எம். மனோகரன்

எம். மனோகரன் (மனோகரன் மலையாளம், பிறப்பு: 1961) மலேசியா, சிலாங்கூர், கோத்தா ஆலாம் ஷா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு[1] கமுந்திங் தடுப்பு முகாமில் இருக்கும் போது, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி வாகை சூடி மலேசிய அரசியலில் ஒரு பெரிய சாதனையைச் செய்தவர். [2]

மாண்புமிகு
எம். மனோகரன்
M. Manoharan
马诺哈兰
மலேசியா சிலாங்கூர்
மாநில சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
8 மார்ச் 2008  மே 2013
முன்னவர் Ching Su Chen
தொகுதி கோத்தா ஆலாம் ஷா, கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
பெரும்பான்மை 7,184
தனிநபர் தகவல்
பிறப்பு 13 செப்டம்பர் 1961
சிலாங்கூர்
அரசியல் கட்சி மலேசியா
ஜனநாயக செயல் கட்சி
(ஜ.செ.க)
வாழ்க்கை துணைவர்(கள்) எஸ். புஷ்பநீலா
பிள்ளைகள் ஹரிஹரன்
சிவரஞ்சனி
கணேந்திரா
இருப்பிடம் கிள்ளான்
சிலாங்கூர்
கல்வி வணிகவியல்
மலாயா பல்கலைக்கழகம்
சட்டத்துறை
இங்கிலாந்து
பணி வழக்கறிஞர்
இண்ட்ராப் செயல் திறனாளர்
அரசியல்வாதி
சமயம் இந்து

மலேசியாவின் மூவின மக்களும் அவரைப் பார்க்காமலேயே, அவருக்கு வாக்கு அளித்து தேர்தலில் வெற்றி பெறச் செய்தனர். அது மலேசியாவின் வரலாற்றுச் சுவடுகளில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.[3]

மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் இண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர்.[4] இவர் சிறையில் இருக்கும் போது, இவருடைய வழக்கறிஞர் நிறுவனம் திவாலாகிவிடும் நிலை ஏற்பட்டது. அதைத் தவிர்க்க, ‘மனோகரனைக் காப்பாற்றுங்கள் நிதி’ உருவாக்கப்பட்டது. மலேசியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, பணம் திரட்டி அவருடைய நிறுவனத்தைக் காப்பாற்றி, மலேசியாவின் மூவின ஒற்றுமைக்கு அடையாளம் காட்டினர்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.