பெனசீர் பூட்டோ

இக்கட்டுரை, Benazir Bhutto எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

பெனசீர் பூட்டோ
பாகிஸ்தானின் 11மற்றும் 16 வது பிரதமர்
பதவியில்
அக்டோபர் 19 - 1993  நவம்பர் 5 - 1996
குடியரசுத் தலைவர் Wasim Sajjad
Farooq Leghari
முன்னவர் Moeen Qureshi
பின்வந்தவர் Malik Meraj Khalid
பதவியில்
டிசம்பர் 2 - 1988  ஆகஸ்டு 6 - 1990
குடியரசுத் தலைவர் Ghulam Ishaq Khan
முன்னவர் Muhammad Khan Junejo
பின்வந்தவர் Ghulam Mustafa Jatoi
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 21, 1953(1953-06-21)
Karachi, Sindh, Pakistan
இறப்பு திசம்பர் 27, 2007(2007-12-27) (அகவை 54)
Rawalpindi, Punjab, Pakistan
அரசியல் கட்சி பாக்கித்தான் மக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஆசிப் அலி ஜர்தாரி
பிள்ளைகள் Bilawal, Bakhtwar and Aseefa
படித்த கல்வி நிறுவனங்கள் Lady Margaret Hall, Oxford, Radcliffe College, Harvard University
சமயம் Shi'a Islam[1][2][3][4]
இணையம் benazirbhutto.org

பெனசீர் பூட்டோ (சிந்தி: بينظير ڀٽو, உருது: بینظیر بھٹو, IPA: [beːnəziːɾ bʱʊʈːoː]; 21 ஜூன் 1953 – 27 டிசம்பர் 2007), பாகிஸ்தானில் மத்திய-இடது அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதியாவார்.பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை [5] தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார்.அவர் பாகிஸ்தானின் முதல் மற்றும் இன்று வரையிலும் ஒரே பெண் பிரதம மந்திரியாவார்.

அவரின் குடும்பம் சிந்திகளின் பூட்டோ வம்சாவழியில் இருந்து வந்தது. முன்னாள் பிரதம மந்திரி சுல்பிக்கார் அலி பூட்டோவிற்கும், ஈரானிய-குர்திஷ் வம்சாவழியில் வந்த பேகம் நஸ்ரத் பூட்டோவிற்கும் மூத்த குழந்தையாக பெனசீர் பூட்டோ பிறந்தார். அவரின் தந்தைவழி தாத்தா சர் ஷா நவாஜ் பூட்டோ ஆவார். இவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள பட்டோ காலன் என்ற அவரின் சொந்த ஊரில் இருந்து சுதந்திரத்திற்கு முன்னாள் சிந்தில் உள்ள லார்கானா மாவட்டத்திற்கு வந்தவராவார். [6][7]

பூட்டோ, தமது 35வது வயதில், 1988ல் முதன்முறையாக பிரதம மந்திரியாக பதவியேற்றார், ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அப்போதைய பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் குலாம் இசாக் கானின் உத்தரவின் கீழ் 20 மாதங்களுக்கு பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.1993ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதேபோன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, இந்த முறை ஜனாதிபதி பரூக் லெஹரியினால் மீண்டும் 1996ல் நீக்கப்பட்டார். அவர் 1998ல் தானே முன்வந்து நாடு விட்டு துபாய் சென்றார்.

பூட்டோ 18 அக்டோபர் 2007ல் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார், பின்னர் ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப்புடன் ஒரு புரிதலுக்கு வந்தவுடன், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது, அத்துடன் அவர் மீதிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் திரும்பப் பெறப்பட்டன. திட்டமிடப்பட்டிருந்த |2008 பாகிஸ்தான் பொது தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால், அப்போது அவர் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தார், 27 டிசம்பர் 2007ல் பாகிஸ்தான் நகரமான ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் புறப்பட்ட போது அவர் படுகொலை செய்யப்பட்டார்.அதற்கடுத்த ஆண்டு, மனித உரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகள் சபை விருது|மனித உரிமைகளுக்கான துறையில் ஐக்கிய நாடுகள் சபையின் விருதை வென்ற ஏழு வெற்றியாளர்களில் ஒருவராக அவரின் பெயர் பட்டியலிடப்பட்டது.[8]

கல்வியும், தனிப்பட்ட வாழ்க்கையும்

இவர் கராச்சியில் உள்ள லேடி ஜென்னிங்ஸ் நர்சரி ஸ்கூல் மற்றும் கான்வென்ட் ஆப் ஜீசஸ் அண்டு மேரி ஆகியவற்றில் படித்தார்.[9] ராவால்பிண்டி பிரசண்டே ஷன் கான்வென்ட்டில் இரண்டு ஆண்டுகள் படித்த பின்னர், அவர் முர்ரேயில் உள்ள ஜீசஸ் அண்டு மேரி கான்வென்ட்டிற்கு அனுப்பப்பட்டார்.அவர், தமது 15வது வயதில் சாதாரண தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார்.[10]

தமது ஆரம்ப கால பள்ளிக்கல்வியைப் பாகிஸ்தானில் முடித்த அவர், அவரின் உயர்கல்வியை அமெரிக்காவில் தொடர்ந்தார். 1969 முதல் 1973 வரை அவர் ஹேவர்ட் பல்கலைக்கழகத்திலுள்ள ரேட்கிளிப் கல்லூரியில் படித்தார். இங்கு அவர் அரசின் ஒப்பீட்டளவிலான கும் லாவ்டு விருதுகளுடன் இளங்கலை பட்டத்தைப் பெற்றார்.[11] அவர் ஃபீ பேட்டா காப்பாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] ஹேவர்டில் இருந்த அவரின் காலத்தைப் பின்னர், "என் வாழ்வின் மகிழ்ச்சிகரமான நான்கு ஆண்டுகள்" என்று குறிப்பிட்ட பூட்டோ, அது "ஜனநாயகம் மீதான அவரின் நம்பிக்கைக்கு அடித்தளம் அமைத்ததாக" தெரிவித்தார்.பின்னர் 1995ல் பிரதம மந்திரியாக இருந்த போது, பாகிஸ்தான் அரசிடமிருந்து ஹேவர்ட் சட்ட கல்லூரிக்கு ஒரு பரிசை அவர் ஏற்பாடு செய்தார்.[12] 2006 ஜூனில், அவர் டொரொன்டோ பல்கலைக்கழகத்திலிருந்து மதிப்புமிக்க எல்எல்.டி பட்டம் பெற்றார்.[13]

அவரின் அடுத்த கட்ட கல்வி இங்கிலாந்தில் எடுக்கப்பட்டது.பூட்டோ 1973க்கும், 1977க்கும் இடையில் லேடி மார்கரேட் ஹால், ஆக்ஸ்போர்டில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார். இக்காலகட்டத்தில் அவர் சர்வதேச சட்டம் மற்றும் இராஜாங்கம் குறித்த கூடுதல் பயிற்சிகளையும் முடித்தார்.[14] எல்எம்எச் -க்கு பின்னர் அவர் செயிண்ட் கேத்ரீன் கல்லூரி, ஆக்ஸ்போர்டிற்கு[15] சென்றார். 1976 டிசம்பரில் அவர் ஆக்ஸ்போர்டு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதன் மூலம் கௌரவம் மிக்க விவாத சமூகத்திற்கு தலைமை தாங்கும் முதல் ஆசிய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.[10]

18 டிசம்பர் 1987ல், கராச்சியில் அவர் ஆசீப் அலி ஜர்தாரியை மணந்தார்.இந்த தம்பதியருக்கு பிலாவல், பக்த்வார் மற்றும் ஆசீஃபா என்று மூன்று குழந்தைகள் உண்டு.

குடும்பம்

பெனாசீரின் தந்தையான பிரதம மந்திரி சுல்பிக்கார் அலி பூட்டோ 1977ல் அப்போதிருந்த முதன்மை இராணுவ தளபதி முஹமது ஜியா-அல்-ஹக்கின் தலைமையில் நடந்த ஓர் இராணுவ புரட்சியைத் தொடர்ந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இராணுவ சட்டம் கொண்டு வந்த முஹமது ஜியா-அல்-ஹக், மூன்று மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.இருந்த போதினும், பொது தேர்தல்கள் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மாறாக, கருத்து வேறுபாடு கொண்ட அரசியல்வாதி அஹ்மது ரஜா கசோரியின் தந்தையைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்காக திரு. பூட்டோவை தளபதி ஜியா சிறையிலடைத்தார்.திரு. ஜூல்பிகார் அலி பூட்டோ இராணுவ சட்ட நீதிமன்றத்தால் தூக்கிலிடப்பட்டார்.

இந்த குற்றச்சாட்டு "பொதுமக்களால் பரவலாக சந்தேகிக்கப்பட்ட"[16] போதினும், வெளிநாட்டு தலைவர்களால் மிதமாக பல முறையீடுகள் இருந்த போதினும், ஜூல்பிகார் அலி பூட்டோ 4 ஏப்ரல் 1979ல் தூக்கிலிடப்பட்டார். அப்போது ஆட்சியில் இருந்த ஜனாதிபதியான தளபதி ஜியாவால் இந்த மிதமான முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன.தூக்கிலிடப்பட்டதற்கு பின்னர், மே மாத இறுதி வரை பெனசீர் பூட்டோவும், அவரின் அன்னையும் ஒரு "போலீஸ் முகாமில்" தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.[17]

1985ல், பெனசீர் பூட்டோவின் சகோதரர் ஷாநவாஜ் பிரான்சில் சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப்பட்டார்.பின்னர் 1996ல், அவரின் மற்றொரு சகோதரரான மிர் முர்தாஜாவின் கொலை, இரண்டாவது முறையாக பிரதம மந்திரியாக இருந்த பதவி காலத்தை ஸ்திரமின்மைக்கு கொண்டு வருவதில் பங்கு வகித்தது.

பிரதம மந்திரி

வாஷிங்டன் சுற்றுபயணத்தில் பெனசீர் பூட்டோ, 1989ல் டி.சி.

தமது படிப்புகளை முடித்து கொண்டு பாகிஸ்தானுக்கு திரும்பிய பூட்டோ, அவர் தந்தையின் சிறைவாசம் மற்றும் அதைத் தொடர்ந்து தூக்கிலிடப்பட்டது ஆகியவற்றால் விழிப்படைந்து தாம் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தார். ஜெனரல் முஹம்மது ஜியா-அல்-ஹக் இறக்கும் வரை பாகிஸ்தானில் அவர் தமது அரசியல் இருப்பைத் தக்க வைக்க முடியாமல் இருந்த போதிலும் , 1984ல் இங்கிலாந்திற்கு திரும்ப அனுமதிக்கப்பட்ட நிலையில், நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்த போதே அவர் தந்தையின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு தலைவரானார்.அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த தம் தாயாரின் பதவியையும், ஜியா-அல்-ஹக் ஆட்சிக்கு எதிராக ஜனநாயக முறையிலான எதிர்ப்பையும் ஏற்று கொண்டார்.

பிரதம மந்திரி பதவிக்கு பெனசீர் போட்டியிட்ட தொகுதி, அவரின் தந்தை முன்னர் போட்டியட்ட என்ஏ 207 என்ற அதே தொகுதியாகும்.1926ல் சிந்தில் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் மறைந்த சர்தார் வாஹித் பக்ஸ் பூட்டோ முதன்முதலில் அந்த தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தல்கள் இந்தியாவின் மத்திய சட்டமன்றத்திற்கானதாக இருந்தது.சர்தார் வாஹித் பக்ஸ் வென்றார், அவர் சிந்திலிருந்து ஒரு ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கான முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தார் என்பதோடு மட்டுமின்றி, மத்திய சட்டமன்றத்தின் 27 வயது நிரம்பிய இளம் உறுப்பினராகவும் இருந்தார்.அரசாங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பூட்டோ என்கிற வகையில் வாஹித் பக்ஸின் சாதனை நினைவுபேறுடையதாக இருந்தது, அந்த தொகுதி, அதற்கு பின்னர் அவரின் குடும்ப உறுப்பினர்களால் எப்போதும் போட்டியிடப்பட்டது. ஆகவே, அவர் ஒரு சுழற்சியின் தொடக்கத்தை அளித்தார்.சர்தார் வாஹித் பக்ஸ் பாம்பே கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.33 வயது இளமையிலேயே வாஹித் பக்ஸின் புதிரான மரணத்திற்கு பின்னர், அதே தொகுதியிலிருந்து போட்டியிட்ட அவரின் இளைய சகோதரர் நவாப் நபி பக்ஸ் பூட்டோ, ஓய்வு பெறும் வரை தோற்கடிக்க முடியாதபடிக்கு அங்கு நிலைத்திருந்தார்.இவர் தான் பின்னர் ஜூல்பிகார் அலி பூட்டோ போட்டியிட அத்தொகுதியை அளித்தார்.

1988 நவம்பர் 16ல், ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு பின்னர் நடந்த முதல் பொது தேர்தலில், பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தேசிய பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றியது.பூட்டோ டிசம்பர் 2ஆம் தேதி, 35 வயதில் இளம் நபராகவும், முதல் பெண்மணியாகவும் நவீன காலத்தில் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட அரசை தலைமையேற்று நடத்த ஒரு கூட்டணி அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக பதவியேற்றார்.1989ல், பெனாசீருக்கு லிபரல் இன்டர்நேஷனலினால் சுதந்திரத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தின் போது பூட்டோவின் தி்ட்டங்கள், தேசியவாத சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றைச் சார்ந்த முனைவுகளாக இருந்தன. இதை சில பழமைவாதிகள் மேற்கத்தியவாதம் என்று பாத்திரப்படுத்தினர்.அவர் ஒருபோதும் முயற்சி செய்திராத ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து 1990ல் பூட்டோ அரசாங்கம் நீக்கப்பட்டது.1990 அக்டோபர் தேர்தல்களுக்கு பின்னர் ஜியா ஆதரவிலான நவாஜ் ஷெரீப் அதிகாரத்திற்கு வந்தார்.நவாஜ் பிரதம மந்திரியாக பதவி வகித்த அதற்கடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, பூட்டோ எதிர்கட்சி தலைவராக இருந்தார்.

