தெலுக் இந்தான்

தெலுக் இந்தான் (Teluk Intan, 安順), என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். ஹீலிர் பேராக் மாவட்டத்தின் பெரிய நகரமும், தலைப் பட்டணமும் ஆகும்.[2] இதன் மக்கள் தொகை 232,900. தெலுக் மாக் இந்தான் எனும் ஒரு பெண்மணியின் பெயரில் இருந்து தெலுக் இந்தான் எனும் பெயர் வந்தது.[3]

Teluk Intan
தெலுக் இந்தான்

சின்னம்
நாடுமலேசியா
மாநிலம்பேராக்
மாவட்டம்ஹீலிர் பேராக்
அரசு
  வகைநகராண்மைக் கழகம்
  மேயர்ஜைனல் அரிபின்
பரப்பளவு
  மொத்தம்126.9
மக்கள்தொகை (2010 [1])
  மொத்தம்232
  அடர்த்தி133
அஞ்சல் குறியீடு36000
தொலைபேசி குறியீடு05
இணையதளம்www.mpti.gov.my

1528-ஆம் ஆண்டில் இருந்து 1877-ஆம் ஆண்டு வரை பேராக் மாநில சுல்தான்கள், தெலுக் இந்தானை அரச நகரமாகப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர், கோலாகங்சார் பட்டணம் அரச நகரமாக உருவாக்கம் பெற்றது. தொடக்கக் காலங்களில் இந்த நகரம் தெலுக் மாக் இந்தான் என்றே அழைக்கப் பட்டது.

1882-ஆம் ஆண்டு, பினாங்குத் தீவின் ஆளுநராக இருந்த சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் ஹார்பர்ட் ஆன்சன் என்பவர் தெலுக் இந்தான் நகரத்திற்கு பதிய நகர வடிவத்தை வரைந்து கொடுத்தார். தெலுக் இந்தான் நகரம் புதிய தோற்றம் பெற்றது. அதன் பின்னர் அவருடைய நினைவாக அந்த நகரத்திற்கு தெலுக்கான்சன் என்று பெயர் வைக்கப் பட்டது. [4]

1982-ஆம் ஆண்டு இந்த நகரத்தின் நூறாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது. அப்போது பேராக் சுல்தான், தெலுக்கான்சன் எனும் பெயரை தெலுக் இந்தான் என்று மாற்றம் செய்தார். இந்த நகரில் ஒரு சாய்ந்த கோபுரம் இருக்கிறது. அதன் பெயர் தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரம். அது ஒரு சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. பிரித்தானிய காலனிய ஆட்சியில் இங்கு நிறைய கட்டடங்கள் கட்டப் பட்டன. அந்தப் பழைய கட்டடங்கள் இன்றும் கம்பீரமாய்க் காட்சி அளிக்கின்றன.

வரலாறு

1511-ஆம் ஆண்டு, மலாக்கா சுல்தானகத்தைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றினார்கள். அப்போது மலாக்காவை சுல்தான் முகமட் ஷா ஆட்சி செய்து வந்தார். போர்த்துகீசியர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, சுல்தான் முகமட் ஷாவின் மூத்த மகன் ராஜா முஜபர் ஷா, தெலுக் இந்தான் பகுதியில் அடைக்கலம் அடைந்தார். அந்தக் கட்டத்தில் அவருடன் வந்த குடிமக்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டனர்.

பின்னர், இங்கு ஒரு புதிய மன்னராட்சி உருவாக்கப் பட்டது. பேராக் ஆற்றின் இரு மருங்கிலும் ஒரு புதிய நகரம் உருவாக்கப் பட்டது. அதுதான் இப்போதைய தெலுக் இந்தான் நகரம் ஆகும். 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் கோலாகங்சார் அரச நகரம் ஆகும் வரையில், தெலுக் இந்தான் அரச நகரமாக விளங்கி வந்தது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.