கிந்தா மாவட்டம்
கிந்தா (Kinta District, சீனம்:近打) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் இரு மன்றங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஈப்போ மாநகர் மன்றம் (Ipoh City Council), பத்து காஜா மாவட்ட மன்றம் (Batu Gajah District Council) ஆகிய இரு நகர மன்றங்கள். ஈப்போ மாநகர் மன்றம், ஈப்போவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. பத்து காஜா மாவட்ட மன்றம், பத்து காஜா நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.
கிந்தா மாவட்டம் | |
---|---|
பேராக் மலேசியா | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() டாருல் ரிசுவான் |
தொகுதி | பத்து காஜா |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | துவான் ரசாலி பின் ஒஸ்மான் |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 8,00,100 |
மலேசியாவில் மக்கள் தொகையின் பெருக்கத்தைப் பொருத்து ஒரு மாவட்ட மன்றம், ஒரு நகர மன்றமாக உயர்வு காண முடியும்.ஒரு நகர மனறம் ஒரு மாநகர் மன்றமாக மாற்றம் காண முடியும். City Hall எனப்படும் மாநகர் மாளிகையின் மூலமாக கோலாலம்பூர், வட கூச்சிங், கோத்தா கினாபாலு ஆகிய நகரங்கள் நிர்வாகம் செய்யப் படுகின்றன. மலேசியாவின் இதர மாநகரங்கள் மாநகர் மன்றங்களினால் நிர்வாகம் செய்யப்ப்படுகின்றன.
18ஆம் நூற்றாண்டில் கிந்தா மாவட்டம் ஈய உற்பத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது. உலகத்திலேயே அதிகமான ஈயம் கிந்தா மாவட்டத்தில் தான் எடுக்கப்பட்டது.