நாகாலாந்து சட்டமன்றம்

நாகாலாந்தின் சட்டமன்றம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் சட்டவாக்க அவையாகும். நாகாலாந்தில் சட்டவாக்க அவை ஓரவை முறைமை உடையதால், சட்ட மேலவை கிடையாது. சட்டமன்றம் மட்டுமே செயல்படும். இந்த சட்டமன்றம் 1964ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் 60 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு தொகுதியில் அதிக வாக்குகளை பெறுபவர், அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகிறார்.[1]

நாகாலாந்தின் சட்டமன்றம் Legislative Assembly of Nagaland
வகை
வகைஓரவை முறைமை
தலைமை
சபாநாயகர்சி. சாசோ, நாகாலாந்து மக்கள் முன்னணி
மார்ச்சு 15, 2013 முதல்
துணை சபாநாயகர்லெவி ரெங்மா, தனி வேட்பாளர்
ஜூலை 17, 2013 முதல்
முதல்வர்டி. ஆர். ஜிலியாங், நாகாலாந்து மக்கள் முன்னணி
24 May 2014 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்தோகேகோ எப்தோமி, இந்திய தேசிய காங்கிரசு
2013 முதல்
உறுப்பினர்கள்60
அரசியல் குழுக்கள்நாகாலாந்து மக்கள் முன்னணி (46)
பாரதிய ஜனதா கட்சி (4)
ஐக்கிய ஜனதா தளம் (1)
சுயேட்சை (8)
தேசியவாத காங்கிரசு கட்சி (1)
தேர்தல்
Voting systemபொது வாக்கு
இறுதித் தேர்தல்23 பிப்பிரவரி< 2013
கூடும் இடம்
சட்டமன்றக் கூடம்
வலைத்தளம்
நாகாலாந்து சட்டமனறத்தை பற்றி

இந்த மன்றத்தில் யாரும் நியமிக்கப்படுவதில்லை. (பாராளுமன்றத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் குடியரசுத் தலைவராலும், ஆளுநராலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதுண்டு.) ஒவ்வொரு உறுப்பினர்களும் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். அரசின் தலைமைச் செயலகம் கோகிமாவில் உள்ளது. சட்டமன்றக் கட்டிடமும் கோகிமாவில் உள்ளது. இந்த சட்டமன்றத்தின் தற்போதைய சபாநாயாகராக கியனிலி பெசியீ என்பவர் பதவி வகிக்கிறார்.[2]

சான்றுகள்

  1. Nagaland legislativebodiesinindia.nic.in.
  2. "Peseyie voted Naga Speaker". தி டெலிகிராஃப். 19 March 2008. http://www.telegraphindia.com/1080319/jsp/northeast/story_9036101.jsp. பார்த்த நாள்: 3 January 2010.

மேலும் படிக்க

  • Murry, Khochamo Chonzamo (2007). Naga Legislative Assembly and its Speakers, New Delhi: Mittal Publications, ISBN 81-8324-126-3

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.