சிந்து மாகாணம்

சிந்து (சிந்தி: سنڌ) பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இம்மாகாணத்தில் தலைநகரம் கராச்சி. பெருமளவில் சிந்தி மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். சிந்து மாகாணத்திலுள்ள மற்றொரு பெரிய நகரம் ஐதராபாத். 1947 லிருந்து 1955 வரை ஐதராபாத் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது.

சிந்து மாகாணம்

தலைநகரம்
  அமைவிடம்
கராச்சி.
  24.52°N 67.03°E / 24.52; 67.03
மக்கள் தொகை (2008)
  மக்களடர்த்தி
42,378,000 (மதிப்பிடு)
  216/km²
பரப்பளவு
140914 கிமீ²
நேர வலயம் PST (UTC+5)
மொழிகள் சிந்தி
உருது
ஆங்கிலம்
பலூச்சி
பிரிவு மாகாணம்
  மாவட்டங்கள்    23
  ஊர்கள்    160
  ஒன்றியச் சபைகள்    1094[1]
தொடக்கம்
  ஆளுனர்/ஆணையர்
  முதலமைச்சர்
  நாடாளுமன்றம்
(உறுப்பினர்கள்)
   1970-07-01
  இசுரத்துல் இபத் கான்
  சயத் காயம் அலி ஷா
  மாகாண அவை (168)
இணையத்தளம் சிந்த் அரசு

சிந்து என்ற பெயர் இம்மாகாணத்தின் நடுவில் பாயும் சிந்து ஆற்றால் வந்தது. பழங்கால ஈரானியர்கள் இம்மாகாணத்தை இந்து என அழைத்தனர். கிமு ஏழாம் நூற்றாண்டின் அசிரியர்கள் சிந்தா என்றும், பாரசீகர்கள் அப்-இ-சிந்து என்றும் கிரேக்கர்கள் சிந்தோசு பசுதூண்கள் அபாசிந்து என்றும் அரேபியர்கள் அல்-சிந்து என்றும் சீனர்கள் சிந்தோவ் என்றும் சாவாவாசிகள் சாந்திரி என்றும் அழைத்தனர்.

பிரித்தானிய இந்தியாவில்

பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்திலிருந்த சிந்து பிரதேசத்தின் பகுதிகளைக் கொண்டு 1936-இல் சிந்து மாகாணம் (1936–55) நிறுவப்பட்டது.

சிந்து மாகாண சின்னங்கள் (அதிகாரபூவமற்றது)
மாகாண விலங்கு
மாகாண பறவை
மாகாண மலர்
மாகாண மரம்
மாகாண விளையாட்டு

இதனையும் காண்க

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.