கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம்

தான்தோன்றீச்சரம் (தான்தோன்றீஸ்வரம்) இலங்கையின் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தான்தோன்றீச்சரங்களில் இது ஒன்று. போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் "புல்லுண்ட கல் நந்தி" இக்கோவிலின் பெருமைகளில் ஒன்றாக விளங்குகின்றது.

தான்தோன்றீச்சரம், கொக்கட்டிச்சோலை
Front View of Temple
தான்தோன்றீச்சரம், கொக்கட்டிச்சோலை
தான்தோன்றீச்சரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்:7°37′0″N 81°43′0″E
பெயர்
பெயர்:தான்தோன்றீச்சரம், கொக்கட்டிச்சோலை
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:கிழக்கு மாகாணம்
மாவட்டம்:மட்டக்களப்பு மாவட்டம்
அமைவு:கொக்கட்டிச்சோலை
கோயில் தகவல்கள்
மூலவர்:பார்வதியம்மை உடனுறை தான்தோன்றீச்சரர்
சிறப்பு திருவிழாக்கள்:ஆவணிப் பூரணைக்கடுத்த ஞாயிறு, தேரோட்டம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:அறியப்படவில்லை; குறைந்தது 800 ஆண்டுகள்.[1]
அமைத்தவர்:உலகநாச்சி

வெள்ளையர்களால் ஈழத்தில் இந்து ஆலயங்கள் உடைத்துத் தரமட்டமாக்கப்பட்ட போது இவ் ஆலயத்தையும் விட்டு வைக்க விரும்பாத வெள்ளையர்கள் ஆலயத்தை உடைக்க வந்தார்கள். குருக்களுடன் வெள்ளையர்களுக்கு இடம்பெற்ற விவாதத்தில் இந்த கல் நந்தி புல்லுண்ணும் என்ற குருக்களின் கூற்றை நிரூபிக்க ஆலயத்தின் கல் நந்தி எழுந்து காலால் மண்ணை எற்றி தனுப்போட்டு கொடுக்கப்பட்ட புல்லை உண்டு வெள்ளையர்களை மெய்மறக்க வைத்து புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப்பெருமை இவ் ஆலயத்துக்கு உண்டு.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. வீ.சீ.கந்தையா (1983) "மட்டக்களப்பு சைவக் கோவில்கள் I, ப.23"

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.