திரும்பியது.

அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து 1887ம் ஆண்டு பிலடெல்பியா கிரிக்கெட் சங்கத்தில் அமெரிக்க பெண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டது, இரண்டு ஆண்டுகள் கழித்து 1889ல் பெண்களுக்கான இரட்டையர் போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்காவின் முதல் கலப்பு இரட்டையர் போட்டி பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் நடக்கும் போது அதனுடன் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான இரட்டையர் போட்டி 1900ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த பந்தயங்கள் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனி தனியாக நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையே போட்டி வைக்கப்பட்டு தேசிய வாகையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968-இல் திறந்த போட்டிகள் காலம் தொடங்கியவுடன் 5 போட்டிகளும் அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகளுடன் இணைக்கப்பட்டன. இப்பந்தயங்கள் பாரஃசுட்டு ஃகில் பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிசு சங்கத்தில் நடத்தப்பட்டன. 1968ல் இருந்து இப்போட்டியில் தொழில்நெறியாள ஆட்டக்காரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அந்த ஆண்டு 96 ஆண்களும் 63 பெண்களும் கலந்துகொண்டார்கள், அப்போட்டியில் அளிக்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை 100,000 அமெரிக்க டாலர்களாகும்.

1970 ம் ஆண்டில் யூ.எசு. ஓப்பன் கிராண்ட் சிலாம் பந்தயங்களிலேயே முதல் முறையாக சமநிலைமுறிவுத் தீர்வு முறையைப் பயன்படுத்தியது. இப்போதும் யூ.எசு. ஓப்பனிலேயே இறுதித் தொகுப்பாட்டத்தில் (செட்டில், set) சமநிலைமுறிவுத் தீர்வு முறை பின்பற்றப்படுகிறது. மற்ற மூன்று கிராண்ட் சிலாம் பந்தயங்களில் இம்முறை இல்லை. அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகள் புல் தரையிலேயே நடைபெற்றன, 1975ம் ஆண்டு களிமண் தரைக்கு ஆட்டம் நடக்கும் பாரஃசுட்டு ஃகில் விளையாட்டரங்கம் மாறியது. மூன்று ஆண்டுகள் கழித்து 1978ல் பாரஃசுட்டு ஃகில் பகுதியில் இருந்து தற்போது ஆட்டம் நடக்கும் பிளசிங் மெடோசுப் பகுதிக்கு விளையாட்டரங்கம் மாறியதும் இதன் செயற்கை தரையைப் பயன்படுத்தி ஆட்டம் நடைபெறுகிறது.

சிம்மி கான்னர்சு (Jimmy Connors) என்பவரே யூ.எசு. ஓப்பனின் மூன்று ஆடுதளத்திலும் வெற்றிபெற்றவராவார். இரண்டு ஆடுதளங்களில் வெற்றி பெற்ற ஒரெ பெண் கிரிசு எவெர்ட் (Chris Evert) என்பவரே.

ஆட்டக்காரர் முறையீடு

2006-இல் யூ.எசு. ஓப்பனில் கழுகுக் கண் என்ற கணினி கட்டமைப்பு மூலம் விளையாடுபவர் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிட்டால் அதனை உடனடி நிகழ்பட மீள்பார்வை ஆய்வுக்கு உட்படுத்தும் வசதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒர் ஆட்டத்தொகுப்பில் (set) மூன்று முறை மட்டும் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிடலாம். சமநிலைமுறிவுத் தீர்வில் ஒரு முறை முறையிடலாம். ஆட்டக்காரரின் முறையீடு சரி என்று தீர்ப்பானால் அந்த முறையீடு ஆட்டக்காரரின் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படாது. ஆட்டக்காரரின் முறையீடு தவறு என்று தீர்ப்பானால், ஆட்டக்காரர் ஒரு முறையீட்டு உரிமையை இழந்துவிடுவார். 2009-க்கு முன்பு வரை உடனடி நிகழ்பட மீள்பார்வை ஆய்வுக்கு உட்படுத்தும் வசதி ஆர்தர் ஆசே மற்றும் ஆர்ம்சிட்ராங் தளங்களில் மட்டுமே இருந்தது.

முறையீடு செய்யப்பட்டால் உடனடி நிகழ்பட மீள்பார்வை மூலம் திரையில் ஆட்டத்தை பார்க்கும் வசதி தற்போது ஆட்டக்காரர், நடுவர், ஆடுதளத்தில் இருக்கும் பார்வையாளர் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர் ஆகிய யாவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்கின்றது . 2006 யூ.எசு. ஓப்பனின் போது இந்த முறையின் கீழ் முறையீடு செய்த 30.5% ஆண்கள் 35.85% பெண்களின் முறையீடுகள் தவறென தீர்ப்பளிக்கப்பட்டது.


