நோவாக் ஜோக்கொவிச்
நோவாக் ஜோக்கொவிச் (செர்பிய மொழி: Новак Ђоковић, IPA: [ˈnɔvaːk 'ʥɔːkɔviʨ],
![]() | ||
செல்லப் பெயர் | நோல்,[1] த ஜோக்கர்[2] | |
நாடு | ![]() | |
வசிப்பிடம் | ![]() | |
பிறந்த திகதி | மே 22, 1987 | |
பிறந்த இடம் | பெல்கிரேட், செர்பியா அப்பொழுது யுகோசிலாவியா | |
உயரம் | 1.87 m (6 ft 1 1⁄2 in) | |
நிறை | 80.0 kg (176.4 lb; 12.60 st) | |
தொழில்ரீதியாக விளையாடியது | 2003 | |
விளையாட்டுகள் | வலது கை; இரட்டை கை பின் அடி | |
வெற்றிப் பணம் | $ 7,955,470 | |
ஒற்றையர் | ||
சாதனை: | 158 - 59 | |
பெற்ற பட்டங்கள்: | 10 | |
அதி கூடிய தரவரிசை: | 3 (ஜூலை 9 2007) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | வெற்றி (2008,2011,2012, 2013, 2015 , 2016, 2019) | |
பிரெஞ்சு ஓப்பன் | அரையிறுதி (2007, 2008, 2011) வெற்றி (2016) | |
விம்பிள்டன் | அரையிறுதி (2007, 2010), வெற்றி (2011,2014,2015) | |
அமெரிக்க ஓப்பன் | அரையிறுதி (2008, 2009), இறுதி (2007,2010, 2016), வெற்றி (2011, 2015, 2018) | |
இரட்டையர் | ||
சாதனைகள்: | 15 - 25 | |
பெற்ற பட்டங்கள்: | 0 | |
அதிகூடிய தரவரிசை: | 134 (ஆகஸ்ட் 20 2007) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | {{{AustralianOpenDoublesresult}}} | |
பிரெஞ்சு ஓப்பன் | {{{FrenchOpenDoublesresult}}} | |
விம்பிள்டன் | {{{WimbledonDoublesresult}}} | |
அமெரிக்க ஓப்பன் | {{{USOpenDoublesresult}}} |
ஆசுதிரேலிய ஓப்பன் மற்றும் யூ. எசு. ஓப்பன்
ஜனவரி 2008 ஆஸ்திரேலியன் ஓப்பனில் தனது முதலாம் பெருவெற்றி (கிராண்ட் ஸ்லாம்) போட்டியை வென்றுள்ளார். பெருவெற்றித்தொடர் போட்டி ஒன்றில் பட்டம் வென்ற முதல் செர்பிய டென்னிஸ் வீரர் இவரே.இதனை அடுத்து 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் மற்றும் யூ.எசு. ஓப்பன் ஆகிய மூன்று பெருவெற்றிப் போட்டிகளிலும் வென்றுள்ளார். இதனால் ஒரே நாட்காட்டியாண்டில் மூன்று பெருவெற்றித் தொடர் போட்டிகளை வென்ற ஆறாவது விளையாட்டுக்காரராக விளங்குகிறார். 2010ஆம் ஆண்டு டேவிசுக் கோப்பையை வென்ற அணியில் பங்கெடுத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு போலவே 2015ஆம் ஆண்டும் மூன்று போட்டிகளை வென்றவர் இவர்.
2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ரஃபயெல் நதாலை 5-7, 6-4, 6-2, 6-7 (5), 7-5 என்று ஐந்து தொகுப்புகளில் வென்று வெற்றி பெற்றார். 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ஆண்டி முர்ரேவை 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார். ஏழு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார். இது சாதனையாகும். ராய் எமர்சென் என்பவர் தான் இவருக்கு முன் ஆறு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் மூன்று முறை தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார்.
விம்பிள்டன்
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடந்த விம்பிள்டன் ஆடவர் இறுதிச்சுற்றுகளில் வென்று விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இரண்டு முறையும் இவருக்கு எதிராக ஆடி, தோல்வி அடைந்தவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோசர் பெடரர் ஆவார்.
மேற்கோள்கள்
- "The Official Internet Site of Novak Djokovic". பார்த்த நாள் 2007-08-14.
- Pearce, Linda (2008-01-12). "The man they call the Djoker". The Age. பார்த்த நாள் 2008-01-31.