சுண்டிக்குளம் தேசிய வனம்

சுண்டிக்குளம் தேசிய வனம் (Chundikkulam National Park) வட இலங்கையில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இது கிளிநொச்சியின் வடகிழக்கில் ஏறக்குறைய 12 km (7 mi) தூரத்தில் அமைந்துள்ளது.

சுண்டிக்குளம் தேசிய வனம்
சுண்டிக்குளம் தேசிய பூங்கா
சுண்டிக்குளம் தேசிய வனம்
வட மாகாணத்திலி அமைவு
அமைவிடம்வட மாகாணம்
கிட்டிய நகரம்கிளிநொச்சி
பரப்பளவு196 km2 (76 sq mi)
நிறுவப்பட்டது25 பெப்ரவரி 1938 (1938-02-25) (சரணாலயம்)
22 சூன் 2015 (2015-06-22) (தேசிய வனம்)
நிருவாகிவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்

சுண்டிக்குளம் கடல் நீரேரியும் அதனைச் சுற்றிலும் காணப்ட்ட இடங்களும் பறவை வனவிலங்குகள் காப்பகம் என 25 பெப்ருவரி 1938 அன்று Fauna and Flora Protection Ordinance (No. 2) of 1937 சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.[1]

மே 2015 இல் அரசாங்கம் சுண்டிக்குளத்துடன், ஆதாம் பாலம், நெடுந்தீவு, மடு வீதி ஆகியவற்றை தேசிய வனங்களாக்கவிருப்பதாக அறிவித்தது.[2] சுண்டிக்குளம் வனவிலங்குகள் காப்பகம் தேசிய வனமாக 22 சூன் 2015 அன்று அதன் 19,565 ha (48,347 ஏக்கர்கள்) பரப்புடன் அறிவிக்கப்பட்டது.[3][4]

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.