ஆடு தளம்

ஆர்தர் ஆஷ் விளையாட்டரங்கம்

பிளசிங் மெடோசில் உள்ள திடல்கள்களில் செயற்கைத்தரை பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் உராய்வு குறைவு என்பதால் மற்ற செயற்கைதரை ஆடுதளங்களை விட இதில் பந்து வேகமாகச் செல்கின்றது மட்டுமன்றி மேலெலும்பும் உயரமும் குறைவாக இருக்கும்.

இதன் முதன்மை திடலான ஆர்தர் ஆழ்சேயில் 22,547 இருக்கைகள் உள்ளன, இது 1997ல் திறக்கப்பட்டது. ஆர்ம்சிட்ராங் திடலில் 18,000 இருக்கைகள் இருந்தன, ஆர்தர் திடல் திறக்கப்பட்டதும் இதன் இருக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆக குறைக்கப்பட்டது. ஆர்ம்சிட்ராங் திடல் 1978ல் திறக்கப்பட்டது, இதுவே 1978-96 வரை முதன்மைத் திடலாக இருந்தது.

இங்குள்ள அனைத்து திடல்களும் ஒளியூட்டப்பட்டு உள்ளதால் வெளிச்சம் குறைவாக இருக்கும் நேரங்களிலும் இரவிலும் ஆடலாம். மாலையில் விளையாடும் வசதி உள்ளதால் தொலைக்காட்சிகளின் முதன்மை நேரமான மாலையில் இங்கு நடக்கும் விளையாட்டுகளை நேரடி ஒளிபரப்ப முடியும்.

தொலைக்காட்சியில் பந்து தெளிவாக தெரிவதற்காக 2005ல் இருந்து அனைத்து திடல்களின் உட்புறம் (விளையாடும் இடம்) நீல நிற பூச்சு பூசப்பட்டுள்ளது. வெளிப்புற திடல் பச்சை நிறமாகும்.

பரிசு பணம்

2013 அமெரிக்க ஓபன் சாம்பியன் மொத்த பரிசு தொகை 2012 பருவத்தில் ஒப்பிடும்போது சுமார் பத்து மில்லியன் டாலர்கள் அதிகரிக்கிறது. இது $ 34,252,000 (அமெரிக்க டாலர்கள்) ஆகும். பரிசு பணத்தை பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.:[1]

நிகழ்வுகள் வெ அ.இ கா.இ சு 4 சு 3 சு 2 சு 1 த.சு 3 த.சு 2 த.சு 1 மொத்தம்
ஒற்றையர் 128 ட்ரா $1,900,000 $950,000 $475,000 $237,500 $120,000 $65,000 $37,000 $23,000 $8,638 $5,775 $3,000 $9,406,000
இரட்டையர்* 64 ட்ரா $420,000 $210,000 $105,000 $50,000 - $26,000 $16,000 $11,000 - - - $3,712,000
கலப்பு இரட்டையர்* 32 ட்ரா $150,000 $70,000 $30,000 $15,000 - - $10,000 $5,000 - - - $500,000

*அணிக்கு வழங்கப்படும் தொகை

வெ = வெற்றி
இ = இறுதி போட்டி (இரண்டாம் இடம்)
அ.இ = அரையிறுதி ஆட்டம்
கா.இ = காலிறுதி ஆட்டம்
சு = சுற்று
த.சு = தகுதிச் சுற்று

