நோக்லாக் மாவட்டம்
நோக்லாக் மாவட்டம் (Noklak district) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த ஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து மாநிலத்தின் துயேன்சாங் மாவட்டத்தின் நோக்லாக் வருவாய் வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிய நோக்லாக் மாவட்டம், 21 டிசம்பர் 2017-இல் புதிதாக நிறுவப்பட்டது.[1][2][3] இது நாகாலாந்தின் 12-வது இம்மாவட்டம் ஆகும். இதன் தலைமையிடம் நோக்லாக் நகரம் ஆகும்.
நோக்லாக் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
மாநிலம் | நாகாலாந்து |
நாடு | இந்தியா |
தொகுதி | நோக்லாக் சட்டமன்றத் தொகுதி |
பரப்பளவு | |
• மொத்தம் | 164.92 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 19,507 |
• அடர்த்தி | 120 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30) |
புவியியல்
நோக்லாக் மாவட்டம் 164.92 சகிமீ பரப்பளவு கொண்டது.[4]மலைப்பாங்கான நோக்லாக் மாவட்டம், அகன்ற இலைக்காடுகள் கொண்டது. துயேன்சாங் மாவட்டத்தின் நோக்லாக் பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம்
மாவட்ட நிர்வாகம்
நோக்லாக் மாவட்டம் நோக்லாக், தொனொக்கின்யு, நோக்கு, பான்சோ மற்றும் சிங்மே என ஐந்து வருவாய் வட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டம் நோக்லாக் மற்றும் தொனொக்கின்யு என இரண்டு ஒன்றியங்களைக் கொண்டது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 3,667 வீடுகள் கொண்ட நோக்லாக் மாவட்டத்தின் மக்கள்தொகை 19,507 ஆகும். அதில் ஆண்கள் 10,066 மற்றும் பெண்கள் 9,441 ஆகவுள்ளனர்.சராசரி எழுத்தறிவு 61.41% ஆகவுள்ளது. இம்மாவட்ட மக்களில் 98.44% பழங்குடிகள் ஆவர். இம்மாவட்ட மக்களில் 98.47% கிறித்தவ பழங்குடி மக்கள் ஆவர். இம்மாவட்ட பழங்குடி மக்கள் பல மொழிகள் பேசினாலும் ஆங்கில மொழி கல்வி மற்றும் அரச மொழியாக உள்ளது.[7] இங்கு நகரங்கள் இல்லாததால், இம்மாவட்ட மக்கள் அனைவரும் மலைக்கிராமங்களில் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
- Nagaland upgrades Noklak sub-division into district
- Noklak district creation
- "Noklak is Nagaland’s youngest district". Eastern Mirror. 21 December 2017. http://www.easternmirrornagaland.com/noklak-is-nagalands-youngest-district/.
- "Noklak Taluk Population Tuensang, Nagaland, List of Villages & Towns in Noklak Taluk". Census of India (2017). பார்த்த நாள் 22 December 2017.
- "Noklak sub-div is now a district" (in en-gb). Nagaland Page. 22 December 2017. http://www.nagalandpage.com/top-stories/40029-noklak-sub-div-is-now-a-district.
- "List of Polling Stations" 19, 23. Government of Nagaland.
- Noklak Taluk Population
வெளி இணைப்புகள்