பாகனூர்

பாகனூர் (Paganur) தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி. [4][5]

பாகனூர்
  ஊராட்சி  
பாகனூர்
இருப்பிடம்: பாகனூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°43′54″N 78°36′00″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். சிவராசு, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 1,999 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இதனை முன்பு பாவனூர் என்று அழைத்துள்ளார்கள். இந்த ஊராட்சி மூன்றுக்கு மேற்பட்ட கிராமங்களைக் கொண்டுள்ளது. தெற்கே மாத்தூரையையும் வடக்கே நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியையும் மேற்கே சத்திரப்பட்டி மற்றும் சன்னாசிப்பட்டி ஆகிய ஊர்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

ஊர்கள்

  1. மேலப்பாகனூர்
  2. தெற்குப்பாகனூர்
  3. வடக்குப்பாகனூர்
  4. நடுப்பாகனூர்

மக்கள் தொகை

2001இன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாகனூரில் 1,999 பேர் இருந்துள்ளனர்.972 ஆண்கள் மற்றும் 1027 பெண்கள் ஆவர். பாலின வீதம் 1057 ஆகும். படிப்பறிவு வீதம் 66.97 ஆகும்.

கல்வி

மூன்று துவக்கப்பள்ளிகள் உள்ளன.மேலும் பிரிஸ்ட் பல்கலைக்கழகமும் உள்ளது.

போக்குவரத்து

  • இங்குள்ள சில சாலைகள் 2004ஆம் ஆண்டு வரை மண் சாலைகளாக இருந்தன. 2004ஆம் ஆண்டு தார்ச்சாலைகளாக மாற்றப்பட்டன.
  • பேருந்து வசதியானது ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல் வருகிறது.
  • பூங்குடியில் ரயில் நிலையம் உள்ளது. பாகனூரில் இருந்து பேருந்தின் மூலம் அங்கு சென்று வரலாம்.
  • திருச்சி-திண்டுகள் ரயில் பாதையானது பாகனூர் வழியாக செல்கிறது.

அரசு அலுவலகங்கள்

  • நியாய விலைக்கடை (பழைய பாகனூர்)
  • வி.ஏ.ஒ அலுவலகம் (பழைய பாகனூர்)
  • பஞ்சாயத்து அலுவலகம் (வடக்குப்பாகனூர்)
  • தபால் அலுவலகம் (வடக்குப்பாகனூர்)

பாகனூர் ஊராட்சி மணிகண்டத்தை ஒன்றியமாக கொண்டுள்ளது.

இறை வழிப்பாட்டு தலங்கள்

மேலப்பாகனூரில் மரியம்மன் கோவில் உள்ளது. வடக்குப்பாகனூரில் இரண்டு கோவில்கள் உள்ளன. தெற்குப்பாகனூரில் சர்ச் அமைந்துள்ளது.

தொழில்கள்

இங்கு முக்கிய தொழில் விவசாயமாகும். பெரும்பாலும் கிணற்று பாசனத்தை கொண்டுள்ளது.

சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. பார்த்த நாள் 6 சனவரி 2015.
  5. "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. பார்த்த நாள் 6 சனவரி 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.