பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி

பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி அல்லது பொருளாதாரத் தனியுரிமை வலயம் (ஆங்கிலத்தில் exclusive economic zone) என்பது ஓர் நாடு, கடலை ஆய்வு செய்வது குறித்தும், காற்று மற்றும் நீரிலிருந்து வடிக்கப்படும் மின்சாரம் உள்ளிட்ட பல கடல் சார் வளங்களைப் பயன்படுத்துவது குறித்தும் பெறும் சிறப்பு உரிமைகளை வரையறுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் பரிந்துரைக்கும், கடல் மண்டலம்/பகுதி ஆகும். [1] இப்பகுதி கரையோர அடிக்கோட்டிலிருந்து வெளியே 200 கடல் மைல்கள் வரை நீளும். பெருவழக்கில் இப்பகுதி கண்டத் திட்டையும் உள்ளடக்கியதாகவும் வழங்கப்படுகின்றபோதும் இது பிராந்தியக் கடலையோ, 200 கடல் மைல்களுக்கப்பாலுள்ள கண்டத் திட்டையோ உள்ளடக்கியதன்று. பிராந்தியக் கடல் பகுதியில் ஒரு நாட்டிற்கு முழு இறைமை உண்டு, ஆனால் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியிலோ கடற்பரப்பிற்குக் கீழுள்ளவற்றிற்கான இறைமை உரிமை மட்டுமே கடற்கரையோர நாட்டிற்கு வழங்கப்படும் . இப்பகுதியின் கடற்பரப்பு பன்னாட்டு நீர்ப்பரப்பாகவே கருதப்படும்.[2]

கடல் பகுதிகளில் சர்வதேச உரிமைகள்

விளக்கம்

உலகின் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதிகள் கருநீலநிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன

பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத் தனியுரிமை பகுதி, கரையோர அடிக்கோட்டில் இருந்து 200 கடல் மைல்கள் (370 கி.மீ) வரை நீண்டிருக்கும். இரு நாடுகளின் தனியுரிமை பகுதிகள் மேற்குவிந்து கவிந்திருக்கும் தருவாயில் இவ்விதி விலக்கப்படும்; அதாவது இரு நாட்டின் கரையோர அடிக்கோடுகளும் 400 கடல் மைல்களுக்கும்(740 கி.மீ) குறைவான இடைவெளியில் அமைந்திருக்கும் சூழல். மேற்குவிப்பு நிகழும்போது வழக்கிற்கான கடல் எல்லை, தொடர்புடைய இரு நாடுகளையும் பொருத்து அமைக்கப்படும்[3] பொதுவாக, மேற்குவிப்புப் பகுதியுள் அமையும் எந்த இடமும் அதன் அருகாமையில் உள்ள நாட்டையே சாரும்.[4]

பரப்பு வாரியான தரவரிசை

அன்டார்டிகா தவிர்த்த, இறைமை தாங்கிய நாடுகளுள் அடங்கிய சார்பு மண்டலங்கள் (குடியேற்றமில்லா பகுதிகள் உட்பட), பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி + மொத்த உள்நாட்டு பரப்பு (மொ.உ.ப.) என்றறியப்படும் பொருளாதார தனியுரிமை கூடுதல் பகுதியையும் இப்பட்டியல் உள்ளடக்கியது.