1993 அக்டோபரில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட்டன, அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் பதவிக்கு வந்த பூட்டோ, அவரின் சீர்திருத்த முனைவுகளைத் தொடர்ந்தார்.பத்திரிக்கையாளர் ஷியாம் பாட்டியாவின் கருத்துப்படி, ஓர் அரசு சுற்றுப்பயணத்தின் போது யுரேனியம் செறிவூட்டல் குறித்த தகவல்கள் கொண்ட சிடியை வடகொரியாவிற்கு பெனசீர் கடத்தினார், அதே ஆண்டு அதற்கு பதிலாக ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பெற்றார்.[18] 1996ல், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு இடையில், பூட்டோ அப்போதைய ஜனாதிபதி பரூக் லெஹரியினால் பதவி நீக்கப்பட்டார். ஜனாதிபதி பரூக் லெஹரி அரசாங்கத்தைக் கலைக்க எட்டாவது சட்டதிருத்த அதிகார மசோதாவைப் பயன்படுத்தினார்.6-1 சட்டத்தின்படி ஜனாதிபதி லெஹரியி்ன் பதவிநீக்கத்தை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.[19] பூட்டோவுக்கு எதிரான விமர்சனம் பஞ்சாபி மேற்தட்டுக்களில் இருந்தும், பூட்டோவை எதிர்த்த அதிகாரம் மிக்க நிலச்சுவான்தார் குடும்பங்களில் இருந்தும் வந்தது.பாகிஸ்தானின் உறுதியைக் குலைக்கும் இந்த எதிர்ப்பிற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்."வெட்கக்கேடான ஜனநாயக யுகம்" என்று பூட்டோவின் பதவி காலத்தை முஷாரப் பாத்திரப்படுத்தினார். பிறர் அவரின் பதவி காலத்தை ஒரு ஊழல் மிக்க, தோல்வியுற்ற அரசாங்கங்களின் காலம் என்று பாத்திரப்படுத்தினர்.[20]

பெண்களுக்கான கொள்கைகள்

தேர்தல் பிரச்சாரங்களின் போது, பூட்டோ அரசாங்கம் பெண்களுக்கு எதிரான பாகுபாடு பிரச்சனை உட்பட பெண்களின் சமூக மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கான அதன் கவலைகளுக்காக குரல் கொடுத்தது.பெண்கள் போலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வங்கிகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான திட்டங்களைப் பூட்டோ அறிவித்தார்.இந்த திட்டங்கள் இருந்த போதினும், பெண்களின் சுகாதார சேவைகளை அதிகரிக்க எவ்வித சட்டத்தையும் கொண்டு வரவில்லை.அவரின் தேர்தல் பிரச்சாரங்களின் போது, பாகிஸ்தானில் பெண்கள் உரிமையைக் குறைக்கும் முரண்பாடு சட்டங்களை (ஹூதூத் மற்றும் ஜீனா சட்டங்கள் போன்ற) நீக்குவதாக அவர் உறுதியளித்தார்.[21] பூட்டோ கருக்கலைப்புக்கு எதிரானவர் என்பதுடன் கருக்கலைப்புக்கு எதிராக அவர் கடுமையாக பேசினார். குறிப்பாக கெய்ரோவில் நடந்த மக்கள்தொகை மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச மாநாட்டில் பேசினார். "தமக்கென சொந்த சமூக பண்பாடுகளைக் கொண்டுள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் மதங்களின் மீது கட்டுப்பாடற்ற உடலுறவு, கருக்கலைப்பு, பாலியல் கல்வி மற்றும் இதுபோன்ற பிறவற்றை திணிக்க" மேற்கு விரும்புவதாக அவர் அந்த மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்.[22]

ஜீனா சட்டம் இறுதியாக 2006 ஜூலையில் பர்வீஜ் முஷாரப்பினால் வெளியிடப்பட்ட ஜனாதிபதி உத்தரவால் நீக்கப்பட்டது.[23]

பதவியில் இருக்கும் மற்றும் முன்னாள் பிரதம மந்திரிகள் மற்றும் ஜனாதிபதிகளின் ஒரு வலையமைப்பான உலக பெண் தலைவர்களின் கழகத்தை நிறுவிய மற்றும் அதில் செயல்பட்டு வந்த ஒரு உறுப்பினராகவும் பூட்டோ இருந்தார்.[24]

தாலிபான் கொள்கை

1996 செப்டம்பரில் தாலிபான் காபூலை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.பூட்டோ ஆட்சியின் போது தான் ஆப்கானிஸ்தானில் தாலிபான் முக்கியத்துவம் பெற்றது.[25] தாலிபான்களை ஒரு குழுவாகவும், அது ஆப்கானிஸ்தானை ஸ்திரப்படுத்தும் என்றும், அது மத்திய ஆசிய குடியரசுகளுக்கு வர்த்தக அனுமதியை வழங்கும் என்றும் அந்த காலத்தில் இருந்த பல தலைவர்களைப் போலவே அவரும் கருதினார் என்பது ஆசிரியர் ஸ்டீபன் காலின் கருத்தாகும்.[26] அமெரிக்காவைப் போன்றே, அவரின் அரசாங்கமும் தாலிபான்களுக்கு இராணுவத்தையும், நிதி உதவிகளையும் அளித்தது, அத்துடன் ஆப்கானிஸ்தானிற்குள் பாகிஸ்தான் இராணுவத்தின் சிறிய பிரிவு ஒன்றையும் கூட அனுப்பியது.

மிக சமீபத்தில், தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அவர், தாலிபான்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றம்மிக்க பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டனம் செய்தார்.[27]

ஊழல் குற்றச்சாட்டுக்கள்

பிரெஞ்சு, போலாந்து, ஸ்பெயின் மற்றும் சுவிஸ் ஆவணங்கள் பூட்டோவிற்கும், அவரின் கணவருக்கும் எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எண்ணெய் வார்த்திருக்கின்றன.அவர்கள், சுவிஸ் வங்கி மூலமாக பண மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உட்பட, பல்வேறு சட்டரீதியிலான வழக்குகளைச் சந்தித்தார்கள்.ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை என்ற போதினும், அவரின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி, அதே போன்ற ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக எட்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார். 2004ல் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், சிறையில் தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக முறையிட்டார்; அவரின் உரிமைகள் மீறப்பட்டன என்று அவரின் முறையீட்டிற்கு மனித உரிமைகள் குழுவும் ஆதரவு தெரிவித்திருந்தது.[28]

நியூயார்க் டைம்ஸின் ஒரு 1998 புலனாய்வு அறிக்கையானது,[29] வங்கி கணக்குகளின் ஒரு வலையமைப்பை கொண்ட வெளியிடப்படாத ஆவணங்களைப் பாகிஸ்தான் புலனாய்வாளர்கள் கொண்டிருக்கிறார்கள், ஆசிப் ஜர்தாரியை முக்கிய பங்குதாரராக காட்டும் அவை அனைத்தும் சுவிட்சர்லாந்தில் உள்ள குடும்ப வழக்கறிஞரிடம் உள்ளன என்று குறிப்பிட்டது.அக்கட்டுரையின்படி, பிரெஞ்சு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், ஜர்தாரியின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சுவிஸ் கார்பரேஷனுக்கு 5% கமிஷனுடன் விமானப்படையின் போர் விமானங்களை மாற்ற ஒரு பிரெஞ்சு விமான உற்பத்தியாளரான டாஸ்சால்டிற்கு ஜர்தாரி பிரத்யேக உரிமை வழங்கியதாக குறிப்பிட்டது.பாகிஸ்தானிற்குள் தங்கம் கொண்டு வர ஒரு துபாய் நிறுவனத்திற்கு பிரத்யேக உரிமம் வழங்கப்பட்டதாகவும், அதற்காக ஜர்தாரி அவரின் துபாயில் இருந்த சிட்டிபேங்க் கணக்கில் 10 மில்லியன் டாலருக்கும் மேலான தொகையைப் பெற்றதாகவும் அந்த கட்டுரை குறிப்பிட்டது.ஜர்தாரிக்கு தாம் தொகை எதுவும் அளிக்க வில்லை என்று மறுக்கும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், அந்த ஆவணங்கள் போலியானவை என்றும் முறையிடுகிறார்.

தமக்கும், தம் கணவருக்கும் எதிரான அனைத்து விதமான குற்றச்சாட்டுக்களும் துல்லியமாக அரசியல் நோக்கம் கொண்டவை என்ற வாதத்தையே பூட்டோ தக்க வைத்திருந்தார்.[30][31] பாகிஸ்தான் ஆடிட்டர் ஜெனரல் (ஏஜிபி) ஒருவரின் அறிக்கை பூட்டோவின் முறையீட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறது. 1990ல், அப்போதைய ஜனாதிபதி குலாம் இஷ்க் கானால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாயவேட்டையின் விளைவாக பூட்டோ பதவியில் இருந்து இறக்கப்பட்டதாக கூறி அது தகவல்களை அளிக்கிறது.பூட்டோ மற்றும் அவர் கணவருக்கு எதிராக 1990-92ல் 19 ஊழல் வழக்குகளைப் பதிவு செய்ய சட்ட ஆலோசகர்களுக்கு கான் 28 மில்லியன் ரூபாய் அளித்ததாக ஏஜிபி அறிக்கை கூறுகிறது.[32]

பூட்டோ மற்றும் அவர் கணவரிடம் இருந்த சொத்துக்கள் தொடர்ந்து ஆராயப்பட்டும், யூகிக்கப்பட்டு்ம் இன்னும் முடிவாகாமல் இருக்கிறது.அவர்களின் சுவிஸ் வங்கி கணக்கில் £740 மில்லியன் இருப்பதாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.[33] ஜர்தாரி ஒரு நவ-டூடர் மேன்சனையும், இங்கிலாந்தின் சுர்ரேயில் £4 மில்லியன் மதிப்பிலான எஸ்டேட்டையும் வாங்கி இருந்தார்.[34][35] பாகிஸ்தான் புலனாய்வுகள் ஜர்தாரி குடும்பத்திற்கு சொந்தமான பிற வெளிநாட்டு சொத்துக்களையும் இணைத்து கொண்டுள்ளன. ஜர்தாரியின் திருமணத்தின் போது மிதமான சொத்துக்கள் கொண்டிருந்த அவரின் பெற்றோர்களுக்கு சொந்தமான நார்மண்டேயில் உள்ள 2.5 மில்லியன் டாலர் மேனரும் இதில் உள்ளடங்கும்.[29] வெளிநாடுகளில் பிரத்யேக சொத்துக்கள் இல்லை என்று பூட்டோ மறுத்தார்.

சுவிட்சர்லாந்து

1998 ஜூலை 23ல், பெனசீர் பூட்டோ மற்றும் அவர் கணவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடைய ஆவணங்களை பாகிஸ்தான் அரசிற்கு சுவிஸ் அரசு அளித்தது.[36] ஜர்தாரிக்கு எதிராக சுவிஸ் அதிகாரிகளால் அளிக்கப்பட்ட ஓர் உத்தியோகப்பூர்வ பணமோசடி குற்றச்சாட்டுக்கள் அந்த ஆவணங்களில் உள்ளடங்கி இருந்தன. 1997ல் சுவிஸ் அதிகாரிகளால் மறைக்கப்பட்டு, பூட்டோ மற்றும் அவர் கணவரால் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 13.7 மில்லியன் டாலருக்கும் மேலான தொகைக்காக பாகிஸ்தான் அரசு ஒரு பரந்த-வகையிலான விசாரணையை நடத்தி கொண்டிருந்தது. பூட்டோவும், அவர் கணவரும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோத பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட 1.5 பில்லியன் டாலர் என்று கணிக்கிடப்பட்ட தொகையைக் கண்டறிவதற்கான ஒரு முயற்சியில் பாகிஸ்தானிய அரசு சமீபத்தில் பூட்டோவிற்கு எதிராக கிரிமினல் குற்றங்களைப் பதிவு செய்தது.[37] ஜர்தாரியினால் மோசடி செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பணம் பெனசீர் பூட்டோவாலும் அணுக கூடியதாகவே இருந்ததாகவும், அது 175,000 டாலருக்கும் அதிகமான தொகையில் வைர நெக்லஸ் வாங்க பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.[37] பாகிஸ்தான் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட தவறான ஆதாரங்களால் சுவிஸ் அதிகாரிகள் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாக கூறி, அந்த குற்றச்சாட்டுக்களை ஒரேயடியாக மறுத்ததன் மூலம் பாகிஸ்தான் மக்கள் கட்சி பிரதிபலிப்பைக் காட்டி இருந்தது.

