தொண்டீசுவரம்

தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம்) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். இக்கோயில் போத்துக்கீசர் ஆட்சியின் போது போத்துக்கீசரால் உடைக்கப்பட்டு (Souza d'Arronches) கத்தோலிக்க கிறித்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அறியமுடிகிறது.

தொண்டீசுவரம்
தொண்டீசுவரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்:5°55′21″N 80°35′22″E
பெயர்
பெயர்:தேனாவரம் தேவந்துறை கோயில் (தேவன் துறை தென்னாவரம் கோயில்)
தமிழ்:தொண்டீஸ்வரம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:தெற்கு
மாவட்டம்:மாத்தறை மாவட்டம்
அமைவு:தேவேந்திர முனை, மாத்தறை
கோயில் தகவல்கள்
மூலவர்:தேனாவரை நாயனார் (விஷ்ணு), மற்றும் சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:5
வரலாறு
கட்டப்பட்ட நாள்:தெரியவில்லை; கிபி 8ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.

வரலாறு

பஞ்சஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) என்று குறிப்பிடப்படும் ஐந்து சிவாலயங்களில் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த தொண்டீஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் வெளியில் வெளிவராமல் தடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளரான முருகர் குணசிங்கம் அவர்கள் கூறுகின்றார்.

தற்போது

தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்" என இது அழைக்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.

மேற்கோள்கள்

    • ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்

    வெளி இணைப்புக்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.