நாடு பொ.த.ப கி.மீ2[5] திட்டு கி.மீ2 பொ.த.ப+மொ.உ.ப. கி.மீ2
 ஐக்கிய அமெரிக்கா11,351,0002,193,52621,814,306
 பிரான்சு11,035,000389,42211,655,724
 ஆத்திரேலியா8,505,3482,194,00816,197,464
 உருசியா7,566,6733,817,84324,664,915
 ஐக்கிய இராச்சியம்6,805,586722,8917,048,486
 இந்தோனேசியா6,159,0322,039,3818,063,601
 கனடா5,599,0772,644,79515,607,077
 சப்பான்4,479,388454,9764,857,318
 நியூசிலாந்து4,083,744277,6104,352,424
 சீனா2,287,969831,34013,520,487
 சிலி3,681,989252,9474,431,381
 பிரேசில்3,660,955774,56312,175,832
 கிரிபட்டி3,441,8107,5233,442,536
 மெக்சிக்கோ3,269,386419,1025,141,968
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்2,996,41919,4032,997,121
 டென்மார்க்2,551,238495,6574,761,811
 பப்புவா நியூ கினி2,402,288191,2562,865,128
 நோர்வே2,385,178434,0202,770,404
 இந்தியா2,305,143402,9965,592,406
 மார்சல் தீவுகள்1,990,53018,4111,990,711
 போர்த்துகல்1,727,40892,0903,969,498
 பிலிப்பீன்சு1,590,780272,9211,890,780
 சொலமன் தீவுகள்1,589,47736,2821,618,373
 தென்னாப்பிரிக்கா1,535,538156,3372,756,575
 சீசெல்சு1,336,55939,0631,337,014
 மொரிசியசு1,284,99729,0611,287,037
 பிஜி1,282,97847,7051,301,250
 மடகாசுகர்1,225,259101,5051,812,300
 அர்கெந்தீனா1,159,063856,3463,939,463
 எக்குவடோர்1,077,23141,0341,333,600
 எசுப்பானியா1,039,23377,9201,545,225
 மாலைத்தீவுகள்923,32234,538923,622
 பெரு906,45482,0002,191,670
 சோமாலியா825,05255,8951,462,709
 கொலம்பியா808,15853,6911,949,906
 கேப் வர்டி800,5615,591804,594
 ஐசுலாந்து751,345108,015854,345
 துவாலு749,7903,575749,816
 வனுவாட்டு663,25111,483675,440
 தொங்கா659,5588,517660,305
 பஹமாஸ்654,715106,323668,658
 பலாவு603,9782,837604,437
 மொசாம்பிக்578,98694,2121,380,576
 மொரோக்கோ575,230115,1571,287,780
 கோஸ்ட்டா ரிக்கா574,72519,585625,825
 நமீபியா564,74886,6981,388,864
 யேமன்552,66959,2291,080,637
 இத்தாலி541,915116,834843,251
 ஓமான்533,18059,071842,680
 மியான்மர்532,775220,3321,209,353
 இலங்கை532,61932,453598,229
 அங்கோலா518,43348,0921,765,133
 கிரேக்க நாடு505,57281,451637,529
 தென் கொரியா475,469292,522575,469
 வெனிசுவேலா471,50798,5001,387,950
 வியட்நாம்417,663365,198748,875
 அயர்லாந்து410,310139,935480,583
 லிபியா351,58964,7632,111,129
 கியூபா350,75161,525460,637
 பனாமா335,64653,404411,163
 மலேசியா334,671323,412665,474
 நவூரு308,48041308,501
 எக்குவடோரியல் கினி303,5097,820331,560
 தாய்லாந்து299,397230,063812,517
 எகிப்து263,45161,5911,265,451
 துருக்கி261,65456,0931,045,216
 ஜமேக்கா258,1379,802269,128
 டொமினிக்கன் குடியரசு255,89810,738304,569
 லைபீரியா249,73417,715361,103
 ஒண்டுராசு249,54268,718362,034
 தன்சானியா241,88825,6111,186,975
 பாக்கித்தான்235,99951,3831,117,911
 கானா235,34922,502473,888
 சவூதி அரேபியா228,633107,2492,378,323
 நைஜீரியா217,31342,2851,141,081
 சியேரா லியோனி215,61128,625287,351
 காபொன்202,79035,020470,458
 பார்படோசு186,898426187,328
 ஐவரி கோஸ்ட்176,25410,175498,717
 ஈரான்168,718118,6931,797,468
 மூரித்தானியா 165,33831,6621,190,858
 கொமொரோசு163,7521,526165,987
 சுவீடன்160,885154,604602,255
 செனிகல்158,86123,092355,583
 நெதர்லாந்து154,01177,246192,345
 உக்ரைன்147,31879,142750,818
 உருகுவை142,16675,327318,381
 கயானா137,76550,578352,734
 வட கொரியா132,82654,566253,364
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி131,3971,902132,361
 சமோவா127,9502,087130,781
 சுரிநாம்127,77253,631291,592
 எயிட்டி126,7606,683154,510
 அல்ஜீரியா126,3539,9852,508,094
 நிக்கராகுவா123,88170,874254,254