2003 ஆகஸ்டு 6ல், பூட்டோ மற்றும் அவர் கணவர் இருவரும் பணமோசடியில் குற்றவாளிகள் என்று சுவிஸ் நீதிபதிகள் கண்டறிந்தனர். அவர்களுக்கு ஆறுமாத தற்காலிக சிறை தண்டனை விதித்ததுடன், ஒவ்வொருவருக்கும் $50,000 அபராதமும் விதித்தது. அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கு அவர்கள் $11 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.பாகிஸ்தானில் ஓர் ஒப்பந்தத்திற்கு கைமாறாக ஒரு சுவிஸ் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட 10 மில்லியன் டாலரை பூட்டோவும், ஜர்தாரியும் சுவிஸ் கணக்கில் டெபாசிட் செய்தார்கள் என்று அந்த ஆறு-ஆண்டு காலவழக்கு தீர்மானித்தது. அந்த தம்பதியினர் தாங்கள் மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்தார்கள்.1995ல் ஜெனிவாவில் ஜர்தாரி சிட்டிபேங்கில் ஒரு கணக்கு திறந்ததாகவும், பாகிஸ்தானில் தொழில் செய்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஜர்தாரி பெற்ற 100 மில்லியன் டாலரில் சுமார் 40 மில்லியன் டாலர் அந்த கணக்கு மூலம் அனுப்பப்பட்டதாகவும் பாகிஸ்தான் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.[38] 2007 அக்டோபரில், ஜெனீவா மாகாணத்தின் முதன்மை வழக்கறிஞரான டேனியல் ஜாப்பெல்லி, முன்னாள் பாகிஸ்தானிய பிரதம மந்திரி பெனசீர் புட்டோவிற்கு எதிரான பண மோசடியில் அக்டோபர் 29ல் தாம் தீர்ப்புகளைப் பெற்றதாகவும், ஆனால் சுவிட்சர்லாந்தில் மேலும் ஏதேனும் சட்ட நடவடிக்கைகள் இருக்குமா என்பது தெளிவாக இல்லை என்றும் தெரிவித்தார்.[39]

போலாந்து

போலாந்து அரசாங்கம், பூட்டோ மற்றும் அவர் கணவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 500 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது.இந்த குற்றச்சாட்டுக்கள் 1997ல், 8,000 டிராக்டர்கள் வாங்கியது தொடர்பானதாகும்.[40][41] பாகிஸ்தான் அதிகாரிகளின் கருத்துப்படி, டிராக்டர் நிறுவனத்திற்கான ஒப்பந்தத்தை ஏற்று கொள்வதற்கு கைமாறாக அந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட சட்டவிரோதமான கமிஷன்களின் விபரங்களை அந்த போலாந்து ஆவணங்கள் கொண்டிருந்தன.[42] இலஞ்சங்களில் ரூ. 103 மில்லியன் ($2 மில்லியன்) "மழுப்பப்பட்டதாக" அது குற்றஞ்சாட்டியது.[30] "ஆசீப் ஜர்தாரி மற்றும் பெனசீர் பூட்டோவினால் அவாமி டிராக்டர் திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் இருந்த இலஞ்ச முறைகேடு திட்டத்தை போலாந்திடம் இருந்து பெறப்பட்ட ஆவண ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன", என்று ஏபிபி தெரிவித்தது.பூட்டோ மற்றும் ஆசீப் ஜர்தாரி அவர்களுக்கு முன்னின்ற மனிதர்களான, 5,900 அர்சஸ் டிராக்டர்களை வினியோகிக்க சுமார் $1.969 மில்லியன் பெற்ற ஜென்ஸ் ஸ்க்லிஜெல்மில்ச் மற்றும் டார்கல் எஸ்.ஏ. -வின் டீடியர் பிளான்டின் ஆகியோரிடமிருந்து சட்டவிரோதமாக 7.15% கமிஷன் பெற்றனர்.[43]

பிரான்ஸ்

முக்கியமாக, ஆவணங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட மிக ஆதாயகரமான உடன்படிக்கை, ஒரு பிரெஞ்சு இராணுவ ஒப்பந்ததாரரான டாஸ்சால்ட் ஏவியேஷனை உள்ளடக்கி இருந்தது.1998ல், ஜர்தாரியின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சுவிட்சர்லாந்து கார்பரேஷனுக்கு ஐந்து சதவீத கமிஷனை அளிப்பதற்கு கைமாறாக விமானப்படை போர்விமானங்களை மாற்ற டாஸ்சால்டிற்கு அதிகளவிலான உரிமைகளை பூட்டோவின் கணவர் ஜர்தாரி வழங்கினார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் குறிப்பிட்டார்கள்.[44]

அந்த நேரத்தில், பிரெஞ்சு ஊழல் விதிகள் பிரெஞ்சு அதிகாரிகளின் ஊழல்களைத் தவிர்த்தது, ஆனால் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு தொகைகளை அளித்தது, அத்துடன் பிரான்சில் அந்த தொகைகளுக்கு வரிச்சலுகைகளையும் அளித்தது.எவ்வாறிருப்பினும், பிரான்சு இந்த சட்டத்தை 2000ல் மாற்றிவிட்டது.[45]

ஹெலிகாப்டர் ஊழல்

1998-1999ல், ஹெலிகாப்டர் வாங்குவது குறித்த விவகாரத்தை விசாரிக்க பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கணக்குகள் ஆணையத்தால் (பிஏசி) ஒரு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் நிலையான கூட்டுத்தொகையாக $2.168 மில்லியன் பணமோசடியையும், $1.1 மில்லியன் பொதுமக்களின் பணத்தையும் உள்ளடங்கி உள்ளது.இந்த வழக்கு முறையாகவோ அல்லது அக்கறையோடோ அணுகப்படவில்லை என்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.கேபினெட் பிரிவின் குற்றச்சாட்டின் மீது மத்திய புலனாய்வு அமைப்பின் ஸ்டேட் பேங்க் சர்க்கில் ராவல்பிண்டியில் 1998ஆம் ஆண்டின் முதன்மை புலனாய்வு அறிக்கை எண் 1 பதிவு செய்யப்பட்டது.சௌத்ரி முஹம்மது பார்ஜீஸ் தாஹிர் மற்றும் இரண்டு உறுப்பினர்களான பரீதுல்லாஹ் ஜமாலி மற்றும் ஜம்ஷயத் அலி ஷாவின் தலைமையிலான குழுவால் முழுமையான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த புலனாய்வின் போது குழுவின் சேர்மேன் பார்ஜீஸ் தாஹிர் , முன்னாள் ஜனாதிபதி பரூக் லெஹரிக்கும், முன்னாள் பிரதம மந்திரி பெனசீர் பூட்டோவிற்கும், அவர்கள் இருவருடன் மற்றவர்களுக்கும் குற்றப்பத்திரிக்கை அனுப்பினார், அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.இந்த வழக்கு பாகிஸ்தானின் உள்ளும், புறமும் பரந்தளவில் ஊடகத்தின் கவனத்தை ஈர்த்தது.ஆவணத்தில் இருந்து பெறப்பட்ட குழுவின் பரிந்துரைகள் பின்வருமாறு உள்ளன:

6.1: (1) காலாபாக்கின் மலிக் அல்லாஹ் யார் கான், (2) ஜியா பர்வீஜ் ஹூசைன் மற்றும் (3) டாக்டர் எம்.ஏ. கான் ஆகியவர்களுக்கு எதிராக முதன்மை புலனாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசுக்கு எதிரான மோசடிக்காக அவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.

6.2: இதற்காக மலிக் அல்லாஹ் யார் கான், ஜியா பர்வீஜ் ஹூசைன் மற்றும் டாக்டர் எம்.ஏ. கான் ஆகியோரிடம் இருந்து, பாகிஸ்தானில் அல்லது வெளிநாட்டில் உள்ள அவர்களின் சொத்துக்களையும், பிறவற்றையும் சேர்ப்பதன் மூலம், $2.168 மில்லியன் தொகை மீட்டெடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் அனைத்துலக போலீஸ் மூலம் இந்த பணத்தை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்பு எடுக்க வேண்டும்.இந்த மோசடியில் ஈடுபட்ட எந்த வங்கியாளரோ அல்லது வெளிநாட்டுவர்களோ கூட மத்திய புலனாய்வு அமைப்பால் உள்ளெடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

6.3: இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்த வரை பெனாசீரின் ஒப்புதலுடனோ அல்லது அவரின் வழிகாட்டலின் அடிப்படையிலோ முன்னாள் ஜனாதிபதி, பிரதம மந்திரி(அஹ்மத் சாதிக்) மூலம் மந்திரிசபையில் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதால், கருவூலத்தின் இந்த இழப்பில் பெனசீர் பூட்டோவின் பொறுப்பு தெளிவாக இருப்பதால், பிரதம மந்திரியாக அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதால் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்காக மத்திய புலனாய்வு அமைப்பு அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் மற்றும் கிரிமினல் வழக்குகளையும் தொடுக்கலாம்.

6.4: இந்த வழக்கில் பரூக் லெஹரியின் பெயர் வெளிப்படையாக இருப்பதை அவர் அறிவார் என்றாலும் கூட, அவர் ஒன்றும் அறியாதவர் போல வாதமிட முயன்றுள்ளார். இந்த வழக்கில் செயல்பட்டுள்ளவர்கள் மிக எளிதாக அதிகாரத்துவத்தில் இருந்த கேபினெட் செயலாளர், பிரதம மந்திரிக்கான முதன்மை செயலாளர் மற்றும் பிரதம மந்திரியையே கூட, ஜனாதிபதியின் பின்புலத்துடனும், உதவியுடனும் அணுக முடிந்திருப்பது கற்பனைக்கு எட்டாத வகையில் இருந்தாலும் கூட, அவருக்கு எதிராகவும் முதன்மை புலனாய்வு அறிக்கை பதிவு செய்யப்பட்டு, கிரிமினல் வழக்குகள் தொடரப்பட வேண்டும்.

6.5: பிரதம மந்திரியின் பிரத்யேக முன்னாள் செயலரான அஹ்மது சதக், ஹூமாயூன் பெயிஜ் ரசூல் மற்றும் முன்னாள் கேபினெட் செயலரான சாஹிப்ஜதா இம்தியாஜ் போன்ற மூத்த உள்துறை சேவகர்களும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் ஏற்கனவே ஓய்வுபெற்றும்/வயதாகி விட்டதாலும் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை.

இந்த வழக்கு 2000-2002ல் மீண்டும் தேசிய கணக்கியல் ஆணையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேற்கத்திய ஆசியா

பாகிஸ்தானின் நகைத்தொழில்துறையை நிலைநிறுத்திய தங்க இறக்குமதிகளின் மீது பெனசீர் அரசாங்கம் ஜர்தாரிக்கு ஒரு சுய அதிகாரம் அளித்ததற்கு பின்னர், மேற்காசியாவிலுள்ள ஒரு தங்கக்கட்டி வினியோகஸ்தர், குறைந்தபட்சம் 10 மில்லியன் டாலரை ஜர்தாரியின் கணக்கில் சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். இதுவே புலனாய்வாளர்களால் வெளியிடப்பட்டுள்ள ஒரேதவணையில் அளிக்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.இந்த பணம் துபாயிலுள்ள ஜர்தாரியின் சிட்டிபேங்க் கணக்கில் சட்டவிரோதமாக டெபாசிட் செய்யப்பட்டது.கராச்சி முதல் ஈரான் எல்லை வரை நீண்டிருக்கும் பாகிஸ்தானின் அரேபிய கடற்கரை, நீண்டகாலமாகவே தங்கம் கடத்துபவர்களின் சொர்க்கபூமியாக இருந்து வருகிறது.பூட்டோவின் இரண்டாவது பதவி காலத்தின் தொடக்கம் வரை, ஆண்டுக்கு நூறு மில்லியன் டாலர்களில் புரண்ட வர்த்தகம், நெறிப்படுத்தப்படாமல் இருந்தது. பிஸ்கட்கள் என்றழைக்கப்பட்ட தங்கத் துண்டுகளுடன், பெரிய எடையிலான கட்டிகள், பாரசீக வளைகுடாவிற்கும், பெருமளவில் பாதுகாப்பற்ற பாகிஸ்தான் கடற்கரைக்கும் இடையில் விமானங்களிலும், படகுகளிலும் கொண்டு செல்லப்பட்டன.

1993ல் பூட்டோ பிரதமமந்திரியான உடனேயே, துபாயிலுள்ள ஒரு பாகிஸ்தானிய மொத்த வர்த்தகரான அப்துல் ரஜ்ஜாக் யாகூப் ஓர் உடன்பாட்டை செய்து கொண்டார்: அதாவது, தங்கம் இறக்குமதி செய்வதற்கு பிரத்யேக உரிமை அளித்தால் அதற்கு பதிலாக வர்த்தகத்தை நெறிப்படுத்த ரஜ்ஜாக் அரசாங்கத்திற்கு உதவுவார்.1994 நவம்பரில், பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சகம் ரஜ்ஜாக்கிற்கு ஒரு கடிதம் எழுதியது. அதன்படி, குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த அங்கீகரிக்கப்பட்ட தங்க இறக்குமதியாளராக இருக்க அவருக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது.துபாயில் அவரின் அலுவலகத்தில் செய்யப்பட்ட ஒரு நேர்காணலில், பாகிஸ்தானிற்குள் $500 மில்லியன் டாலருக்கும் மேலான தங்கத்தை இறக்குமதி செய்ய அந்த உரிமத்தைப் பயன்படுத்தியதாக ரஜ்ஜாக் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் பூட்டோ மற்றும் ஜர்தாரியைச் சந்திக்க பல முறை இஸ்லாமாபாத்திற்கும் பயணித்துள்ளார். ஆனால் அதில் எவ்வித ஊழலோ அல்லது இரகசிய உடன்படிக்கைகளோ இல்லை என்று அவர் மறுத்துள்ளார்."ஜர்தாரிக்கு நான் ஒரேயொரு செண்ட் கூட அளிக்கவில்லை," என்று அவர் தெரிவித்தார்.அவர் புகழை அழிக்க விரும்பிய யாரோ, அவரின் நிறுவனத்தை டெபாசிட்டர் என்று தவறாக அடையாளப்படுத்த முயற்சிப்பதாக ரஜ்ஜாக் முறையிடுகிறார்."வங்கியில் உள்ள யாரோ என் எதிரிகளுடன் சேர்ந்து தவறான ஆவணங்களை உருவாக்க ஒத்துழைத்துள்ளனர்," என்று அவர் தெரிவித்தார்.[46][47][48][49]

1996ல் பூட்டோ பிரதம மந்திரியாக இருந்த போது, சீருடை அணிந்த போலீஸால் அவரின் சகோதரர் முர்தாஜா பூட்டோ கொல்லப்பட்டதற்கு பெனசீர் உடந்தையாக இருந்தார் என்று பூட்டோவின் உறவினரும், பிறரும் வெளிப்படையாகவே பூட்டோவைக் குற்றஞ்சாட்டினார்கள்.[50]

