திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில்

திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில் (கோயிற்பத்து) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 50ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பிரமவனம், முத்திவனம், திருத்தெளிச்சேரி
பெயர்:திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கோயில் பத்து
மாவட்டம்:புதுச்சேரி
மாநிலம்:புதுச்சேரி
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பார்வதீசுவரர், பார்ப்பதீசுவரர், சமீவனேசுவரர்
தாயார்:பார்வதியம்மை, சத்தியம்மை, சுயம்வரதபஸ்வினி
தல விருட்சம்:வில்வம், வன்னி
தீர்த்தம்:சூரிய புஷ்கரணி, குகத் தீர்த்தம், தவத்தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் புத்த நந்தியின் தலையில் இடி விழுந்தது என்பது தொன்நம்பிக்கை. தவம் செய்வதற்கு உகந்த இடம் எனப்படுகிறது.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் பார்வதீசுவரர்,இறைவி பார்வதியம்மை. இங்குள்ள மூலவர் லிங்கம், பிரமலிங்கம், மகாலிங்கம், ராஜலிங்கம், பாஸ்கர லிங்கம் என்று பல்வேறு திருப்பெயர்களால் அழைக்கப்படுகிறது.

அமைப்பு

ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம் பலி பீடம் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் இரு புறமும் ஓவியங்கள் காணப்படுகின்றன. கருவறைக்குச் செல்வதற்கு முன்பாக உள்ள வாயிலின் வலது புறத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், இடது புறத்தில் விநாயகரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக வலப்புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. கருவறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, நடன கணபதி ஆகியோர் உள்ளனர். கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் பைரவர் சூரியன், நவக்கிரகம், அம்பாள் பூசை வேட ரூபம், பிடாரியம்மன், கிராதமூர்த்தி அம்பாள், 63 நாயன்மார் ஆகியோர் உள்ளனர். இச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

மேற்கோள்கள்

    இவற்றையும் பார்க்க

    வெளி இணைப்புகள்

    படத்தொகுப்பு

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.