பெரேன் மாவட்டம்

பெரேன் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இது கோகிமா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புது மாவட்டமாக 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1]

பெரேன்
Peren
மாவட்டம்
லியாங்மை நடனம்

மாவட்டத்தின் அமைவிடம்
மாநிலம்நாகாலாந்து
நாடுஇந்தியா
தலைநகரம்பெரேன்
பரப்பளவு
  மொத்தம்2,300
ஏற்றம்1,445
மக்கள்தொகை (2011)
  மொத்தம்94,954
  அடர்த்தி41
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-NL-PE
இணையதளம்http://peren-district.nic.in/

புவியியல்

இந்த மாவட்டத்தின் மேற்கில் திமா ஹசாவ் மாவட்டம், கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்களும், வடகிழக்கில் திமாப்பூர் மாவட்டமும், கிழக்கில் கோகிமா மாவட்டமும், தெற்கில் தமெங்கலாங் மாவட்டமும் சூழ்ந்துள்ளன.

இந்த மாவட்டத்தின் தலைநகரமாகப் பெரேன் நகரம் செயல்படுகிறது.

மக்கள் தொகை

இங்கு 94,954 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]

இங்கு ஜீலியாங், குக்கி இன மக்கள் வாழ்கின்றனர்.

விலங்குகளும் தாவரங்களும்

இங்கு இண்டாங்கி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.[3]

சான்றுகள்

  1. "District Census Handbook - Peren". இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 (Directorate of Census Operations, Nagaland). http://www.censusindia.gov.in/2011census/dchb/1311_PART_B_DCHB_PEREN.pdf. பார்த்த நாள்: 2015-07-22.
  2. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  3. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Nagaland". பார்த்த நாள் September 25, 2011.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.