மலேசியத் தமிழர்

மலேசியத் தமிழர் எனப்படுவோர் தமிழ் பின்புலத்துடன் மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள். இன்று மலேசியாவில் ஏறத்தாழ 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். தொன்று தொட்டே மலேசிய நிலப்பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்புகள் உண்டு. எடுத்துககாட்டாக 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் அரசேந்திர சோழனுடைய படையெடுப்பிற்குப் பின் தமிழர்களின் வளர்ச்சி மோலோங்கியது.[1] மேலும் பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்களும் பெரும்பாலான மலேசியத் தமிழர்கள் ஆவார்கள்.

மலேசியத் தமிழர்
புவான்ஸ்ரீ பத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்
மொத்த மக்கள்தொகை
(மலேசிய இந்தியரில் 90 சதவிகிதத்தினர்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பினாங்கு, பேராக், கெடா, சிலாங்கூர்,நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், ஜொகூர், மலாக்கா,
மொழி(கள்)
முதன்மை: தமிழ் பிற: ஆங்கிலம், மலாய்,
சமயங்கள்
இந்து, கிறித்தவம், இசுலாம்

உரிமைப் போராட்டங்கள்

மலேசியத் தமிழர்களின் பல உரிமைகள் மலேசியாவில் மறுக்கப்படுவதாகக் கூறி மலேசிய இந்திய குடிவழித் தமிழர்கள் இண்ட்ராப் எனும் இயக்கத்தின்வழி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதற்கு பொ.வேதமூர்த்தி, பொ.உதயகுமார் எனும் இரு மனித உரிமை வழக்கறிஞர்கள் தலைமைதாங்கி வழிநடத்திச் செல்கின்றனர். தற்சமயம் அவ்வியக்கத்தின் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி லண்டனில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்.

பிரபலமானவர்கள்

வெளி இணைப்புகள்

  1. Studies in Southeast Asian Art: Essays in Honor of Stanley J. O'Connor by Stanley J. O'Connor,Nora A. Taylor p.196
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.