நாடு கடத்தப்பட்டு வாழ்ந்த 2000களின் ஆரம்ப காலங்கள்

2002ல், ஒருவரே இரண்டு முறைக்கு மேல் பிரதம மந்திரியாக பதவி வகிப்பதற்கு தடை விதி்த்து பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப் பாகிஸ்தான் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வந்தார்.இது மீண்டும் ஒருபோதும் பதவிக்கு வரமுடியாதபடி பூட்டோவைத் தகுதி இழக்கச் செய்தது. இந்த நகர்வு முன்னாள் பிரதம மந்திரிகளான பெனசீர் பூட்டோ மற்றும் நவாஜ் ஷெரீப் ஆகியோரின் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதல் என்று பரவலாக கருதப்பட்டது.2003 ஆகஸ்டு 3ல், சர்வதேச மின்ஹஜ் அல் குரானில் (கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான சர்வதேச முஸ்லீம் அமைப்பு) பூட்டோ ஓர் உறுப்பினரானார்.[51][52][53]

பெனசீர் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் மற்றும் துபாயில் தங்கியிருந்த போது, அல்ஜீமெர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் அன்னையையும், அவரின் மூன்று குழந்தைகளையும் கவனித்து கொண்டிருந்ததுடன், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவாளர்களுக்கு சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், அவர்களுடன் தொடர்புகளைத் தக்கவைக்கவும் பயணித்து கொண்டிருந்தார்.ஐந்திற்கும் மேலான ஆண்டுகளுக்கு பின்னர் 2004 டிசம்பரில் அவர் கணவருடன் அவர்கள் மீண்டும் ஒன்றுபட்டார்கள்.[54][55][56][57] 2006ல், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பெயரில், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக பூட்டோவிற்கும், அவர் கணவருக்கும் சர்வதேச போலீஸ் கைது ஆணையைப் பிறப்பித்தது.பூட்டோக்கள் அந்த ஆணையின் சட்ட அடிப்படையின் மீது கேள்வி எழுப்பி இன்டர்போலுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.[58] 2007 ஜனவரி 27ல், ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் காங்கிரஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் பேச அமெரிக்காவிற்கு அவர் அழைக்கப்பட்டார்.[59] 2007 மார்ச்சில், இங்கிலாந்தில் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியான கேள்வி நேரத்தில் பூட்டோ பேனலிஸ்டாக தோன்றினார்.அவர் பிபிசி தற்போதைய நிகழ்வுகள் பற்றிய நிகழ்ச்சியான நியூஸ்நைட் டிலும் பல முறை தோன்றியுள்ளார்.நைட்பட்டம் பெற்ற சல்மான் ருஷ்டி வெளிநாட்டு குடிமக்களின் படுகொலைக்கு அழைப்பு விடுக்கிறார் என்று குறிப்பிட்டு, அவரைக் குறித்து 2007 மே மாதத்தில் முஹ்மது இஜாஜ்-அல்-ஹக்கினால் தோற்றுவிக்கப்பட்ட கருத்துக்களை அவர் நிராகரித்தார்.[60][61][62]

2007க்குள் பாகிஸ்தானுக்கு திரும்பி வருவதற்கான தமது விருப்பத்தை பூட்டோ அறிவித்திருந்தார். 2007 இறுதியில் அல்லது 2008 தொடக்கத்தில் நடக்கவிருந்த நாட்டின் பொது தேர்தல்களில் அவரை அனுமதிக்க முடியாது என்று 2007 மே மாதம் முஷாரப்பின் அறிவிப்புகள் இருந்த போதினும், அவர் நாடு திரும்பினார். அவர் மீண்டும் பிரதம மந்திரியாக நியமிக்கப்படலாம் என்று வதந்திகள் உலாவின.[63][64][65]

பூட்டோவால் எழுதப்பட்ட ஜனாதிபதி மற்றும் அவரின் கொள்கைகள் குறித்த மிகவும் சிக்கலான ஒரு கட்டுரைக்கு பிரதிபலிப்பாக, 2007 ஜூன் 14ல் தி வால்ஸ்ட்ரீட் இதழில் வெளியான ஒரு முரண்பட்ட கடிதத்தில், ஓர் அமெரிக்க வரலாற்றாளரான ஆர்தர் ஹெர்மன், "தெற்காசியாவின் வரலாற்றில் போட்டியிட முடியாத பல தலைவர்களில் ஒருவராக" அவரை எடுத்துக்காட்டியிருந்தார். அத்துடன் அவரும், பாகிஸ்தானில் இருந்த பிற மேற்தட்டுக்களும் முஷாரப் ஒரு முஹாஜிர் , 1947 சுதந்திரத்தின் போது பாகிஸ்தானுக்கு பறந்து வந்த மில்லியன்கணக்கான இந்திய முஸ்லீம்களில் ஒருவரின் மகன், என்பதால் வெறுத்தார்கள் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்."பாகிஸ்தான் உருவாக்கத்திற்காக முன்னணியில் நின்று முஹாஜிர்கள் போராடி இருந்த போதினும், சொந்த நாட்டில் இருந்த பாகிஸ்தானியர்களில் பலர் அவர்களை விரோதமாகவே பார்க்கிறார்கள் என்பதுடன் அவர்களை மூன்றாம்-தர குடிமக்களாகத் தான் நடத்துகிறார்கள்," என்றும் ஹெர்மேன் குறிப்பிட்டார்.[66][67][68]

எவ்வாறிருப்பினும், 2007 மத்தியில், அமெரிக்கா ஓர் உடன்பாட்டிற்கு தள்ளி கொண்டிருப்பதாக தெரிந்தது. இதன்படி முஷாரப் ஜனாதிபதியாக இருப்பார், ஆனால் இராணுவ தளபதி பதவியில் இருந்து விலகிக் கொள்வார், அத்துடன் பெனசீர் அல்லது அவர் நியமனத்தில் ஒருவர் பிரதம மந்திரியாவார் என்பதாக இருந்தது.[65]

2007 ஜூலை 11ல், அசோசியேடட் பிரஸ், செம்மசூதி சம்பவத்திற்கு பின்னர் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு எழுதியது:

முன்னாள் பிரதம மந்திரியும், எதிர்கட்சி தலைவருமான பெனசீர் பூட்டோ மீண்டும் நாட்டிற்கு திரும்புவார் என்றும், ஆண்டு முடிவில் நடக்கவிருக்கும் பொது தேர்தல்களில் முஷாரப்புடன் ஒரு அதிகார-பகிர்வு உடன்படிக்கையை எட்டுவார் என்றும் பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. செம்மசூதி விவகாரத்தில் ஒரு கடுமையான நடவடிக்கை எடுத்ததற்காக பெனசீர் பூட்டோ அவரை பாராட்டினார்.

"மசூதியில் போராளிகளுடன் போர்நிறுத்தம் கிடையாது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் போர்நிறுத்தங்கள் போராளிகளைத் திடங்கொள்ளச் செய்யும்," என்று செவ்வாயன்று பிரிட்டனின் ஸ்கை தொலைக்காட்சிக்கு அவர் தெரிவித்தார்."அங்கு ஒரு பின்னடைவு இருக்கும், ஆனால் ஏதாவதொரு வேளையில் போராளிகள் தோன்றுவதை நாம் நிறுத்த வேண்டியுள்ளது."[69]

செம்மசூதி குறித்த இந்த கருத்து பாகிஸ்தானில் அச்சத்துடன் பார்க்கப்பட்டது, அறிவி்க்கப்பட்ட வகையில் நூற்றுக்கணக்கான இளம் மாணவர்கள் எரித்து கொல்லப்பட்டார்கள், மீதமிருந்தவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. மேலும் காணாமல்போன நபர்களின் பிரச்சனைகள் குறித்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதுவும், இதை தொடர்ந்து முஷாரப்பிற்கான ஆதரவும் ஃகார் போன்ற பூட்டோவின் மூத்த தோழர்கள் அவர் மீது வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கும் நிலைக்கு அவர்களை இட்டு சென்றது.

எவ்வாறிருப்பினும், பின்னால் ஏற்பட்ட முதன்மை நீதிபதியுடனான சச்சரவின் ஓர் ஆரம்ப கட்டத்தில் அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு பூட்டோ முஷாரப்பிற்கு அறிவுறுத்தினார்.அவரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதன் சிஈசி உறுப்பினரும், முதன்மை நீதிபதிக்கான முதன்மை வழக்கறிஞருமான ஆயிட்ஜாஜ் ஆஹ்சானை வெற்றிகரமாக மீண்டும் பதவியில் அமர்த்துவதில் ஒன்று கூடவில்லை.மாறாக, அவர் ஒரு விரோதியாகவும், விலக்கப்பட்டவராகவும் பார்க்கப்பட்டார்.

2002 தேர்தல்

2002 அக்டோபரில் நடைபெற்ற பொது தேர்தல்களில் தேசிய பாராளுமன்றத்தில் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி மிக அதிகளவிலான வாக்குகளையும் (28.42%), எண்பது இடங்களையும் (23.16%) பெற்றது.[70] பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (ந) (பிஎன்எல்-என்) பதினெட்டு இடங்களை மட்டுமே பெற முடிந்தது.தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர்களில் சிலர் தங்களுக்குள் ஒரு பிரிவை உருவாக்கினார்கள், பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரான மக்தூம் பைஜல் சலீஹ் ஹயத்தின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த பிரிவு பாக்கிஸ்தான் மக்கள் கட்சி- தேசபக்தர்கள் என்று அழைக்கப்பட்டது. அவர்கள் பின்னர் முஷாரப் கட்சியான பிஎம்எல்-க்யூ உடன் இணைந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கினார்கள்.

பாகிஸ்தானுக்கு திரும்புதல்

முஷாரப் அரசாங்கத்துடன் சாத்தியமான உடன்பாடு

2002 மத்தியில், ஒரேநபர் இரண்டு முறை மட்டுமே பிரதம மந்திரியாக பதவி வகிக்க கூடிய சட்டத்தை முஷாரப் கொண்டு வந்தார்.பூட்டோவும், முஷாரப்பின் மற்றொரு முக்கிய போட்டியாளரான நவாஜ் ஷெரீப்பும் ஏற்கனவே இரண்டு முறை பிரதம மந்திரியாக பதவி வகித்து இருந்தார்கள்.[71] பாராளுமன்றத்தில் முஷாரப்பின் கூட்டாளிகள், குறிப்பாக பிஎன்எல்-க்யூ, மூன்றாம் முறையாக பிரதம மந்திரி பதவி வகிப்பதை அனுமதிக்கும் மாற்றங்களைத் திரும்ப கொண்டு வரவோ அல்லது பூட்டோ அல்லது ஷெரீப்பிற்கு மட்டும் பிரத்யேகமாக அனுமதி வழங்கவோ விரும்பவில்லை.

2007 ஜூலையில், பூட்டோவின் முடக்கிவைக்கப்பட்ட நிதிகளில் சில வெளியில் அளிக்கப்பட்டன.[72] பூட்டோ தொடர்ந்து கணிசமான ஊழல் குற்றங்களை முகங்கொடுத்து வந்தார்.2007 ஆகஸ்டு 8ஆம் தேதி, கனடியன் பிராட்காஸ்டிங் கார்பரேஷனுடனான நேர்காணலில், 2008 தேர்தல்களுக்காக பாகிஸ்தானுக்கு திரும்புவது குறித்த அவரின் விருப்பத்தின் மீது அந்த பேச்சுவார்த்தை இருந்ததாக பூட்டோ அறிவித்தார். மேலும் பூட்டோவை பிரதம மந்திரியாக கொண்டு முஷாரப் ஜனாதிபதியாக இருப்பார் என்பதாக அந்த பேச்சுவார்த்தை இருந்தது.2007 ஆகஸ்டு 29ல், முஷாரப் இராணுவ தளபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பூட்டோ அறிவித்தார்.[73][74] 2007 செப்டம்பர் 1ஆம் தேதி, முஷாரப்புடன் ஓர் அதிகார-பகிர்வை அதற்கு முன்னர் அவர் எட்டி விட்டாரா இல்லையா என்ற விளக்கம் இல்லாமலேயே, பாகிஸ்தானுக்கு தாம் "வெகு விரைவில்" திரும்ப போவதாக பூட்டோ அறிவித்தார்.[75]

தங்களின் கோரிக்கையான ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் அதிகார-பகிர்வை அனுமதிக்க மறுத்ததன் மூலம் பாகிஸ்தானை நெருக்கடிக்குள் தள்ளி விட்டதாக முஷாரப்பின் கூட்டாளிகளை 2007 செப்டம்பர் 17ல் பூட்டோ குற்றஞ்சாட்டினார்.பாகிஸ்தானின் ஜனாதிபதியாக தொடர முஷாரப் தகுதி இழந்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய ஆறு மனுக்களின் (பாகிஸ்தானின் மிகப் பெரிய இஸ்லாமிய குழுவான ஜமாத்-ஈ-இஸ்லாமியின் ஒரு மனுவும் இதில் அடங்கும்) மீது உச்சநீதிமன்றத்தின் ஒன்பது உறுப்பினர்கள் குழு கலந்தாலோசித்தது.தமது கட்சி எதிர்கட்சி குழுக்களில் ஒன்றுடன், முக்கியமாக நவாஜ் ஷெரீ்ப்புடன் சேரக்கூடும் என்று பூட்டோ அறிவித்தார்.விசாரணை நடந்து வரும் வேளையில், ஜனாதிபதி வாக்கெடுப்புக்கான தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் "விருப்பமில்லாமல் " இருந்ததாக அட்டார்னி ஜெனரல் மலிக் முஹம்மது கய்யாம் குறிப்பிட்டார்.முஷாரப் ஏற்கனவே இராணுவ தளபதியாக இருப்பதால் அவர் மீண்டு்ம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பாகிஸ்தான் அரசியல் அமைப்பு இடம் தராது என்று பூட்டோ கட்சியின் பர்ஹத்துல்லாஹ் பாபர் குறிப்பிட்டார்: "ஜெனரல் முஷாரப் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தகுதி இழந்திருப்பதால், தேர்தல் ஆணையத்தின் மீது செல்வாக்கு செலுத்தி பாகிஸ்தான் அரசியல் அமைப்பை சட்டவிரோதமாகவும், விருப்பப்படியும் உடைக்க விருப்பம் கொண்டிருக்கிறார்."[76]