வெற்றியாளர்கள்

ஆட்டம் வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2014 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் மரின் கிளிக் கேய் நிசிகோரி6-3, 6-3, 6-3
2014 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் செரீனா வில்லியம்ஸ் கரோலின் வோசுநியாகி6–3, 6-3
2014 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் பாப் பிரையன்
மைக் பிரையன்
மார்க் லோபசு
மார்செல் கிரனோல்ர்சு
6-3, 6-4
2014 பெண்கள் இரட்டையர் ஆட்டம் எலனா வெசுனிகா
எகெடெரினா மாக்கர்வா
மார்ட்டினா கின்சசு
பிலவியா பென்னட்டா
6-2, 3-6, 6-2
2014 கலப்பு இரட்டையர் ஆட்டம் சானியா மிர்சா
புருனோ சோரெசு
அபிகேல் சிபியர்சு
சாண்டியாகோ கான்சாலசு
6–1, 2–6, [11–9]
2013 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ரஃபேல் நடால் நோவாக் ஜோக்கொவிச்6–2, 3–6, 6–4, 6–1
2013 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் செரீனா வில்லியம்ஸ் விக்டோரியா அசரென்கா7–5, 6–7(6–8), 6–1
2013 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் லியாண்டர் பயஸ்
ராடெக் ஸ்டெபனெக்
அலெக்ஸ்யான்டர் பேயா
புருனோ சோரெஸ்
6–1, 6–3
2013 பெண்கள் இரட்டையர் ஆட்டம் ஆண்ட்ரியா ஹ்லவக்கோவா
லூஸீ ஹ்ராடெக்கா
அஷ்லேக் பார்டி
கேஸி டெல்லாக்குஅ
6–7(4–7), 6–1, 6–4
2013 கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆண்ட்ரியா ஹ்லவக்கோவா
மேக்ஸ் மிர்ன்யி
அபிகேல் ஸ்பியர்ஸ்
சாண்டியாகோ கோன்சலஸ்
6–7(8–10), 6–1, [12–10]
2012 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆண்டி முர்ரே நோவாக் ஜோக்கொவிச்7–6(12–10), 7–5, 2–6, 3–6, 6-2
2012 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் செரீனா வில்லியம்ஸ் விக்டோரியா அசரென்கா62, 26, 75
2012 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் பாப் பிரையன்
மைக் பிரையன்
லியாண்டர் பயஸ்
ராடக் இசுப்னெக்
6–3, 6–4
2012 பெண்கள் இரட்டையர் ஆட்டம் சாரா எர்ரானி
இரபர்ட்டா வின்சி
அண்டிரியா அல்வகோவா
லூசி எர்டக்கா
6–4, 6–2
2012 கலப்பு இரட்டையர் ஆட்டம் எக்குதிரின் மக்காருவா
புருனோ சோரச
கெவட்டுசலவ்வா பெசுக்கோவா
மார்க்கின் மெட்காவசுக்கி
6–7(8–10), 6–1, [12–10]
2011 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் நோவாக் ஜோக்கொவிச் ரஃபயெல் நதால் 62, 64, 67, 61
2011 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் சமந்தா ஸ்டோசர் வீனஸ் வில்லியம்ஸ்62, 63
2011 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் ஜுர்கென் மெல்சர்
பிலிப் பெட்ச்சனர்
மாரிச் பிரைஸ்டன்பர்க்
மார்சின் மாட்கோச்கி
62, 62
2011 பெண்கள் இரட்டையர் ஆட்டம் லிய்செல் ஹபர்
லிசா ரேமண்ட்
வானியா கிங்
யாரோஸ்லேவா ஷ்வெடோவா
46, 76, 76
2011 கலப்பு இரட்டையர் ஆட்டம் மெலெனின் ஔடின்
ஜேக் சாக்
கிஸேலா டுல்லகோ
எட்ருஅடோ ஸ்வாங்
76, 46, 76
2010 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ரஃபயெல் நதால் நோவாக் ஜோக்கொவிச்64, 57, 64, 62
2010 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் கிம் கிளிஸ்டர்ஸ் வெரா ஸ்வோனரேவா62, 61
2010 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் பாப் பிரயன்
மைக் பிரயன்
ரோகன் போபன்னா
அய்சம்-அல்-ஹக் குரேசி
76, 76
2010 பெண்கள் இரட்டையர் ஆட்டம் வானியா கிங்
யாரோஸ்லேவா ஷ்வெடோவா
லிய்செல் ஹபர்
நாடியா பெட்ரோவா
26, 64, 76(4)
2010 கலப்பு இரட்டையர் ஆட்டம் லிய்செல் ஹபர்
பாப் பிரயன்
க்வெட்டா பெச்கெ
அய்சம்-அல்-ஹக் குரேசி
64, 64

நடப்பு வெற்றியாளர்கள்

ஆட்டம் வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2016 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா நோவாக் ஜோக்கொவிச்6–7(1–7), 6–4, 7–5, 6–3
2016 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் ஏஞ்சலிக் கெர்பர் புலிச்கோவா6–3, 4–6, 6–4
2016ஆண்கள் இரட்டையர் ஆட்டம் சேம்மி முர்ரே
புருனோ சோரெசு
காரினோ பசுட்டா
கார்சியா லோபசு
6-3, 6-3
2016 பெண்கள் இரட்டையர் ஆட்டம் மாட்டெக் இசுடேன்சு '
சவரோவா
கார்சியா
மால்டோனாவிக்
2–6, 7–6(7–5), 6–4
2016 கலப்பு இரட்டையர் ஆட்டம் லாரா செய்குமண்ட்
பாவிக்
இராம்
வான்டேவேகே
6–4, 6-4

மேற்கோள்கள்

  1. "US Open Prize Money". USTA. பார்த்த நாள் August 23, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.