திமாப்பூர்

திமாப்பூர், இந்திய மாநிலமான நாகாலாந்தின் தலைநகரமாகும். இது திமாசா கச்சாரி எனப்படும் அரச வம்சத்தினரின் தலைநகரமாக இருந்தது. நாகாலாந்தில் உள்ள ஒரே ஒரு விமான நிலையமும், ஒரே ஒரு தொடருந்து நிலையமும் இங்கே அமைந்துள்ளன.[1][2][3]

திமாப்பூர்
Dimapur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்திமாப்பூர் மாவட்டம்
பரப்பளவு
  மொத்தம்121
ஏற்றம்145
மக்கள்தொகை (2011)
  மொத்தம்375
  தரவரிசைமுதலாவது (நாகாலாந்து) & 115வது (இந்திய அளவில்)
  அடர்த்தி2
மொழிகள்
  அலுவல்ஆங்கிலம், நாகாமிய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்797 112
தொலைபேசிக் குறியீடு91 - (0) 03862
வாகனப் பதிவுNL-07
இணையதளம்dimapur.nic.in

போக்குவரத்து

இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கோகிமா, இம்பால், மோரே, குவகாத்தி ஆகிய நகரங்களுக்கு செல்லலாம்.

இங்கிருந்து குவகாத்தி, கொல்கத்தா, புது தில்லி, பெங்களூர், சண்டிகர், அம்ரித்சர், திப்ருகர். சென்னை ஆகிய நகரங்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா, தில்லி, திப்ருகர் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது.

அரசியல்

இந்த நகரம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [4]

சான்றுகள்

  1. Cook, Sharell. "5 Popular Nagaland Tourist Districts". goindia.about.com. பார்த்த நாள் 18 February 2014.
  2. "Dimapur". /dimapur.nic.in. பார்த்த நாள் 18 February 2014.
  3. "Nagaland". mapsofindia.com. பார்த்த நாள் 18 February 2014.
  4. மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.