முஷாரப், இராணுவ படையின் முதன்மை தளபதி பதவியில் இருந்து விலகியதன் மூலம் ஒரு முழுமையான சராசரி குடிமகன் பாத்திரத்திற்கு மாற தயாரானார்.மறுதேர்தல் நடத்துவதற்கு தொடர்ந்து பிற சட்டப்பூர்வமான தடைகளையும் அவர் முகங்கொடுத்தார்.2007 அக்டோபர் 2ல், முஷாரப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, அவரின் இராணுவ பதவியை இராஜினாமா செய்தால், லெப்டினெண்ட் ஜெனரல் ஆஸ்பெக் கயானி இராணுவத்தின் முதன்மை தளபதியாக கூடும் என்ற திட்டத்துடன், ஜெனரல் முஷாரப் அக்டோபர் 8 முதல் பதவியேற்க கயானியின் பெயரை இராணுவ துணை தளபதி பதவிக்கு முன்மொழிந்தார்.இதற்கிடையில், பெனசீர் பூட்டோவிற்கு பொதுமன்னிப்பு அளித்து, அவர் மீதிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கைவிடவும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக மந்திரி ஷேக் ரஷீத் அஹ்மத் தெரிவித்தார்.சுமூகமான பரிமாற்றத்தையும், மக்களாட்சிக்கு திரும்புதலையும் வலியுறுத்திய பெனசீர், பர்வீஜ் முஷாரப் தம் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.[77] 2007 அக்டோபர் 5ல், பூட்டோவிற்கும், மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்கும் (நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதம மந்திரி நவாஜ் ஷெரீப் தவிர) அவர்களுக்கு எதிராக இருந்த ஊழல் வழக்குகள் உட்பட அனைத்து நீதிமன்ற வழக்குகளில் இருந்தும் பொதுமன்னிப்பு அளித்து, முஷாரப் தேசிய சமாதான உத்தரவில் கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு முக்கியமான ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நாளுக்கு ஒருநாள் முன்னதாக வெளிவந்தது.எதிர்கட்சியான பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎன்எல்-க்யூ இரண்டும் இந்த உடன்படிக்கையின் மீது நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன.[78] இதற்கு பதிலாக, பூட்டோவும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஜனாதிபதி தேர்தலை புறகணிக்காமல் இருக்க ஒப்புக்கொண்டனர்.[79] 2007 அக்டோபர் 6ல், ஜனாதிபதிக்கான பாராளுமன்ற தேர்தலில் முஷாரப் வெற்றி பெற்றார்.எவ்வாறிருப்பினும், முஷாரப் இராணுவ தளபதியாக இருந்து கொண்டே சட்டப்பூர்வமாக ஜனாதிபதியாகவும் இருக்க முடியுமா என்பதை முடிவு செய்யும் வரை வெற்றி பெற்றவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது.தேர்தலை புறக்கணித்த பிற எதிர்கட்சிகளுடன் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி சேரவில்லை, ஆனால் வாக்களிப்பதைத் தவிர்த்தது.[80] பின்னர், பூட்டோ ஜனாதிபதிக்கு இணையான பாதுகாப்பு வளையம் தேவை என்று கோரினார்.பூட்டோ அவரின் பாதுகாப்பிற்காக வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனங்களையும் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

திரும்புதல்

வீட்டுக்காவலின் போது, பெனசீர் பூட்டோ அவர் வீட்டிலிருந்து ஆதரவாளர்களுக்கு உரையாற்றுகிறார்

தலைமை பதவிக்கான பிரச்சாரத்திற்காக வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதன் விளைவாக பூட்டோ அவரின் சொந்த உயிருக்கு இருந்த அபாயங்களை நன்கு உணர்ந்திருந்தார்.சிஎன்என் செய்தியாளர் வோல்ப் பிலிட்ஜருடன் 2007 செப்டம்பர் 28ல் நடந்த ஒரு நேர்காணலில், அவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் முன்கூட்டியே தெரிவித்தார்.[81]

எட்டு ஆண்டுகள் துபாய் மற்றும் இலண்டனில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இருந்த பின்னர், 2008 தேசிய தேர்தல்களுக்கு தயாராவதற்காக 2007 அக்டோபர் 18ல் பூட்டோ கராச்சிக்கு திரும்பினார். [82][83][84][85]

2007 அக்டோபர் 18ல் கராச்சியில் நடந்த ஒரு பேரணியின் வழியில், பூட்டோ ஜின்னாஹ் சர்வதேச விமானநிலையத்தை விட்டு நகர்ந்த பின்னர், குறுகிய நேரத்தில் இரண்டு குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன.அவர் காயமடையவில்லை என்றாலும் அந்த குண்டுவெடிப்புகள் (பின்னர் அவை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என்று அறியப்பட்டன) 136 மக்களைக் கொன்று குவித்தது, அதில் குறைந்தபட்சம் 450 பேர் காயமடைந்தனர்.பெனாசீரின் வண்டியை விட்டு குண்டுவெடிப்பாளர்களை தூரத்தில் நிறுத்தி வைக்க ஒரு மனிதசங்கிலியை உருவாக்கி இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு காவலர்கள் குறைந்தபட்சம் 50 பேர் இதில் கொல்லப்பட்டார்கள், அத்துடன் ஆறு போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டார்கள்.பல மூத்த அதிகாரிகள் காயமடைந்தார்கள்.கராச்சி வழியாக பத்து மணி நேர அண்மையில் அணிவகுப்பு நடத்திய பின்னர், குண்டு வெடிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர், பூட்டோ அவரின் வீங்கிய பாதங்களில் இருந்து அவரின் காலணிகளைக் கழற்ற ஸ்டீல் கமாண்டு மையத்திற்குள் இறங்கி இருந்தார்.[86] அந்த சம்பவத்தில் இருந்து காயமின்றி அவர் காப்பாற்றப்பட்டார்.[87]

பாகிஸ்தானுக்கு தாம் திரும்பி இருப்பதால் தற்கொலை படைகள் குறி வைக்க கூடும் என்று பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு தாம் எச்சரிக்கை அளித்திருந்ததாகவும், ஆனால் அரசாங்கம் அதற்கேற்ப செயல்பட தவறிவிட்டதாகவும் பூட்டோ பின்னர் குறிப்பிட்டார்.அந்த தாக்குதல்களுக்காக பர்வீஜ் முஷாரப் மீது குற்றஞ்சாட்டாமல் இருப்பதில் அவர் கவனமாக இருந்தார், மாறாக இஸ்லாமிய போராளிகளின் செயல்களை முன்னெடுக்க "அரசாங்கத்திற்குள் இருக்கும் சில தனிநபர்கள் தங்களின் பதவிகளையும், தங்களின் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்துவதாக" குற்றஞ்சாட்டினார்.அவர் உயிரைப் பறிக்க நடந்த முயற்சிக்கு சற்று பின்னர், அந்த தாக்குதலை நடத்தியவர்கள் என்று தாம் சந்தேகிக்கும் நான்கு நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பூட்டோ முஷாரப்பிற்கு ஒரு கடிதம் எழுதினார். ஒரு போட்டி பிஎம்எல்-க்யூ அரசியல்வாதியும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியுமான சௌத்ரி பெர்வியாஜ் இலாஹி, இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்சின் முன்னாள் இயக்குனர் ஹமீத் குல் மற்றும் நாட்டின் மற்றொரு புலனாய்வு அமைப்பான இன்டெலிஜென்ஸ் பீரோவின் இயக்குனர் ஜெனரல் இயாஜ் ஷா ஆகியோரின் பெயர்கள் அதில் உள்ளடக்கப்பட்டது.அந்த பெயர்களில் உள்ள அனைவரும் ஜெனரல் முஷாரப்பிற்கு மிக நெருக்கமானவர்கள்.அவருக்கு எதிராக செயல்படும் அரசாங்கத்தின் குற்றஞ்சாட்டும் பிரிவுகளின், குறிப்பாக பாகிஸ்தானின் முதன்மை இராணுவ புலனாய்வு அமைப்புகளின், ஒரு நீண்டகால வரலாற்றை பூட்டோ கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர்கள் அவரின் தாராளவாத, சமயசார்பற்ற திட்டத்தை எதிர்க்கிறார்கள்.காஷ்மீரிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு ஐஎஸ்ஐ பல தசாப்தங்களாக ஆதரவளித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.[87] அவர் அவரின் வாகனத்தாலும், தற்கொலைப்படை தாக்குதலை எதிர்த்து, குண்டுவெடிப்பாளர்கள் அவருக்கு அருகில் வராமல் தடுக்க அவரைச் சுற்றி ஒரு சங்கிலியை உருவாக்கிய அவரின் ஆதரவாளர்களின் "மனித கேடயத்தாலும்" பாதுகாக்கப்பட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்களின் கருத்துப்படி, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆகும், இறந்தவர்கள் குறைந்தபட்சம் 160 நபர்கள் ஆவார்கள் (134 நபர்கள் இறந்ததாகவும், சுமார் 450 பேர் காயமடைந்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது).

ஒரு சில நாட்களுக்கு பின்னர், பூட்டோவின் வழக்கறிஞர் பரூக் எச். நாயக், அவரின் வாடிக்கையாளர் கொல்லப்படுவார் என்ற அச்சுறுத்தலுடன் ஒரு கடிதத்தைப் பெற்றார்.

2007 அவசரகால நிலையும், பிரதிபலிப்புகளும்

2007 நவம்பர் 3ல், ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மற்றும் நாட்டில் உள்ள மத தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு அவசரகால நிலையை அறிவித்தார்.துபாயில் குடும்பத்தைச் சந்திப்பதற்கான பயணத்தை வெட்டிவிட்டு பூட்டோ நாடு திரும்பினார்.விமான நிலையத்தில் கோஷங்கள் எழுப்பிய ஆதரவாளர்களுடன் அவர் வரவேற்கப்பட்டார்.பல மணி நேரம் அவரின் விமானத்திலேயே இருந்த பின்னர், அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் அவர் லாகூர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.பாகிஸ்தான் ஓர் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தது என்பதை ஒப்புக்கொண்ட போதினும், முஷாரப்பின் அவசரகால நிலை நீக்கப்பட்டால் ஒழிய, நியாயமான தேர்தல்களை நடத்துவது மிகவும் சிரமம் என்று அவர் குறிப்பிட்டார்."தீவிரவாதிகளுக்கு ஒரு சர்வாதிகாரம் தேவைப்படுகிறது, சர்வாதிகாரத்திற்கு தீவிரவாதிகள் தேவைப்படுகிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.[88][89][90]

2007 நவம்பர் 8ல், அவசரகால நிலைக்கு எதிராக ஒரு பேரணியை முன்னெடுத்து செல்வதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னர், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

அமெரி்க்காவில் உள்ள நேஷனல் பப்ளிக் ரேடியோவுடனான ஒரு தொலைபேசி நேர்காணலின்போது, "எனக்கு வீட்டிற்குள் உலாவ சுதந்திரம் உள்ளது.வீட்டிற்கு வெளியே உலாவ எனக்கு சுதந்திரம் இல்லை.அவர்கள் வீட்டிற்குள் பலத்த போலீஸ் காவலை ஏற்படுத்தி உள்ளார்கள், என் வீட்டின் நான்கு சுவர்களைச் சுற்றி ஒவ்வொரு பக்கமும் 1,000 பேர் என்ற வகையில் 4,000 போலீஸ்காரர்களின் ஒரு மிக பெரிய போலீஸ் படை உள்ளது.அவர்கள் அண்டை வீட்டுக்காரர்களின் வீட்டிலும் கூட நுழைந்திருக்கிறார்கள்.நீங்கள் எங்களுக்காக இருக்கிறீர்களா?நீங்கள் ஒசாமா பின்லேடன் போன்று உங்களுக்கு தெரியவில்லையா? என்று நான் ஒரு போலீஸ்காரரிடன் கேட்டேன்."மன்னிக்க வேண்டும் மேம், இது எங்களின் வேலை.எங்களுக்கு என்ன சொல்லப்பட்டதோ அதை நாங்கள் செய்கிறோம்." என்று அவர் தெரிவித்தார்.[91]

அதற்கடுத்த நாள், பூட்டோவின் கைது ஆணை திரும்ப பெறப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. அவர் பயணிக்கவும், பொது பேரணிகளில் தோன்றவும் சுதந்திரம் அளிக்கப்பட்டார்.எவ்வாறிருப்பினும், பிற எதிர்கட்சிகளின் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் பேச தடைவிதிக்கப்பட்டு இருந்தார்கள்.