 கினி-பிசாவு123,72539,339159,850
 கென்யா116,94211,073697,309
 குவாத்தமாலா114,17014,422223,059
 அன்டிகுவா பர்புடா110,0894,128110,531
 தூனிசியா101,85767,126265,467
 சைப்பிரசு98,7074,042107,958
 எல் சல்வடோர90,96216,852112,003
 பின்லாந்து87,17185,109425,590
 வங்காளதேசம்86,39266,438230,390
 சீனக் குடியரசு83,23143,016119,419
 எரித்திரியா77,72861,817195,328
 டிரினிடாட் மற்றும் டொபாகோ74,19925,28479,329
 கிழக்குத் திமோர்70,32625,64885,200
 சூடான்68,14819,8271,954,216
 கம்போடியா62,51562,515243,550
 கினியா59,42644,755305,283
 குரோவாசியா59,03250,277115,626
 ஐக்கிய அரபு அமீரகம்58,21857,474141,818
 செருமனி57,48557,485414,599
 மால்ட்டா54,8235,30155,139
 எசுத்தோனியா36,99236,99282,219
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்36,3021,56136,691
 பெலீசு35,35113,17858,317
 பல்கேரியா34,30710,426145,186
 பெனின்33,2212,721145,843
 கட்டார்31,59031,59043,176
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு31,0177,982373,017
 போலந்து29,79729,797342,482
 டொமினிக்கா28,98565929,736
 லாத்வியா28,45227,77293,011
 கிரெனடா27,4262,23727,770
 இசுரேல்26,3523,74548,424
 உருமேனியா23,62719,303262,018
 கம்பியா23,1125,58134,407
 சியார்சியா21,9463,24391,646
 லெபனான்19,5161,06729,968
 கமரூன்16,54711,420491,989
 செயிண்ட். லூசியா15,61754416,156
 அல்பேனியா13,6916,97942,439
 டோகோ12,0451,26568,830
 குவைத்11,02611,02628,844
 சிரியா10,5031,085195,683
 பகுரைன்10,22510,22510,975
 புரூணை10,0908,50915,855
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்9,97465310,235
 மொண்டெனேகுரோ7,7453,89621,557
 சீபூத்தீ7,4593,18730,659
 லித்துவேனியா7,0317,03172,331
 பெல்ஜியம்3,4473,44733,975
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு1,6061,5932,346,464
 சிங்கப்பூர்1,0671,0671,772
 ஈராக்771771439,088
 மொனாகோ2882290
 பலத்தீன்2562566,276
 சுலோவீனியா22022020,493
 யோர்தான்1665989,508
 பொசுனியா எர்செகோவினா505051,259
 கசக்கஸ்தான்2,724,900
 மங்கோலியா1,564,100
 சாட்1,284,000
 நைஜர்1,267,000
 மாலி1,240,192
 எதியோப்பியா1,104,300
 பொலிவியா1,098,581
 சாம்பியா752,612
 ஆப்கானித்தான்652,090
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு622,984
 தெற்கு சூடான்619,745
 போட்சுவானா582,000
 துருக்மெனிஸ்தான்488,100
 உஸ்பெகிஸ்தான்447,400
 பரகுவை406,752
 சிம்பாப்வே390,757
 புர்க்கினா பாசோ274,222
 உகாண்டா241,038
 லாவோஸ்236,800
 பெலருஸ்207,600
 கிர்கிசுத்தான்199,951
 நேபாளம்147,181
 தாஜிக்ஸ்தான்143,100
 மலாவி118,484
 அங்கேரி93,028
 அசர்பைஜான்86,600
 ஆஸ்திரியா83,871
 செக் குடியரசு78,867
 செர்பியா77,474
 சிலவாக்கியா49,035
 சுவிட்சர்லாந்து41,284
 பூட்டான்38,394
 மல்தோவா33,846
 லெசோத்தோ30,355
 ஆர்மீனியா29,743
 புருண்டி27,834
 ருவாண்டா26,338
 மாக்கடோனியக் குடியரசு25,713
 சுவாசிலாந்து17,364
 கொசோவோ[a]10,887
 லக்சம்பர்க்2,586
 அந்தோரா468
 லீக்கின்ஸ்டைன்160
 சான் மரீனோ61
 வத்திக்கான் நகர்0.44

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "(ஆங்கிலம்) பகுதி 5 - பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி, கட்டுரை 56". கடல் சட்டம். ஐக்கிய நாடுகள். பார்த்த நாள் 2011-08-28.
  2. "(ஆங்கிலம்) பகுதி 5 - பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி, கட்டுரைகள் 55, 56". கடல் சட்டம். ஐக்கிய நாடுகள்.
  3. வில்லியம் ஆர். சுலோமேன்சன், 2006. (ஆங்கிலம்)பன்னாட்டு சட்டம் குறித்த அடிப்படை கண்ணோட்டம், 5-ஆவது பதிப்பு, பெல்மான்ட், கலிபோர்னியா: தாம்சன்-வாட்ஸ்வர்த், 294.
  4. ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்.
  5. Seaaroundus.org

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.