சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா

சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா (S. P. Seenivasagam, 1917 - சூலை 4, 1975) எனும் டத்தோ ஸ்ரீ எஸ். பி. சீனிவாசகம் மலேசியத் தமிழ்த் தலைவர்களுள் ஒருவர். ஈப்போ மாநில அரசியல் வரலாற்றில் முக்கிய நபர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர்.[1] எஸ்.பி என்று மக்களால் அன்பாக அழைக்கப் பட்டார். இவர் டி. ஆர். சீனிவாசகம் எனும் சீனிவாசகம் தர்ம ராஜா வின் மூத்த சகோதரர்.

எஸ்.பி.சீனிவாசகம்

S.P.Seenivasagam
தனிநபர் தகவல்
பிறப்பு ஸ்ரீ பத்ம ராஜா சீனிவாசகம்
1917
இறப்பு 4 சூலை 1975
ஈப்போ, பேராக், மலேசியா
அடக்க இடம் ஈப்போ, பேராக், மலேசியா
தேசியம் மலேசியர்
அரசியல் கட்சி மக்கள் முற்போக்கு கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ம.மு.க 1974ல் பாரிசான் நேசனல் கட்சியுடன் இணைந்தது.
வாழ்க்கை துணைவர்(கள்) டத்தின் தனபாக்கியம் தேவி
இருப்பிடம் டைகர் லேன், ஈப்போ, பேராக்
பணி வழக்கறிஞர், அரசியல்வாதி
தொழில் 1959ல் மெங்லெம்பு நாடாளுமன்ற உறுப்பினர்
அமைச்சரவை துணைத் தலைவர், மக்கள் முற்போக்கு கட்சி
சமயம் இந்து

டத்தோ ஸ்ரீ எஸ்.பி.சீனிவாசகம் ஈப்போ மெங்லம்பு நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர். கோலா பாரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் சேவை ஆற்றியவர். எஸ்.பி. சீனிவாசகம் ஒரு மிகச் சிறந்த வழக்கறிஞர்.

மலேசியாவின் தலைசிறந்த நீதி நிபுணர்களில் ஒருவர்.[2] ஒரு கட்டத்தில் இவருக்கு நீதிபதி பணி வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர் மறுத்து விட்டார்.

வரலாறு

இவர் தன்னுடைய இளைய சகோதரருடன் இணைந்து 1953 ஆம் ஆண்டு மக்கள் முற்போக்கு கட்சியைத் தோற்றுவித்தார்.[3] சகோதரர்கள் இருவரில் இவர் அமைதியானவர்.[4] அதிகமாகப் பேச மாட்டார். டி.ஆர். சீனிவாசகம் ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது எஸ்.பி.சீனிவாசகம் மெங்லெம்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

மெங்லெம்பு நாடாளுமன்றத் தொகுதி ஈப்போ நாடாளுமன்றத் தொகுதிக்கு அடுத்த தொகுதியாகும். 1959 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மெங்லெம்பு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே தேர்தலில் கோலா பாரி சட்டமன்றத் தொகுதியிலும் வெறி பெறு சாதனை படைத்தார்.

ரஹ்மான் தாலிப் வழக்கு

சீனிவாசகம் 1957 ஆம் ஆண்டில் இருந்து 1969 ஆம் ஆண்டு வரை மக்கள் முற்போக்கு கட்சியின் உதவித் தலைவராகப் பதவி வகித்தவர். மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற அரசியல் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் இவர் வாதாடி உள்ளார். அந்த வகையில் 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சர் ரஹ்மான் தாலிப் லஞ்ச ஊழல் வழக்கு மிக முக்கியமானதாகும்.

ரஹ்மான் தாலிப் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார். இந்த வழக்கில் ரஹ்மான் தாலிப் தோல்வி கண்டார். அது மட்டும் அல்ல. அவருடைய அமைச்சர் பதவியும் பறி போனது. அந்த வேதனையில் ரஹ்மான் தாலிப் நோயுற்று இறந்து போனார்.

டத்தோ ஸ்ரீ விருது

1965 ஆம் ஆண்டு வழக்கறிஞர் தனபாக்கிய தேவியைத் திருமணம் செய்து கொண்டார். இவர் சிரம்பான் நகரைச் சேர்ந்தவர். டத்தின் தனபாக்கிய தேவி 2006 ஆம் ஆண்டு காலமானார். இவருக்கு 1964 ஆம் ஆண்டு பேராக் சுல்தான் இட்ரிஸ் ஷா அவர்கள் டத்தோ விருதை வழங்கினார். 1972 ஆம் ஆண்டு டத்தோ ஸ்ரீ விருதும் வழங்கப் பட்டது.

அதற்கு முன்னர் அவர் ஆளும் பாரிசான் கட்சியுடன் இணைந்தார். அதனால் ஈப்போ மக்களிடையே மனக் கசப்புகள் உருவாகின.[5] அதன் பின்னர் ஈப்போ அரசியலில் பற்பல மாற்றங்களும் ஏற்பட்டன.

1975 ஜூலை 4 ஆம் தேதி தன்னுடைய 58வது வயதில் மாரடைப்பினால் காலமானார்.[6] அவரது சேவையைப் பாராட்டி ஈப்போவில் மஸ்ஜீத் இந்தியா சாலை எஸ்.பி.சீனிவாசகம் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.[7] அதற்கு முன்னர், ஈப்போவின் பிரதான சாலைகளில் ஒன்றான ஹியூ லோ சாலைக்கு இவருடைய பெயர் வைக்கப் பட்டது. இருப்பினும் அதை அவர் மறுத்து விட்டார். ’மக்களுக்காகச் சேவை செய்ய அரசியலுக்கு வந்தேன். ஓர் அரசியல்வாதி நீதிபதியானால் அங்கே நீதிக்கு நியாயம் கிடைக்காது’ என்று தனக்கு வழங்கப்பட்ட நீதிபதிப் பதவியை மறுத்து விட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.