ஆண்டி முர்ரே

ஆண்ட்ரூ "ஆண்டி" முர்ரே (Andrew "Andy" Murray, பிறப்பு: மே 15, 1987 ஒரு ஸ்காட்லாந்தின் தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். இவர் தற்போது உலகின் நான்காவது இடத்திலும்,[1] 2009 ஆகஸ்ட் 17 முதல் 31 வரையில் ஏடிபி தரவரிசைப் பட்டியலில் 2 வது இடத்திலும் உள்ளார்.[2] முதன்முறையாக முதல் பத்து இடங்களுக்குள் ஏப்ரல் 16, 2007இல் இடம் பிடித்தார். இதுவரை மூன்று பெருவெற்றித் தொடர்களில் இறுதி ஆட்டத்தில் ஆடித் தோல்வி கண்டுள்ளார்:யூ.எசு. ஓப்பன் (2008), ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (2010), (2011). 2011ஆம் ஆண்டில் திறந்த சுற்று டென்னிசில் ஒரே ஆண்டில் நான்கு பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய ஏழாவது டென்னிசுக்காரராக சாதனை படைத்தார்.[3] 2012 ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரரை 6-2, 6-1, 6-4 என்ற நேர் கணங்களில் வென்று தங்கப்பதக்கம் பெற்றார்.[4] 2012ல் யூ.எசு. ஓப்பன் பட்டத்தை வென்றார். இது இவரது முதலாவது பெருவெற்றி டென்னிசு பதக்கமாகும் [5]. 76 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியாவை சேர்ந்தவர் வெல்லும் பெருவெற்றி டென்னிசு பதக்கம் இதுவாகும். 2013ல் விம்பிள்டன் பதக்கத்தை பெற்றார். 77 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியாவை சேர்ந்த ஆடவர் ஒருவர் வெல்லும் விம்பிள்டன் டென்னிசு பதக்கம் இதுவாகும்.[6]

ஆண்டி முர்ரே
நாடு பெரிய பிரித்தானியா
வசிப்பிடம்லண்டன், இங்கிலாந்து
பிறந்த திகதிமே 15, 1987 (1987-05-15)
பிறந்த இடம்கிளாஸ்கோ, Scotland
உயரம்1.90 m (6 ft 3 in)
நிறை84 kg (185 lb; 13.2 st)
தொழில்ரீதியாக விளையாடியது2005
விளையாட்டுகள்வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
வெற்றிப் பணம்US$17,875,016[1]
ஒற்றையர்
சாதனை:585-171
பெற்ற பட்டங்கள்:37
அதி கூடிய தரவரிசை:நம். 2 (17 ஆகத்து 2009)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்தோல்வி (2010, 2011, 2013, 2015, 2016)
பிரெஞ்சு ஓப்பன்தோல்வி (2016)
விம்பிள்டன்வெற்றி (2013,2016) தோல்வி (2012)
அமெரிக்க ஓப்பன்வெ (2012) தோ (2008)
இரட்டையர்
சாதனைகள்:36–48
பெற்ற பட்டங்கள்:2
அதிகூடிய தரவரிசை:நம்பர். 52 (10 அக்டோபர் 2011)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்1 சுற்று (2006)
பிரெஞ்சு ஓப்பன்2 சுற்று (2006)
விம்பிள்டன்1 சுற்று (2005)
அமெரிக்க ஓப்பன்2 சுற்று (2008)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: செப்டம்பர் 2012.

பெரு வெற்றி தொடர் (கிராண்டு சிலாம்)

பெரும் தொடர்20052006200720082009201020112012201320142015SRவெ-தோவெ %
கிராண்டு சிலாம்
ஆஸ்திரேலிய ஓப்பன் A மு.சு நா.சு மு.சு நா.சு அ.இ 0 / 8 29–8 78.38
பிரெஞ்சு ஓப்பன் A மு.சு A மூ.சு கா.இ நா.சு அ.இ கா.இ 0 / 6 18–6 75.00
விம்பிள்டன் மூ.சு நா.சு A கா.இ அ.இ அ.இ அ.இ வெ 1 / 8 37–7 84.09
யூ.எசு. ஓப்பன் இ.சு நா.சு மூ.சு நா.சு மூ.சு அ.இ வெ 1 / 8 29–7 80.56
வெ-தோ 3–2 6–4 5–2 12–4 15–4 16–4 21–4 22–3 13–1 2 / 30 113–28 80.14

இறுதி: 10 (3 வெற்றி, 7 தோல்வி)

முடிவு ஆண்டு பெரும் தொடர் தரை எதிராளி புள்ளிகள்
தோல்வி2008யூ.எசு. ஓப்பன்கடினம் ரொஜர் பெடரர்2–6, 5–7, 2–6
தோல்வி2010ஆஸ்திரேலிய ஓப்பன்கடினம் ரொஜர் பெடரர்3–6, 4–6, 6–7(11–13)
தோல்வி2011ஆஸ்திரேலிய ஓப்பன்(2)கடினம் நோவாக் ஜோக்கொவிச்4–6, 2–6, 3–6
தோல்வி2012விம்பிள்டன்புல் ரொஜர் பெடரர்6–4, 5–7, 3–6, 4–6
வெற்றி2012யூ.எசு. ஓப்பன்கடினம்நோவாக் ஜோக்கொவிச்7–6(12–10), 7–5, 2–6, 3–6, 6–2
தோல்வி2013ஆஸ்திரேலிய ஓப்பன் (3)கடினம் நோவாக் ஜோக்கொவிச்7–6(7–2), 6–7(3–7), 3–6, 2–6
வெற்றி2013விம்பிள்டன்புல்நோவாக் ஜோக்கொவிச்6–4, 7–5, 6–4
தோல்வி2015ஆஸ்திரேலிய ஓப்பன் (4)கடினம் நோவாக் ஜோக்கொவிச்7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0
தோல்வி2016பிரெஞ்சு ஓப்பன் (4)களிமண் நோவாக் ஜோக்கொவிச்6-3, 1-6, 2-6, 4-6
வெற்றி2016விம்பிள்டன்புல்மிலாஸ் ராவோனிச்6–4, 7–6(7-2), 7-6(7-3)

மேற்கோள்கள்

  1. "Andy Murray: Player Profile". www.atpworldtour.com. பார்த்த நாள் 29 August 2011.
  2. Jago, Richard (15 August 2009). "Murray reaches world #2". Observer (London). http://www.guardian.co.uk/sport/2009/aug/15/andy-murray-montreal-masters-jo-wilfried-tsonga. பார்த்த நாள்: 16 August 2010.
  3. "Andy Murray Reaches US Open Semi Finals". Yahoo News UK. 9 September 2011. http://uk.news.yahoo.com/andy-murray-reaches-u-open-semi-finals-204800033.html. பார்த்த நாள்: 23 January 2012.
  4. Murray thrashes Federer to win gold டைம்சு ஆஃப் இந்தியா, பார்வையிடப்பட்ட நாள்=4 ஆகத்து 2012
  5. முதல் கிராண்ட் சலாம் பதக்கம், 76 ஆண்டுக்குப்பின் பிரித்தானியாவுக்கு கிடைத்த பதக்கம்
  6. 1977இல் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் பிரித்தானியவைச் சேர்ந்த வெர்ஜினியா வேடு வென்றுள்ளார்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.