2008 தேர்தல்களுக்கான தயாரிப்பு

2007 நவம்பர் 2ல், அல் ஜஜீரா தொலைக்காட்சிக்கு டேவிட் பிரோஸ்டுடனான நேர்காணலில் பங்கெடுத்த பூட்டோ, அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியல் பியர்லைக் கடத்தி கொன்ற ஆட்களில் ஒருவரான அஹ்மத் ஓமர் சயீத் ஷேக்கால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.பின்லேடன் இறந்துவிட்டார் என்ற அந்த கருத்து குறித்து அதற்கடுத்து பிரோஸ்ட் ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை.[92]

2007 நவம்பர் 24ல், ஜனவரி பாராளுமன்ற தேர்தல்களுக்கான வேட்பாளர் மனுவை பூட்டோ சமர்ப்பித்தார். இரண்டு நாட்களுக்கு பின்னர், எப்போதுமான இரண்டு இடங்களுக்கு லார்கானாவில் அவர் மனு தாக்கல் செய்தார்.ஏழு ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு சவூதி அரேபியாவில் இருந்த முன்னாள் பிரதம மந்திரி நவாஜ் ஷெரீப், பாகிஸ்தானுக்கு வந்தவுடன் வேட்பாளராக நிற்பதற்கு மனு தாக்கல் செய்தது போன்றே பூட்டோவும் செய்தார். [93]

2007 நவம்பர் 30ல் மீண்டும் பதவியேற்ற போது, இந்த முறை இராணுவ தலைமை பதவியைக் கைவிட்டு விட்டு ஒரு நாட்டு ஜனாதிபதியாக முஷாரப், டிசம்பர் 16ல் பாகிஸ்தானில் இருந்த அவசரகால நிலையை நீக்குவதற்கான அவரின் திட்டத்தை அறிவித்தார்.அந்த அறிவிப்பை வரவேற்ற பூட்டோ, அவர் கட்சியின் உள்நாட்டு பிரச்சனைகளைப் பட்டியலிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டார்.அவர் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, வேலைவாய்ப்பு, கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் சமத்துவம் ஆகிய ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்தும் என்று இஸ்லாமாபாத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பூட்டோ தெரிவித்தார்.[94][95]

2007 டிசம்பர் 4ல், ஜனவரி பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன்னால் நாட்டின் அவசரகால நிலையை நீ்க்குவதற்கான தமது வாக்குறுதியை முஷாரப் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும், அவ்வாறு செய்ய தவறினால் வாக்கெடுப்பு புறக்கணிக்கப்படும் என்ற அச்சுறுத்தலையும் பிரபலப்படுத்த நவாஜ் ஷெரீப்பை பூட்டோ சந்தித்தார். அவர்களின் கோரிக்கை பட்டியலை முஷாரப்பிடம் அளிக்கும் ஒரு குழுவை அமைக்க அவர்கள் வாக்குறுதி முடிவெடுத்தார்கள். இந்த கோரிக்கைகள் மீது தான் தேர்தலில் அவர்களின் பங்கேற்பதன் நிச்சயத்தன்மை இருந்தது.[96][97]

2007 டிசம்பர் 8ல், பலுசிஸ்தானின் தென்மேற்கத்திய மாகாணத்தில் உள்ள பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அலுவலகத்தை மூன்று அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மனிதர்கள் தாக்கினார்கள். அதில் பூட்டோவின் மூன்று ஆதரவாளர்கள் கொல்லப்பட்டார்கள்.[98]

படுகொலை

2007 டிசம்பர் 27ல் (பாக்சிங் நாளுக்கு அடுத்த நாள், 2004 இந்திய பெருங்கடல் பூகம்பத்தின் மூன்றாமாண்டு நினைவுதினத்தின் போது), ஜனவரி 2008 பாராளுமன்ற தேர்தல்களுக்கான போட்டியில் கட்சி ஆதரவாளர்களுக்கு ஓர் உற்சாகமான உரையை அளித்த பின்னர், லியாகட் நேஷனல்பாக்கில் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கான ஒரு பிரச்சார பேரணிக்கு புறப்பட்ட போது பூட்டோ கொல்லப்பட்டார்.அவரின் குண்டுதுளைக்காத வாகனத்தில் ஏறிய பின்னர், அதன் மேற்கூரையின் வழியாக கூட்டத்தை நோக்கி கையசைக்க பூட்டோ ஏறி நின்றார்.அந்த நிமிடம், ஒரு துப்பாக்கி ஏந்திய மனிதன் அவரை நோக்கி சுட்டான், அதன் தொடர்ச்சியாக வாகனத்திற்கு அருகில் வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன, இதில் சுமார் 20 மக்கள் கொல்லப்பட்டார்கள்.[99] மிகவும் கடுமையாக காயப்பட்ட பூட்டோ, ராவல்பிண்டி பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.உள்ளூர் நேரம் 17:35க்கு அறுவை சிகிச்சைக்காக உள்ளே கொண்டு செல்லப்பட்ட அவர், 18:16க்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.[100][101][102]

பூட்டோவின் உடல் அவரின் சொந்த நகரமான சிந்த்தில் லார்கானா மாவட்டத்தில் உள்ள கார்ஹிகுடா பக் ஷிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்ப கல்லறையில் இடத்தில் அவர் தந்தைக்கு அருகில் எரிக்கப்பட்டார். இந்த இறுதி ஊர்வலத்தில் நூறு ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.[103][104][105]

அவர் இறப்பின் காரணத்தில் சில கருத்துவேறுபாடுகள் இருந்தன.பூட்டோவின் கணவர் ஒரு பிரேத பரிசோதனைக்கோ அல்லது அறுவை சிகிச்சை ஆய்விற்கோ உட்படுத்த அனுமதி மறுத்து விட்டார்.[106] 2007 டிசம்பர் 28ல், பாகிஸ்தான் உள்நாட்டு அமைச்சகம், "வாகனத்திற்குள் குனிய முயன்ற போது, பூட்டோ கொல்லப்பட்டார், குண்டுவெடிப்பின் அதிர்வலைகள் மேற்கூரையில் இணைந்திருந்த ஒரு லீவரை அவர் தலை மேல் விழச்செய்தது, இதனால் அவர் மூளைஓடு உடைந்தது." என்று அறிவித்தது.[107] எவ்வாறிருப்பினும், அவர் தலையில் உலோகத்துண்டு காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அதுவே அவர் மரணத்திற்கான காரணம் என்றும் ஒரு மருத்துவமனை செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.[108][109] பூட்டோவின் உதவியாளர்களும் உள்துறை அமைச்சகத்தின் கருத்தையே வழிமொழிந்தார்கள்.[110] டிசம்பர் 31ல், சந்தேகத்திற்குரிய அவசர சிகிச்சை அறை நுழைவு அறிக்கையை சிஎன்என் ஒரு பிடிஎப் கோப்பாக வெளியிட்டது.சிகிச்சைக்கு சேர்த்த அனைத்து மருத்துவர்களாலும் கையெழுத்திடப்பட்டிருந்த அந்த ஆவணம், காயத்திற்குள் எந்த பொருளும் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடுகிறது.[111]

அல்-கொய்தா கமாண்டர் [[முஸ்தபா அபு அல்- யாஜித்|முஸ்தபா அபு அல்-யாஜித்]], பூட்டோவை "ஒரு மிக மதிப்புமிக்க அமெரிக்க சொத்தாக" எடுத்துரைத்து, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்தார்.[112] இந்த படுகொலைக்கு பின்னால் அல்-கொய்தா இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கமும் அறிவித்தது.சிஎன்என் அறிக்கை குறிப்பிட்டதாவது: "தற்கொலைப்படை குண்டுவெடிப்பாளர், நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதாக அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு போராளி குழுவான லஸ்கர் ஐ ஜஹான்ங்வியைச் சேர்ந்தவர் என்று முன்னதாக உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அறிவித்தது".[113] இந்த படுகொலைக்கு பின்னால் பெய்துல்லாஹ் மெஹ்சூத்தின் மூளை இருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது.[114] 54 வயதான பெனாசீரையும், அவருக்கருகில் இருந்த சுமார் 20 பார்வையாளர்களையும் கொல்வதில், 1999ல் முன்னாள் பிரதம மந்திரி நவாஜ் ஷெரீப்பைக் கொல்ல முயன்ற, அல்-கொய்தாவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வஹாபி முஸ்லீம் தீவிரவாத அமைப்பான லஸ்கர் ஐ ஜஹான்ங்வி முழு பொறுப்பாகும் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், பூட்டோ குடும்பத்தாலும், பூட்டோவால் தலைமை தாங்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியாலும், பெய்துல்லாஹ் மெஹ்சூத்தினாலும் இது கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளது.[115] 2008 ஜனவரி 3ல், பெனசீர் பூட்டோவின் படுகொலையில் பங்களிப்பளிக்கவில்லை என்றும், அவருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க தவறவில்லை என்றும் ஜனாதிபதி முஷாரப் உத்தியோகப்பூர்வமாக மறுத்தார்.[116]

பாகிஸ்தானில் எதிர்வினை

படுகொலைக்கு பின்னர், ஆரம்பத்தில் அங்கு பல கலகங்கள் தோன்றின, இதில் மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட தோராயமாக 20 நபர்கள் கொல்லப்பட்டார்கள்.சுமார் 250 கார்கள் எரிக்கப்பட்டன; கோபமும், ஆத்திரமும் கொண்டிருந்த பூட்டோவின் ஆதரவாளர்கள், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியிலிருந்து கற்களை வீசினார்கள்.[104] 2007 டிசம்பர் 29 முதல், கலகக்காரர்கள் ஒன்பது தேர்தல் அலுவலகங்களையும், 176 வங்கிகளையும், 34 எரிவாயு நிலையங்களையும், 72 இரயில் கார்களையும், 18 இரயில் நிலையங்களையும், நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் கடைகளையும் சிதைத்து விட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது.[117] போட்டி எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (ந) -இன் தலைவர் நவாஜ் ஷெரீப், "இது அவர் கட்சிக்கும், நம் கட்சிக்கும் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஏற்பட்டிருக்கும் சோகம்" என்று குறிப்பிட்டார்.[118] ஜனாதிபதி முஷாரப் மூன்று நாட்களைத் துக்க நாளாக அறிவித்தார்.

2007 டிசம்பர் 30ல், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களின் ஒரு கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டப்பட்ட ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில், 19 வயது நிரம்பிய பெனாசீரின் மகன் பிலாவல் அவர் அன்னை வகித்த கட்சியின் தலைமை பதவியை வகிப்பார் என்றும், அவர் மகன் ஆக்ஸ்போர்டு கிறிஸ்ட் சர்ச்சில் அவர் படிப்புகளை முடிக்கும் வரை கட்சியை அவர் தந்தை நடத்துவார் என்றும் மனைவியை இழந்திருந்த பெனாசீரின் கணவர் ஆசீப் அலி ஜர்தாரியும், மகன் பிலாவல் பூட்டோ ஜர்தாரியும் அறிவித்தார்கள். "நான் திரும்பும் போது, என் அன்னை விரும்பியவாறே கட்சியின் தலைமை ஏற்று நடத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்." என்று பிலாவல் தெரிவித்தார்.2008 ஜனவரி 8ல் திட்டமிடப்பட்டிருந்த பாராளுமன்ற தேர்தல்கள் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்பட பாகிஸ்தான் மக்கள் கட்சி அழைப்பு விடுத்தது, மேலும் துணை தலைவர் மக்தூம் அமீன் பாஹிம் கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளராக இருக்க கூடும் என்று ஆசீப் அலி ஜர்தாரி அறிவித்தார். (பாராளுமன்ற தேர்தலில் நிற்க பிலாவல் சட்டரீதியாக வயது பூர்த்தி அடையாமல் இருந்தார்.)[119]

பெனாசீரின் படுகொலை குறித்து விசாரணை நடத்துவதில் இங்கிலாந்து அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் உதவ வேண்டும் என்று டிசம்பர் 30ல், பூட்டோவின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) கேட்டுக் கொண்டது.[120] பிலாவல் பூட்டோ ஜர்தாரி மறைந்த எதிர்கட்சியாக இருந்த அவர் அன்னையின் பாகிஸ்தான் அரசியல் கட்சியின் சேர்மேனாக நியமிக்கப்பட்டார். பிலாவல் 19 வயது மட்டும் நிரம்பி இருந்தார்.[121] பாகிஸ்தான் திரும்புவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதாவது அவர் கொல்லப்படுவதற்கு வெறும் 12 வாரங்களுக்கு முன்னர், பெனசீர் எழுதிய திருமதி. பூட்டோவின் அரசியல் என்பதை பாகிஸ்தான் மக்கள் கட்சி 2008 பிப்ரவரி 5ல் வெளியிட்டது. கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் கணவர் ஆசீப் அலி ஜர்தாரி கட்சியின் தலைவராக இருப்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்வதேச எதிர்வினை

பூட்டோவின் படுகொலைக்கு சர்வதேச எதிர்வினை, சர்வதேச சமூகத்திடையே மிக வலுவான கண்டனத்தைக் கொண்டிருந்தது.ஓர் அவசர கூட்டத்தைக் கூட்டிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, அந்த படுகொலைக்கு ஒருமனதாக கண்டனம் தெரிவித்தது.[122] அரேபிய லீக்கின் ஜெனரல் செக்ரட்டரி அமர் மௌஸ்சா, "நாங்கள் இந்த படுகொலையையும், பயங்கரவாத நடவடிக்கையையும் வன்மையாக கண்டிக்கிறோம், அவரி்ன் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்." என்று தெரிவித்தார்.[123] இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் கூறுகையில், "திருமதி. பெனாசீரின் பூட்டோவின் கொடுமையான படுகொலையைக் கேட்டு தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும்... ஒரு பயங்கரமான வீச்சை சந்தித்திருக்கும் அவர் குடும்பத்திற்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் தம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்" அறிவித்தார்.[124] பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஜோர்டான் பிரௌன், "பெனசீர் பூட்டோ பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் பாகிஸ்தானில் ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய பயங்கரவாதிகளை அனுமதிக்க கூடாது. மேலும் இங்கோ, அங்கோ அல்லது உலகின் எங்குமே பயங்கரவாதிகள் வெற்றி பெற முடியாது என்ற நமது உறுதிப்பாட்டை இந்த கொடூரம் மேலும் பலப்படுத்துகிறது." என்று தெரிவித்தார்.[125] "பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் நடத்தப்பட்டது" என்று இந்த படுகொலையைக் கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோஸ் மேனுவல் பரோசோ, "பாகிஸ்தான் அதன் ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப அதன் பாதையில் உறுதியாக நிற்கும் என்று நம்புவதாகவும்" குறிப்பிட்டார்.[125] "கொலைகார தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான நடவடிக்கை" என்று குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ், "ஜனநாயக நிகழ்முறைக்காக தைரியமாக பெனசீர் பூட்டோ தம் வாழ்வையே அளித்தார். ஜனநாயக நிகழ்முறையை தொடர்வதன் மூலம் அவர் நினைவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று பாகிஸ்தானை அவர் ஊக்குவித்தார்.[126] "அவரின் குடும்பத்திற்கும், மற்றும் மொத்த பாகிஸ்தான் தேசத்திற்கும் புனித தந்தை அவரின் ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆன்மீக ஆசிகளைத் தெரிவிக்கிறார்." என்று கூறி, வாடிகன் வெளியுறவுத்துறை செயலாளர் டார்சியோ பெர்டோன், போப் பெனிடெக்ட் XVI -இன் வருத்தத்தை தெரிவித்தார்.[125] "பாகிஸ்தானின் எதிர்கட்சி தலைவர் பெனாசீர் பூட்டோவின் படுகொலையால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது" என்றும், "இந்த பயங்கரவாத தாக்குதலை சீனா பலமாக கண்டிக்கிறது" என்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குன் கேங்க் தெரிவித்தார். [127][128][129]

ஸ்காட்லாந்து படை புலனாய்வு

அந்த படுகொலை குறித்து விசாரிக்க பிரிட்டிஷ் புலனாய்வாளர்களைப் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.குற்ற சம்பவங்கள் நீண்டிருப்பதாலும், ஆசீப் ஜர்தாரி பிரேத பரிசோதனைக்கு மறுக்கும் காரணத்தாலும் புலனாய்வில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கான தடைகளை வெளியிட்டிருந்த போதினும், 2008 பிப்ரவரி 8ல், வெடிகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து மேற்கூரையில் இருந்த பிடியால் ஏற்பட்ட விளைவால் பெனசீர் பூட்டோ கொல்லப்பட்டதாக அவர்கள் அறிவித்தார்கள்.

