சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி

சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாநகரில் 1951ஆம் ஆண்டு பத்ம பூசண் என். இராமசாமி அய்யர் என்பவரால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற மகளிர் கல்லூரி ஆகும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாகும். இங்கு 4000க்கும் கூடுதலான பெண்களுக்கு கலை, அறிவியல் மற்றும் வணிகத் துறைகளில் 22 பட்டப்படிப்பு, 17 பட்ட மேற்படிப்பு திட்டங்களில் கல்வி பெற்று வருகின்றனர். தவிர இரண்டு பட்டமேற்படிப்பு பட்டய கல்வித்திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி
அமைவிடம்
திருச்சிராப்பள்ளி, இந்தியா, தமிழ் நாடு, 620002
தகவல்
வகைதன்னாட்சிக் கல்லூரி
குறிக்கோள்அறிவுக்கு இணையானது எதுவுமில்லை
தொடக்கம்1951
நிறுவனர்என். இராமசாமி அய்யர்
முதல்வர்முனைவர் கனகா பாசியம்
Campus size25 ஏக்கர்கள் (100,000 m2)
Accreditationஎன்.ஏ.ஏ.சி
USNWR ranking"A" தரம்
இணையம்எஸ்ஆர்சி கல்லூரி

வளாகம்

திருச்சிராப்பள்ளியின் மையப்பகுதியில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இக்கல்வி நிறுவனத்தில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய கல்வித்திட்டங்களுக்காக புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. புதிய சரசுவதி கட்டிடத்தில் பொது நூலகம் இயங்கி வருகிறது. இதில் 60,000க்கும் மேற்பட்ட நூல்கள் எண்ணிமப்படுத்தப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன. தவிர ஒவ்வொருத் துறைக்கும் தனியான துறைசார் நூலகங்கள் உள்ளன. சரசுவதி கட்டிடத்தில் மொழி ஆய்வகம் ஒன்றும் புதிய கணினி மையமும் அமைந்துள்ளன. முழுமையாக குளிரூட்டப்பெற்ற பல்லூடக வசதிகளுடன் கூடிய இரு ஆய்வரங்குகள் சிறப்பாக உள்ளன. பெரிய வழிபாட்டுக்கூடமும் இக்கலூரியின் சிறப்பம்சமாகும். இக்கல்லூரியின் வளாகத்தினுள் மூன்று கோவில்கள் உள்ளன.

வசதிகள்

  • நூலகம்
  • ஆய்வகங்கள்
  • வகுப்பறைகள்
  • இணைய வசதி
  • மாணவியர் விடுதிகள்
  • உணவகம்
  • கணினி ஆய்வகம்
  • உடற்பயிற்சிக் கூடம்
  • விளையாட்டுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.