கல்லோயா தேசிய வனம்

கல்லோயா தேசிய வனம் (Gal Oya National Park) 1954 இல் சேனநாயக்கா சமுத்திரத்தின் பிரதான நீர் தோக்கப் பகுதியாக உருவாக்கப்பட்டது. சேனநாயக்கா சமுத்திரம் கல்லோயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இக்கினியாகலையில் 1950 இல் ஏற்படுத்தப்பட்டது. கல்லோயா தேசிய வனத்தில் முக்கிய விடயமாக யானைக் கூட்டத்தைக் குறிப்பிடலாம். மூன்று முக்கிய ஆயுர்வேத மருத்துவ மூலிகைகளாக கடுக்காய், தான்றி, நெல்லி என்பவற்றுடன் ஏனைய தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன. 1954 முதல் 1965 வரை கல்லோயா அபிவிருத்தி சபையால் இவ்வனம் நிறுவகிக்கப்பட்டது. பின்பு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டது. தேசிய வனம் கொழும்பிலிருந்து 314 கிமி தூரத்தில் அமைந்துள்ளது.[1]

கல்லோயா தேசிய வனம்
சேனநாயக்கா சமுத்திரத்திற்கு அருகில் கல்லோயா தேசிய வனம்
சேனநாயக்கா சமுத்திரத்தின்
அமைவிடம்ஊவா, கிழக்கு மாகாணங்கள், இலங்கை
கிட்டிய நகரம்அம்பாறை
ஆள்கூறுகள்7°13′00″N 81°22′00″E
பரப்பளவு25,900 ha
நிறுவப்பட்டதுபெப்ருவரி 12, 1954
நிருவாக அமைப்புவனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம்

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "Gal Oya National Park". info.lk. பார்த்த நாள் 2009-07-20.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.