பெனசீர் வாழ்க்கை பற்றிய திரைப்படம்

கராச்சி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ் விஷன் மற்றும் லீசெஸ்டர் அடிப்படையிலான சன் பிலீம்ஸ் முறையே ஜெயத் ஆஜீஜ் மற்றும் ஹென்னா ராய்யால் இணைந்து தயாரிக்கப்படும் ஒரு திரைப்படத்தில் பெனசீர் பூட்டோ கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென் நடிப்பார் என்று கூறப்பட்டது.உறுதியாக கூறப்படாத வகையில், "பெனசீர் பூட்டோ: தி மோவி" என்று தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படம், பூட்டோ மாணவியாகவும், நாடு கடத்தப்பட்ட நிலையில் ஓர் அரசியல் தலைவராகவும் பல ஆண்டுகள் செலவிட்டிருந்த பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் துபாயின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட இருந்தது.இந்த பெரிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பது குறித்து சுஸ்மிதா சென்னிடம் கேட்கப்பட்ட போது, "ஆம், நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்." என்று உற்சாகமாக தெரிவித்தார்.[130]

வடகொரியாவிற்கு அணுசக்தி இரகசியங்களை அளித்தது குறித்தான குற்றச்சாட்டு

ஓர் இந்திய பத்திரிக்கையாளரான ஷியாம் பாட்டியா, அவரி்ன் குட்பை ஷெஹ்ஜாதி புத்தகத்தில், மேம்பட்ட தாக்குதல் ஏவுகணைகள் பற்றிய தகவல்களுக்கு மாற்றாக வடகொரியாவிற்கு யூரேனியம் செறிவூட்டும் தகவல்களை இரகசியமாக பதிவிறக்கம் செய்தார் என்று குற்றஞ்சாட்டினார். பூட்டோ, அவர் உயிர் வாழும் போது இந்த கதையை வெளியிட வேண்டாம் என்று தம்மை கேட்டுக் கொண்டதாக பாட்டியா பூட்டோவைக் குற்றஞ்சாட்டுகிறார்.இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்டு இன்டர்நேஷனல் செக்யூரிட்டியின் அணுசக்தி வல்லுனர் டேவிட் ஆல்பிரைட் கூறுகையில், வடகொரியாவின் அணுசக்தி அபிவிருத்திக்கு கால அவகாசம் அளிப்பதில் இந்த குற்றச்சாட்டுக்கள், "முக்கிய பங்கு வகித்தன" என்று கூறினார்.உலக அமைதிக்கான கார்னிக் எண்டோவ்மெண்ட்டின் ஜார்ஜ் பெர்கோவிச், பாட்டியாவை ஒரு "மென்மையான மற்றும் சீரியஸான நபராக" குறிப்பிட்டார்.சென்டர் ஃபார் இன்டர்நேஷனல் பாலிசியின் செலிங் ஹேரீசன், பாட்டியாவை "பூட்டோ விஷயத்தில் நம்பிக்கைக்குரியவர்" என்று குறிப்பிட்டார். இந்த முறையீடுகளை வாஷிங்டனில் டி.சி. -இல் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மறுத்தது, வடகொரியாவிற்கு இரகசியங்களைக் கசிய விட்டதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் கதார் கான் தான் இதற்கான மூலநபர் என்று கூறி, அமெரிக்க அதிகாரிகள் அவற்றை புறக்கணித்தார்கள்.(பாட்டியாவின் புத்தகத்திற்கு முன்னதாகவே அவர்களின் மறுப்பு இருந்தது.)[131]

பாராட்டுக்கள்

பெனாசீரின் பிறந்தநாளன்று, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு பூட்டோவின் பெயரைச் சூட்டியதன் மூலம் பாகிஸ்தான் அரசு அவரை கௌரவித்தது.பூட்டோவிற்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரின் பிறந்தநாளில் மரண தண்டனை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஓர் உறுப்பினரான பிரதம மந்திரி யூசப் ரஜா கிலானி ஜனாதிபதி முஷாரப்பைக் கேட்டுக் கொண்டார்.[132]

பெனசீர் பூட்டோவின் புத்தகங்கள்

  • பெனசீர் பூட்டோ, (1983), பாகிஸ்தான்: தி கேதரிங் ஸ்டோர்ம் , விகாஸ் பப்ளிகேஷன் ஹவுஸ், ஐஎஸ்பிஎன் 0706924959
  • Benazir Bhutto (1989). Daughter of the East. Hamish Hamilton. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-241-12398-4.

டாட்டர் ஆப் தி ஈஸ்ட் புத்தகமும் பின்வருமாறு வெளியிடப்பட்டது:

பூட்டோ மரணத்தின் போது, சமரசம்: இஸ்லாமும், ஜனநாயகமும், மேற்கும் என்று அழைக்கப்பட இருந்த அவரின் மூன்றாம் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி, ஹார்பர்கொல்லின்சால் பெறப்பட்டது. மார்க் ஷேகெலினால் எழுதப்பட்ட இந்த புத்தகம் பிப்ரவரி 2008ல் பிரசுரிக்கப்பட்டது.[133]

