நெடுந்தீவு தேசிய வனம்

நெடுந்தீவு தேசிய வனம் (Delft National Park) என்பது நெடுந்தீவுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தேசிய வனம் ஆகும். இது யாழ்ப்பாணம் தென் மேற்கிலிருந்து கிட்டத்தட்ட 35 km (22 mi) தூரத்தில் அமைந்துள்ளது.

நெடுந்தீவு தேசிய வனம்
காட்டுக் குதிரைகள்
நெடுந்தீவு தேசிய வனம்
வட மாகாணத்தில் அமைவிடம்
அமைவிடம்வட மாகாணம்
கிட்டிய நகரம்யாழ்ப்பாணம்
ஆள்கூறுகள்09°29′50″N 79°42′00″E
பரப்பளவு18 km2 (7 sq mi)
நிறுவப்பட்டது22 சூன் 2015 (2015-06-22)
நிருவாகிDepartment of Wildlife Conservation (Sri Lanka)

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் என்பவற்றின் உதவியோடு அரசாங்கம் வட மாகாணத்தில் ஓர் ஒருங்கிணைந்த தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீட்டைச் செய்து 2014 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன்படி நெடுந்தீவில் 1,846 ha (4,562 ஏக்கர்கள்) பரப்பளவு தேசிய வனமாக உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.[1][2] மே 2015 இல் அரசாங்கம் ஆதாம் பாலம் கடல்சார் தேசிய வனம், சுண்டிக்குளம் தேசிய வனம், மடு வீதி தேசிய வனம் என்பவற்றுடன் இதனையும் தேசிய வனமாக இருக்க வேண்டும் என்று அறிவித்தது.[3] நெடுந்தீவு 22 சூன் 2015 அன்று 1,846 ha (4,562 ஏக்கர்கள்) பரப்பளவுடன் தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது.[4][5]

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.