பாகான் டத்தோ

பாகான் டத்தோ (Bagan Datoh அல்லது Bagan Datuk) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தின் ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரமாகும். தெலுக் இந்தான் நகரில் இருந்து 45 கி.மீ. மேற்காக உள்ளது. பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில் இருந்து 132 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

பாகான் டத்தோ
Bagan Datoh
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
அரசு
  நாடாளுமன்ற உறுப்பினர்டத்தோ ஸ்ரீ அகமட் ஷாகிட் ஹமிடி
  சட்டமன்ற உறுப்பினர் (ருங்குப்)டத்தோ சாருல் சாமான் யஹயா
  சட்டமன்ற உறுப்பினர் (ஊத்தான் மெலிந்தாங்)கேசவன் சுப்பிரமணியம்
மக்கள்தொகை (2010)
  மொத்தம்13
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)கண்காணிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது (ஒசநே)
இணையதளம்பாகான் டத்தோ இணையப் பக்கம்

இந்த நகரின் முக்கியமான தொழில் மீன்பிடித்தல் ஆகும். தவிர, இதன் சுற்று வட்டாரங்களில் பல தென்னைத் தோட்டங்கள் உள்ளன. பாகான் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் வழியில் அந்தத் தோட்டங்களைக் காண முடியும். அதனால் இந்த பாகான் டத்தோ பகுதியை தென்னையின் சொர்க்கவாசல் என்றும் அழைப்பது உண்டு.[2]

பாகான் டத்தோ நகரின் சுற்றுப் பகுதியில் சில மீன்பிடி கிராமங்கள் பரவி இருக்கின்றன. சுங்கை தியாங், சுங்கை பூரோங், பாகான் சுங்கை தியாங், பாகான் சுங்கை பூரோங் போன்ற மீன்பிடி கிராமங்களைச் சொல்லலாம். இந்தக் கிராமங்கள் கடற்கரை அருகில் அமைந்துள்ள கிராமங்கள்.

பாகான் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் சாலையில் ஊத்தான் மெலிந்தாங், செலெக்கோ, சிம்பாங் தீகா போன்ற சிறுநகரங்களும் உள்ளன. சுங்கை டூலாங் எனும் இடத்தில் அதிகமாக பெரு இரால்கள் பிடிக்கப்படுகின்றன.

மக்கள் பிரதிநிதிகள்

மலேசிய நாடாளுமன்றம்

பேராக் மாநிலச் சட்டமன்றம்

தமிழ்ப் பள்ளிகள்

இரு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.

  • பாகான் டத்தோ தமிழ்ப்பள்ளி - SRJK (T) Bagan Datoh
  • கோலா பெர்ணாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SRJK (T) Ladang Kuala Bernam

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.