ஆதாரங்கள்

  1. Interview with Vali Nasr
  2. End in sight for a dynasty steeped in power, death and politics
  3. http://www.indianexpress.com/news/muslim-law-doesnt-apply-to-jinnah-says-daughter/372877/
  4. Vali Nasr The Shia Revival: How Conflicts Within Islam Will Shape the Future (W. W. Norton, 2006), pp. 88-90 ISBN 0-393-32968-2
  5. முஹம்மது நஜீப், ஹசன் ஜாய்தி, சௌரப் சுக்லா மற்றும் எஸ். பிரசன்னராஜன் ஆகியோரால் எழுதப்பட்ட "பெனசீர் பூட்டோ:டாட்டர் ஆப் டிராஜிடி", இந்தியா டுடே , ஜனவரி 7, 2008
  6. "Benazir Bhutto's Biography".
  7. "Pakistan Times! » Blog Archive » Biography of PPP Chairperson Benazir Bhutto".
  8. http://www.un.org/apps/news/story.asp?NewsID=29090&Cr=human+rights&Cr1=prize
  9. "Story of Pakistan — Benazir Bhutto" (2003-06-01).
  10. "Bookrags Encyclopedia of World Biography entry".
  11. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா என்ட்ரி மூலம் about.com
  12. ஹார்வர்டில் ஒன்றாக படித்தவர்கள் ஒரு கூச்ச சுபாவமுள்ள பெண் பின்கியை நினைவுகூர்கிறார்கள், டிசம்பர் 28, 2007
  13. "honorary degree recipients".
  14. "WIC Biography - Benazir Bhutto".
  15. "Note at St. Catherine's web site".
  16. ஜான் எப். பர்ன்ஸினால் எழுதப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார், நியூயார்க் டைம்ஸ் , 5 நவம்பர் 1996,
  17. பாகிஸ்தான் பூட்டோவின் விதவை மகளை விடுவிக்கிறது, நியூயார்க் டைம்ஸ் , 29 மே 1979
  18. Kessler, Glenn (2008-06-01). "Bhutto Dealt Nuclear Secrets to N. Korea, Book Says". Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/story/2008/06/01/ST2008060100007.html. பார்த்த நாள்: 2008-06-01.
  19. "Pakistan Supreme Court Upholds Benazir Bhutto's Dismissal on the basis of Corruption and Extra-Judicial Killings of MQM Workers and Supporters".
  20. பல பாகிஸ்தானியர்கள் நீண்ட காலம் செல்வாக்கு பெற்றிருப்பதாக தலைவர்களைப் பார்க்கிறார்கள், ஜனவரி 14, 2008
  21. "Women in Pakistan: Disadvantaged and denied their civil rights". Amnesty International (1995-12-06). பார்த்த நாள் 2008-08-04.
  22. டர்னர், பிரைன் எஸ். (2003) இஸ்லாம்: சமூகவியலில் உள்ள சிக்கலான பிரச்சனைகள் (பக். 118)ரோவ்ட்லெட்ஜ்
  23. "Pakistan ends zina". The Hindu Business Line. 2007-02-23. http://www.thehindubusinessline.com/life/2007/02/23/stories/2007022300150400.htm. பார்த்த நாள்: 2008-08-04.
  24. "Council Members". Council of Women World Leaders. பார்த்த நாள் 2008-08-04.
  25. "Bhutto's deadly legacy". மூல முகவரியிலிருந்து 2008-01-09 அன்று பரணிடப்பட்டது.
  26. எஸ். கோல், "பயங்கர யுத்தங்கள்: சிஐஏ, ஆப்கானிஸ்தான், மற்றும் பின்லேடனின் இரகசிய வரலாறு, சோவியத் தலையீடு முதல் செப்டம்பர் 10, 2001 வரை" , பென்குவின் பிரஸ் எச்சி, அமெரிக்கா 2004
  27. "Bhutto blames Taliban, al-Qaida for explosions". msnbc.com. 2007-10-19. http://www.msnbc.msn.com/id/21374344/. பார்த்த நாள்: 2008-09-13.
  28. "C'wealth apprised of Asif's 'illegal' detention - Dawn Pakistan".
  29. தி நியூயார்க் டைம்சில் 1998-01-09ல் ஜான் எப். பர்ன்ஸ் எழுதிய பூட்டோ பரம்பரை பாகிஸ்தானில் ஊழல் வழக்கை விட்டு செல்கிறது
  30. பூட்டோ கணவரின் முறையீடுகள் 11 மே 1999
  31. உலக செய்தி குறிப்பிடுவதாவது; பூட்டோவின் சிறையிலிருந்த கணவர் செனட்டராக பதவியேற்றார் 30 டிசம்பர் 1997
  32. "The Bhutto saga takes a new turn".
  33. ஊழல் பொதுமன்னிப்பு பூட்டோவிற்கு மில்லியன்களை அளிக்க கூடும், தி சன்டே டைம்ஸ், 2007-10-14
  34. 4 மில்லியன் பவுண்டு இங்கிலாந்து எஸ்டேட்டை ஆசிப் ஜர்தாரி முறையிடுகிறார், தி டைம்ஸ் ஆப் இந்தியா, 2004-08-22
  35. பூட்டோவின் 'ஊழல்' வரிசையில் 4 மில்லியன் பவுண்டு சுர்ரே மேன்சன், தி சண்டே டைம்ஸ், 2004-11-21
  36. தெற்காசிய பூட்டோ ஊழல் ஆவணங்கள் பாகிஸ்தானை வந்தடைந்தன, வியாழக்கிழமை, 23 ஜூலை 1998
  37. பாகிஸ்தானில் பண மோசடியில் ஈடுபட்டமைக்காக சுவிட்சுக்கு பூட்டோ தேவைப்பட்டார், 20 ஆகஸ்டு 1998, வியாழக்கிழமை, எழுதியவர் எலிசபெத் ஓலிசன்
  38. தி பூட்டோ மில்லியன்ஸ்; ஏ பேக்ரவுண்ட் செக் ஃபார் பிரம் ஆர்ட்டினரி, 9 ஜனவரி 1998, வெள்ளி, எழுதியவர் ஜான் எப். பர்ன்ஸ் (நியூயார்க் டைம்ஸ்)
  39. பூட்டோவிற்கு எதிராக சுவிஸ் வழக்கறிஞர் வழக்கு பெறுகிறார், 29 அக்டோபர் 2007, திங்கட்கிழமை, அசோசியேடட் பிரஸ்
  40. பூட்டோ 'ஊழல்' வரிசையில் 4 மில்லியன் பவுண்ட் சுர்ரே மேன்சன் 21 நவம்பர் 2004
  41. 2 மில்லியன் டாலர் ஊழல் மீது பாகிஸ்தான் ஆவணங்களை அளித்தது போலாந்து 6 மே 1999
  42. உலகம்: பூட்டோ ஊழல் குற்றத்தில் தெற்காசியா போலாந்து தொடர்பு, வெள்ளிக்கிழமை, 7 மே 1999
  43. சுவிஸ் உத்தரவாணை பெனாசீரை குறிப்பிடுவதாக என்ஏபி கூறுகிறது: உர்சாஸ் டிராக்டர் வழக்கு 22 ஜூலை 2004
  44. "Sweet Economic-Political Deal".
  45. "Steps taken by France to implement and enforce the Convention on Combating Bribery of Foreign Public Officials in International Business Transactions".
  46. ஹவுஸ் ஆப் கிராப்ட்: டிரேசிங் தி பூட்டோ மில்லியன்ஸ் -- ஒரு சிறப்பு அறிக்கை.; பூட்டோ பரம்பர் ஊழல் வழக்குகளை விட்டு செல்கிறது ஜனவரி 9, 1998
  47. பூட்டோவும், அவரின் உயிலும்: ராவல்பிண்டி மரணம் டிசம்பர் 28, 2007
  48. தி கோல்டு கனெக்சன், நியூயார்க் டைம்ஸ், 1998
  49. பெனாசீருக்கு எதிரான இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் இங்கிலாந்திற்கு இட்டு சென்றது ஏப்ரல் 14, 1998
  50. பாத்திமா பூட்டோவால் எழுதப்பட்ட "முர்தாஜா பூட்டோவின் படுகொலை" சன்னில் இருந்து பெறப்பட்டது, டிசம்பர் 30, 2007
  51. மின்ஹஜ்-அல்-குரான் சர்வதேசம், எழுதியவர் திரு. ஜாவித் இக்பால்
  52. தாம் ஒரு குர்திஷ் என்று பெனசீர் பூட்டோ அறிவிக்கிறார் 21 ஜூலை 2003
  53. Storyofpakistan.com புரோபைல் ஜூன் 01, 2003
  54. "Asia Times - Bhutto on Al-Qaeda" (Asia Times - Bhutto on Al-Qaeda).
  55. பாகிஸ்தானிய போலீஸ் படை நிறுத்தப்பட்டது, லாகூர் மூடப்பட்டது: எதிர்கட்சி தலைவர் திரும்பியதால் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள் ஏப்ரல் 16, 2005
  56. பிபிசி செய்திகள் - ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து பூட்டோ விடுவிக்கப்பட்டார் 30 நவம்பர் 2005
  57. பூட்டோ காவியம் ஒரு புதிய திருப்பம் எடுக்கிறது ஜூலை 25, 2006
  58. "Pakistan seeks arrest of Bhutto, BBC News, 26 January 2006".
  59. பாகிஸ்தான் டைம்ஸ், பாகிஸ்தானின் முன்னாள் பிரதம மந்திரி பெனசீர் பூட்டோ ஜனாதிபதி புஷ்ஷை சந்திக்கவிருக்கிறார், by காலிடா மஜ்ஜார், ஜனவரி 25, 2007
  60. வெளிநாட்டு உறவுகள் மீதான மாநாட்டில் பூட்டோ ஆகஸ்டு 15, 2007
  61. அரசியல் தியேட்டரின் ஒரு துண்டு அக்டோபர் 19, 2007
  62. பூட்டோவுடனான டேவிட் புரோஸ்டின் நேர்காணல் 3 நவம்பர் 2007
  63. பாகிஸ்தானுக்கு திரும்பியது குறித்தும், அதிகாரத்திற்கு வரக்கூடும் என்றும் முன்னாள் தலைவர் பேசுகிறார், ஜூன் 4, 2007
  64. அதிகார பகிர்வு உடன்பாட்டிற்கு ஷெரீப் உடன்பட்டதாக பூட்டோ முறையிடுகிறார் 18 ஜூன் 2007
  65. மீண்டும் பூட்டோவிடம் திரும்புகிறதா? 28 ஜூன் 2007
  66. பாகிஸ்தான் மீது பூட்டோ புதிய ஆர்வம் பெறுகிறார், முன்னாள் பிரதம மந்திரியை அமெரிக்கா ஏற்க கூடும் -- அவரின் நாடு ஒத்துழைக்குமா? 1 ஜூலை 2007
  67. பூட்டோவும், மேற்தட்டுக்களும் முஷாரப்பை வெறுப்பது ஏன்? ஜூன் 14, 2007
  68. முஷாரப்பீன் இனப்பற்று காரணமாக பெனாசீரும், மேற்தட்டுக்களும் வெறுப்பதாக அமெரிக்க ஆசிரியர் குறிப்பிடுகிறார் ஜூன் 15, 2007
  69. மசூதி பிரச்சனை முஷாரப்பின் கைகளை வலுப்படுத்தக் கூடும் 11 ஜூன் 2007
  70. "2002 election results by ECP (Election Commission of Pakistan)".
  71. "Pakistan Court Bars Former Prime Minister From Election".
  72. "Bhutto's accounts de-frozen for deal with Musharraf: reports - India News".
  73. பூட்டோ: 'இராணுவ தளபதி பதவியில் இருந்து இறங்க முஷாரப் ஒத்துக்கொண்டார்' ஆகஸ்டு 29, 2007
  74. இராணுவ தளபதி பதவியில் இருந்து முஷாரப் விலகுவதை பெனசீர் எதிர்பார்க்கிறார் ஆகஸ்டு 29, 2007
  75. "BBC NEWS, Bhutto vows early Pakistan return".
  76. "AP: Pakistani court hears cases on Musharraf".
  77. "New York Times, Maneuvering Before Vote in Pakistan".
  78. "Musharraf signs national reconciliation ordinance".
  79. "Musharraf wins presidential vote".
  80. "BBC NEWS, Musharraf 'wins presidency vote'".
  81. வோல்ப் பிலிட்ஜர் நேர்காணல் செப்டம்பர் 28, 2007
  82. "Supporters flock to Karachi for Bhutto's return". CBC News. 2007-10-17. http://www.cbc.ca/world/story/2007/10/17/bhutto.html.
  83. "Huge crowds greet Bhutto return". BBC News. 2007-10-18. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7050274.stm. பார்த்த நாள்: 2007-10-18.
  84. எதிர்கட்சிகள் வெளிநடப்பு: பெனாசீரை அவமானப்படுத்தியதாக அரசு ஊடகம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது டிசம்பர் 15, 2005
  85. "Bhutto returns to Pakistan after 8 years" (2007-10-18).
  86. ஒரு தவறு சரிசெய்யப்பபட வேண்டும் கெயில் ஷீஹே உடன் பாகிஸ்தானில் இருந்து ஒரு நேர்காணல், மேற்கோள்: "பயங்கரவாதிகள் மிகவும் பயப்படும் வகையில் நான் இருக்கிறேன்", பாரேட் இதழில் பிரசுரமானது, ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 6 2008:
  87. "After Bombing, Bhutto Assails Officials' Ties". New York Times. 2007-10-20. http://www.nytimes.com/2007/10/20/world/asia/20Pakistan.html?pagewanted=2.
  88. பாகிஸ்தானில் அவசரநிலையை அறிவிக்கிறார் முஷாரப், மேத்யூ பென்னிங்டன், ஏபி, 3 நவம்பர் 2007
  89. "Pakistani opposition leader Bhutto returns to Karachi". PR Inside. 2007-11-03. http://www.pr-inside.com/pakistani-opposition-leader-bhutto-returns-r281794.htm. பார்த்த நாள்: 2007-11-03.
  90. "Benazir returns to Pak, faces no problem". IBN Live. 2007-11-03. http://www.ibnlive.com/news/benazir-returns-to-pak-faces-no-problem/51692-2.html. பார்த்த நாள்: 2007-11-03.
  91. ஸ்டீவ் இன்ஸ்கீப்புடன் என்பிஆர் தொலைபேசி நேர்காணல் நவம்பர் 13, 2007
  92. "So who did kill Benazir Bhutto?" (2009-06-11).
  93. "Sharif, Bhutto set aside differences" (2007-12-04).
  94. "Musharraf: State of emergency will end before elections" (2007-11-29).
  95. "Pakistan's Bhutto launches election manifesto" (2007-11-30). மூல முகவரியிலிருந்து 2008-05-16 அன்று பரணிடப்பட்டது.
  96. "Sharif, Bhutto and the ex-general" (2007-11-29). மூல முகவரியிலிருந்து 2008-02-20 அன்று பரணிடப்பட்டது.
  97. "Ultimatum Delivered: Pakistan's leading opposition leaders have united (sort of) against President Pervez Musharraf. But their impact will probably be minimal" (2007-12-04).
  98. "Gunmen kill Bhutto's supporters" (2007-12-08).
  99. "Scotland Yard: Bomb blast killed Bhutto" (2008-02-08).
  100. பூட்டோ புகைப்படக்காரர்: 'துப்பாக்கிகுண்டுகள் துளைத்து சென்றது, அவர் கீழே சாய்ந்தார்' சிஎன்என்
  101. "Benazir Bhutto 'killed in blast'". BBC News. 2007-12-27. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7161590.stm.
  102. "Benazir Bhutto assassinated" (2007-12-27).
  103. "Bhutto's body in Larkana for burial" (2007-12-28). பார்த்த நாள் 2007-12-28.
  104. "Bhutto's body flown home". CNN Asia. 2007-12-27. http://www.cnn.com/2007/WORLD/asiapcf/12/27/pakistan.friday/index.html.
  105. பாகிஸ்தானியர்கள் பூட்டோவை புதைத்தார்கள், மேலும் கொந்தளிப்பில் ஈடுபட்டார்கள் 29 டிசம்பர் 2007.
  106. பூட்டோ படுகொலை: முக்கிய கேள்விகள் 31 டிசம்பர் 2007.
  107. "Bhutto Assassination: Bhutto's Last Moments Captured on Tape". Reuters. 2007-12-28. http://www.webcastr.com/videos/news/bhuttos-last-moments-captured-on-tape.html. பார்த்த நாள்: 2007-12-29.
  108. தளத்தில் மோதி பூட்டோ மரணம் அடைந்தார் 28 டிசம்பர் 2007.
  109. பாகிஸ்தான்: மூளைஓடு உடைந்து பூட்டோ மரணம் அசோசியேட்டட் பிரஸ் பிரசுரமானது: 28 டிசம்பர் 2007. NewYorkTimes.comஆல் பதிவு செய்யப்பட்டது
  110. "Bhutto death explanation 'pack of lies'". Herald Sun. மூல முகவரியிலிருந்து 2007-12-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-28.
  111. "Bhutto's murder: Many theories, many questions". CNN. 2007-12-31. http://www.cnn.com/2007/WORLD/asiapcf/12/31/bhutto.evidence/index.html. பார்த்த நாள்: 2008-01-01.
  112. "Al-Qaida claims Bhutto assassination" (2007-12-28). பார்த்த நாள் 2007-12-28.
  113. தளத்தில் மோதி பூட்டோ மரணம் அடைந்தார் 28 டிசம்பர் 2007.
  114. "Named: the al-Qaeda chief who 'masterminded murder'" (2007-12-29). பார்த்த நாள் 2007-12-29.
  115. "Bhutto's Party Rejects Al-Qaeda Claim as Riots Spread (Update5)" (2007-12-29). பார்த்த நாள் 2007-12-29.
  116. "Musharraf Denies Allegations Of Involvement in Bhutto Killing". Wall Street Journal. 2008-01-03. http://online.wsj.com/article/SB119937413291865045.html. பார்த்த நாள்: 2008-01-03.
  117. "Mourners converge on Benazir's house ahead of meeting on poll plans". Associated Press via The Hindu. 2007-12-30. http://www.hindu.com/thehindu/holnus/000200712301554.htm. பார்த்த நாள்: 2007-12-30.
  118. Salman Masood; Carlotta Gall (2007-12-28). "Bhutto Assassination Ignites Disarray". New York Times. http://www.nytimes.com/2007/12/28/world/asia/28pakistan.html?pagewanted=2&_r=1&th&emc=th. பார்த்த நாள்: 2007-12-28.
  119. "Bhutto's son named as successor". BBC News. 2007-12-30. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7164968.stm. பார்த்த நாள்: 2007-12-31.
  120. BBC (2007-12-30). "PPP ask UK and UN for help". BBC. http://news.bbc.co.uk/1/hi/uk_politics/7165209.stm. பார்த்த நாள்: 2007-12-30.
  121. "Mohtarma Benazir Bhutto (shaheed)".
  122. "Security Council, in presidential statement, condemns 'in strongest terms' suicide attack that killed former prime minister of Pakistan". UN Department of Public Information. 2007-12-27. http://www.un.org/News/Press/docs//2007/sc9217.doc.htm. பார்த்த நாள்: 2007-12-28.
  123. "Arab League condemns Bhutto's assassination". Kuwait News Agency (KUNA). 2007-12-27. http://www.kuna.net.kw/newsagenciespublicsite/ArticleDetails.aspx?id=1870944&Language=en. பார்த்த நாள்: 2007-12-28.
  124. Roy, Nilova (2007-12-27). "India expresses shock, horror at Bhutto's assassination". Hindustan Times. Archived from the original on 2012-12-08. https://archive.is/8f6A. பார்த்த நாள்: 2007-12-27.
  125. "Reactions to Bhutto assassination". BBC. 2007-12-27. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7161660.stm. பார்த்த நாள்: 2007-12-27.
  126. "Bhutto's death heightens democracy concerns". CNN. 2007-12-27. http://www.cnn.com/2007/WORLD/asiapcf/12/27/bhutto.reaction/. பார்த்த நாள்: 2007-12-27.
  127. "Global outrage over assassination". Al-Jazeera. 2007-12-27. http://english.aljazeera.net/NR/exeres/E933FBE1-6592-4764-A41F-17762EA7ABF8.htm. பார்த்த நாள்: 2007-12-27.
  128. புகைப்படங்களில் அவர் வாழ்க்கை, பிபிசி, கடைசியாக மாற்றியமைக்கப்பட்டது: வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2007, 14:53 ஜிஎம்டி
  129. பூட்டோவின் முக்கியமான நிகழ்வு, 4 அக்டோபர் 1993, மேரி அன்னி வீவெரின் நியூயார்க்கெரில் அவரின் சுயவிபரங்கள்
  130. Punn, Goher (28 January 2009). "Sushmita Sen roped in to play Benazir Bhutto". Radio Sargam. http://www.radiosargam.com/films/archives/32433/suhsmita-sen-roped-in-to-play-benazir-bhutto.html. பார்த்த நாள்: 28 January 2009.
  131. என்டிஐ: குளோபல் செக்யூரிட்டி நியூஸ்வயர் - திங்கட்கிழமை, ஜூன் 2, 2008
  132. "Pakistan pays tribute to Bhutto". Reuters (2008-06-21). பார்த்த நாள் 2008-06-24.
  133. பூட்டோவின் புத்தகம் மகத்தானதாக இருந்தது.ஹார்பர்கொல்லின்ஸ் கையெழுத்து பிரதியை அச்சிற்கு கொண்டு முயற்சிக்கிறார் டிசம்பர் 28, 2007

பிற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.